Featured post

PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE

 *PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE THEATRICAL AND DIGITAL RIGHTS OF THE MOST ANTICIPATED MALAYALAM FILM— DRIS...

Thursday, 1 August 2019

கல்லூரி மாணவிகள் மத்தியில் மாஸ் காட்டிய துருவ் விக்ரம்!!


தன் படம் வெளிவரும் முன்பே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்று வருகிறார் நடிகர் துருவ் விக்ரம்.  விக்ரமிற்கு என்று ஒரு தனி அடையாளம் உள்ளது போல் துருவ் விக்ரமிற்கும் தனி அடையாளம் உருவாகி வருகிறது. தெலுங்கில் பெரிய வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படம் தமிழில்  ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரிமேக் ஆகி வருவது அனைவரும் அறிந்த செய்தி. முழுதாக தயாரான அப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த டீசர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் துருவ் விக்ரம் சில தினங்களுக்கு முன்பு சென்னை வைஷ்ணவா மகளிர் கல்லூரிக்கு  ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். அப்போது அவரை மாணவிகள் சூழ்ந்து கொண்டனர். மாணவிகள் மத்தியில் கலகலப்பாக உரையாடிய அவர், நிகழ்ச்சியில் ஒரு பாடலும் பாடி அசத்தினார். கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற "கல்யாண வயசு தான்" என்ற பாடலை அவர் பாட மாணவிகள் கைகள் தட்டி உற்சாகப் படுத்தினார்கள். மேலும் மாணவிகள் அனைவரும் துருவ் விக்ரமோடு செல்பி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக ஆதித்ய வர்மா படத்தின் டீசர் திரையிடப்பட்டது. அவ்வேளையில் மாணவிகள் சந்தோசக் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  துருவ் விக்ரமிற்கு படம் வெளிவரும் முன்பே ஒரு ரசிகர் படை உருவாகி வருகிறது.

No comments:

Post a Comment