Featured post

Kaathu Vaakula Oru Kadhal Movie Review

Kaathu Vaakula Oru Kadhal Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kaathuvakkula oru kaadhal ன்ற படத்தோட கதையை தான் பாக்க போறோம். mass ravi த...

Thursday, 26 December 2019

விதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த

விதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த “நட்சத்திரா” பட ஃபர்ஸ்ட் லுக் ! 



தயாரிப்பாளர்களுக்கும் விநியோகதஸ்கர்களுக்கும்  லாபம் தரும் நடிகராக,  தனது வித்தியாசமான பாத்திரங்கள் மூலம்  தொடர் வெற்றி படங்களை தந்து  வருகிறார் நடிகர் விதார்த். தற்போது வெளியாகியுள்ள அவரது அடுத்த படமான “நட்சத்திரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மீடியா மத்தியிலும், இணைய உலகிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பாதுகாவலன் உடையில் மாயங்களை துப்பறியும் விதமாக விதார்த் இருக்க பின்னணியில் பெண் ஆவிகள் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது  பலத்த எதிர்பார்ப்பை தூண்டுகிறது.



படம் குறித்து இயக்குநர் மனோஜ் ராம் கூறியதாவது...
மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் “நட்சத்திரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஹாரர் கலந்து பயப்படுத்தும் அம்சமும் கொண்டிருக்கும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பற்றி படக்குழு கூறுவதை விட நேரில் திரையரங்கில் அந்த  ஆச்சர்யங்களை   ரசிகர்கள் அனுபவிப்பதே சரியானதாக இருக்கும். “நட்சத்திரா” படம் கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களுக்கு மர்மங்கள் நிறைந்த மாய அனுபவத்தை தரும்.


புதுமுக இயக்குநராக அவரது அனுபவத்தை பற்றி மனோஜ் ராம் கூறும்போது....
இதைச் சொல்வது வழக்கமான ஒன்றாக இருக்கும் ஆனால் இது தான் உண்மை. தயாரிப்பாளர்கள்  பிரேம்நாத் சிதம்பரம் மற்றும் வெள்ளை சேது CEO, Preniss International (OPC) Pvt Ltd என் மீதும் திரைக்கதை மீதும் வைத்த நம்பிக்கையால மட்டுமே இத்திரைப்படம் சாத்தியமானது. இன்று இப்படம் திட்டமிட்டபடியே மிகச்சரியான முறையில் உருவாகி வந்திருப்பதில் படக்குழு மிகுந்த மிகிழ்ச்சியில் இருக்கிறது. விதார்த்தின் அர்பணிப்பும் அவர் நடிப்பின் மீது கொண்டிருக்கும் தீவிர காதலும் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேம்களிலும் பிரதிபலிக்கிறது. அவரது கதாப்பாத்திரம் சில வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று.  படம் முடிந்த பிறகு அனைவரது மனங்களில் நீங்காத இடம் பிடிப்பதாக அவரது கதாப்பாத்திரம் இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு தேதிகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் இப்படத்தில் விதார்த் ஜோடியாக, அவரது மனைவியாக நடித்துள்ளார். செண்ட்ராயன், சந்தோஷ் பிரதாப், சங்கிலி முருகன், ஆடுகளம் நரேன், லக்‌ஷ்மி ப்ரியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்ரேம்நாத் சிதம்பரம் மற்றும் வெள்ளை சேது CEO, Preniss International (OPC) Pvt Ltd சார்பாக இப்படத்தை தயாரிக்கிறார்கள். பரத் ராகவன் இசையமைக்க, N.S.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணி குமரன் படத்தொகுப்பு செய்ய A.B.R கலை இயக்கம் செய்துள்ளார். சண்டைக்காட்சிகளை ராஜசேகர் வடிவமைத்துள்ளார்.

No comments:

Post a Comment