Featured post

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில்...

Tuesday, 24 December 2019

மாயன் FIRST LOOK

மாயன் FIRST LOOK
இசையமைப்பாளர் அனிருத் மாயன் படத்தின்  First Look  Poster-ரை வெளியிட்டார்
சிவனையும் மாயர்களையும் மையமாகக் கொண்டு பிரம்மாண்ட 
கிராபிக்ஸ் காட்சி அமைப்புகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் மாயன்.இப்படத்தை சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சன் நாம் ஒருவர் என்ற விஷால் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை இயக்கிய ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியுள்ளார் மலேஷிய நடிகர் வினோத் மோகன் இதில் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தமிழில் பிந்துமாதவியும் நடித்துள்ளனர். சிறப்பு பாடல் காட்சிக்காக பியா பஜ்பையும்  இப்படத்தில் இடம்பெற்றுள்ளார் ..மற்றும் பிரபல நடிகர்களான ஜான் விஜய் ஆடுகளம் நரேன் தெறி தீனா , ராஜ சிம்மன் , கஞ்சா கருப்பு , ஸ்ரீ ரஞ்ஜினி அகிய  அனைவரும் நடித்துள்ளனர்.



மாயனுக்காகப் பாடிய சிம்பு

இப்படத்தின் ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். அந்த Single track விரைவில் வெளிவரும் என்று தயாரிப்பு தரப்பில் கூறியுள்ளனர். இப்படத்தை  இந்தியாவின்  FOX & CROW STUDIOS நிறுவனமும்  மலேசியாவின் டத்தோ பாதுக்கா ஸ்ரீ டாக்டர். மோகன சுந்தரத்தின் GVKM ELEPHANT PICTURES  நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார்

No comments:

Post a Comment