Featured post

Kaathu Vaakula Oru Kadhal Movie Review

Kaathu Vaakula Oru Kadhal Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kaathuvakkula oru kaadhal ன்ற படத்தோட கதையை தான் பாக்க போறோம். mass ravi த...

Friday, 27 December 2019

பட்டைய கிளப்பும் “பட்டாஸ்” படத்தின் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்!

பட்டைய கிளப்பும் “பட்டாஸ்” படத்தின்  “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்! 

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “பட்டாஸ்” படம் அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல்கள் மூலம் கொண்டாட்ட அதிர்வலைகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சிங்கிளான “ஜில் ப்ரோ” மற்றும் இரண்டாவதாக வெளியான “மொரட்டு தமிழன்டா” இரண்டும் பெரு வெற்றி பெற்ற நிலையில் இப்போது மூன்றாவதாக அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்  ஒரே இரவில்  ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களை கவர்ந்திழுத்து பெரு வெற்றியடைந்துள்ளது.  “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது இசையமைப்பாளர்களான விவேக், மெர்வின் குழுவை இன்பத்தின் உச்சிக்கு அழைத்து சென்றிருக்கிறது. மேலும் அவர்களது நெருங்கிய நண்பரான அனிருத்துடன் இணைந்து இப்பாடல் உருவாகியிருப்பது, அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.




அனிருத்துடன்  இணைந்து பணியாற்றியது குறித்து இசையமைப்பாளர் விவேக் கூறியதாவது...

அனிருத் எப்போதும் எங்களுக்கு நண்பருக்கு மேலானவர். அவர் எங்களின் சகோதரர் போன்றவர். அவரை எங்கள் இசையில் பாட வைப்பது எங்களது நெடுநாளைய கனவு. ஜிகிடி கில்லாடியில் அது நிறைவேறியிருப்பது எங்களுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. “ஜிகிடி கில்லாடி” பாடல் எங்கள் மனதுக்கு நெருக்கமான ஒன்று. தனுஷ் அனிருத் கூட்டணி என்பது எப்போதும் வெற்றி கூட்டணி. இப்பாடலின் அசுர வெற்றி அதனை மீண்டும் நிரூபித்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது என்றார்.


“பட்டாஸ்” படத்தில் பணிபுரிந்தது குறித்து விவேக் கூறியாதவது...

நாங்கள் இருவரும் தனுஷ் சாரின் “பட்டாஸ்” படத்தில் கடந்த 8 முதல் 9 மாதங்களாக பணிபுரிந்து வருகிறோம். இந்த பயணத்தின் ஒவ்வொரு நொடியும் பெரும்   மகிழ்சியானதாகவே இருந்திருக்கிறது. பாடல்களை உருவாக்க ஆரம்பித்த தருணம் முதல் இப்போது  ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும் இந்த தருணம் வரை எங்களுக்கு மகிழ்ச்சியின் பயணமாகவே அமைந்துள்ளது. ஒரு வகையில் இந்த பணியில் எங்கள் முன் மிகப்பெரிய பொறுப்பு இருந்தது. நானும் மெர்வினும் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தோம் நாங்கள் செய்யும் பாடல்களில் புதுமையையும், நேர்த்தியையும், பாடலுக்குரிய நியாயத்தையும் உண்மையாக தர உழைத்தோம். எந்த இடத்திலும் இது எங்களது முந்தைய பாடல்களை பிரதிபலித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். “பட்டாஸ்” எங்கள் சினிமா  பயணத்தில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.  இப்போது மூன்று பாடல்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. மற்ற பாடல்களும் இதே போன்று  இனிமையானதாக, புத்துணர்வு தரும்  பாடல்களாக இருக்கும். என்றார்.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில்  T.G. தியாகராஜன் தயாரிக்க இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள “பட்டாஸ்” படத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். மெஹ்ரீன் பிர்ஸாடா, சினேகா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். நவீன் சந்திரா எதிர்மறை நாயகன் பாத்திரத்தில் நடித்துள்ளார். 2020 ஜனவரி 16 வெளியாகும் இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை பிரமாண்டமாக வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டு வருகிறது.

No comments:

Post a Comment