Featured post

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now* ...

Tuesday, 31 December 2019

தமிழரசன் " படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில்

தமிழரசன் " படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி, கே.ஜே.யேசுதாஸ் பாடல்!
 
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர்ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..


























ஒளிப்பதிவுஆர்.டி.ராஜசேகர்
இசை  -   இளையராஜா
பாடல்கள்  -  பழனிபாரதி, ஜெய்ராம்
கலை  -   மிலன்
ஸ்டண்ட்  -   அனல் அரசு
எடிட்டிங்   -   புவன் சந்திரசேகர்
நடனம்   -      பிருந்தா சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை   -     ராஜா ஸ்ரீதர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்  -   பாபு யோகேஸ்வரன்
தயாரிப்பு  -    கெளசல்யா ராணி
படம்ன பற்றி இயக்குனர்  பாபு யோகேஸ்வரன். ..
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய்ஆண்டனி சூழ்நிலை காரணமாக  ஒரு போராளியாக மாறுவதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்திற்காக   S.P.B  ஒரு பாடலையும்,  12 வருடங்களுக்கு  பிறகு இளையராஜாவின் இசையில் கே.ஜே.யேசுதாஸ் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார்கள். அந்த பாடல்கள் 2020 ம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக வலம் வரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் படத்தின் இயக்குனர் பாபு யோகேஷ்வரன்.
படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment