Featured post

நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்

 *நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்* எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழாவில் பிரபல கலை இயக்குனர் திரு.தோட்டா தரணி ...

Thursday, 18 February 2021

கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் "ராயர் பரம்பரை"

 கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் "ராயர் பரம்பரை"

 அன்புள்ள பத்திரிக்கை நண்பர்களுக்கு,


சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில்  சின்னசாமி மெளனகுரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கும் படம் "ராயர் பரம்பரை". 
கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டான மரடோனா, டூ ஸ்டேட்ஸ் படங்களின் கதாநாயகி சரண்யா நாயர் தமிழுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும், தெலுங்கு பட நாயகி மும்பை அனுசுலா மற்றும் மும்பை மாடல் கிருத்திகா என்ற இரு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். மேலும், KR விஜயா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா RNR மனோகர், கஸ்தூரி, பவர் ஸ்டார், கலக்கப்போவது யாரு தங்கதுரை,  மிப்பு, கல்லூரி வினோத்,
சரண்யா, லொல்லு சபா சேஷு,ஷாலு ஷம்மு மற்றும் பலர் நடிக்க  செண்டிமென்ட் கலந்த மிகப்பெரிய காமெடி படமாக பொள்ளாச்சியில் தயாராகி உள்ளது.கொரோனா  ஊரடங்கு காலத்திலும் சூட்டிங் ஒரே schedule-இல் பிளான் செய்யப்பட்டு டிசம்பர் தொடங்கி பொங்கலுக்கு முன் முடிக்கப்பட்டது.மிரட்டலான சண்டைக் காட்சிகளுடனும், பல லட்சம் ரூபாயில் மிகப்பெரிய செட் அமைத்து சாண்டி மாஸ்டரின் வித்தியாசமான நடனத்துடனும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ராயர் பரம்பரை.
 



 
சின்னசாமி சினி கிரியேஷன்ஸ்
டைரக்டர்: ராம்நாத் T 
ஒளிப்பதிவாளர் : விக்னேஷ் வாசு 
இசையமைப்பாளர் : கணேஷ் ராகவேந்திரா
எடிட்டர்: சசிகுமார்
கலை இயக்குனர் : குமார்
மேக்கப் மேன் : RK 
காஸ்டியூமர் : ரங்கசாமி
டான்ஸ் மாஸ்டர்: சாண்டி , ஸ்ரீ சங்கர்
ஸ்டண்ட் மாஸ்டர்: சூப்பர் சுப்பராயன்
ஸ்டில்ஸ்: திலீப்
தயாரிப்பாளர் : சின்னசாமி மெளனகுரு

No comments:

Post a Comment