Featured post

Madharaasi Movie Review

 Madharaasi Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம madharasi  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு  தான் release ஆய...

Monday, 8 March 2021

அய்யா சிவ சிவ சினி கிரியேஷன்ஸ்

 அய்யா சிவ சிவ சினி கிரியேஷன்ஸ் வழங்கும் ‘ஒரு குடைக்குள்’

பூவண்டன் தோப்பு என்னும் சாமி தோப்பில் ஶ்ரீமன் நாராயண வைகுண்டர் நிகழ்த்திய அற்புதங்களை வரலாறாக எடுத்துச் சொல்லும் காவியம் தான் ‘ஒரு குடைக்குள்’.

கலி என்னும் மாயையிலிருந்து, மக்களை தர்மயுக வாழ்விற்கு அழைத்துச் செல்ல வந்த கடவுளின் கதை.

வைகுண்டராக ஆனந்த் நடிக்கிறார். பக்தையாக மேக்னாராஜ் நடிக்கிறார். அவதார சிறுவனாக சிவ தினேஷ் அறிமுகமாகிறார். இவர்களுடன் நிரோஷா, கருத்தம்மா ராஜஶ்ரீ, இளவரசு, இராஜேந்திரநாத், ரவிராகுல், சூசன் ஜார்ஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.



கதை, திரைக்கதை, இயக்கம் K.L.உதயகுமார்.

வசனம் S.R.நிலா,

ஒளிப்பதிவு V.இராஜேந்திரன்,

இசை - தேவா,

கலை - ஐயப்பன்,

எடிட்டர் லக்‌ஷ்மன்,

தயாரிப்பு மேற்பார்வை B.V.பாஸ்கரன்,

மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்,

தயாரிப்பு ; K.L.உதயகுமார்.


இணை தயாரிப்பு ;

பொன்.செல்வராஜ்,

விஷ்ணுவதி உதயகுமார்,

S.T.சுனிதா


‘ஒரு குடைக்குள்’ திரைப்படத்தின் பாடல்கள் இசையமைப்பாளர் தேவா ஸ்டுடியோவில் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் தேவா வைகுண்டநாதருக்கு தனது காந்தக் குரலில் ஒரு பாடல் பாடியுள்ளார்.


அய்யா வைகுண்டர் பற்றிய ‘ஒரு குடைக்குள்’ என்ற பக்தி காவியம் வெகுவிரைவில் திரைக்கு வருகிறது!


PRO_கோவிந்தராஜ்

No comments:

Post a Comment