Featured post

முதல்வர் ஜோசப் விஜய்க்கு நடிகர் விஷால் அளித்த காலத்தால் அழியாத பரிசு!

 முதல்வர் ஜோசப் விஜய்க்கு நடிகர் விஷால் அளித்த காலத்தால் அழியாத பரிசு! நடிகர் விஷாலின் பரிசை மகிழ்ச்சியோடு ஏற்று கொண்ட முதல்வர்!! நடிகர் விஷ...

Friday, 13 December 2024

Soodhu Kavvum 2 Movie Review

 Soodhu Kavvum part 2 Movie Review 



ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ஒரு interesting ஆனா அதே சமயம் காமெடி ஆனா படத்தோட review அ தான் பாக்க போறோம். இதுலேயே என்ன படமா இருக்கும் னு guess பன்னிருப்பிங்க. ஆமாங்க mirchi shiva ,  Harisha, Radha Ravi, MS Bhaskar, Karate Karthi, Raghu, Yog Japee, Aruldoss, Kalki, and Kavi நடிப்புல வெளி வந்திருக்க soodhu kavvum part 2 படத்தை தான் பாக்க போறோம். இந்த படத்தை SJ Arjun  தான் டைரக்ட் பண்ணிருக்காரு.


2013 ல ரிலீஸ் ஆனா சூது கவும்  படத்துல விஜய் சேதுபதி, பாபி simha , அசோக் செல்வன் ல நடிச்சிருந்தாங்க. அது மட்டும் இல்லாம இந்த படம் செம ஹிட் அடிச்சுது. இப்போ இந்த படத்தோட second part தான் இது. சோ வாங்க இந்த படத்தோட கதை குள்ள போகலாம். 


first part ல நடந்த அதே time ல தான் இந்த second part யும் நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. அதுனாலயே first பார்ட் ல நடந்த scenes அ மறுபடியும் இதுல எடுத்து நடிச்சிருக்காங்க. first part லேயே நீங்க பாத்திருப்பிங்க அருமை பிரகாசம் அ நடிச்சிருக்க கருணாகரன் அரசியல் ல நிதி அமைச்சர் அ உள்ள வராரு னு காமிச்சிருப்பாங்க . இந்த படத்துல இவரை மக்கள் மூணு வட்டி தேர்ந்துஎடுத்த நிதி அமைச்சரா இருப்பாரு. இவரு மக்கள் அ பத்தி கவலைப்படாம ஊழல் செய்ஞ்சு ஒரு பெரிய விஷயத்துல மாட்டிக்கிறாரு. 


first part ல எப்படி விஜய் சேதுபதி ஒரு கடத்தல் தொழில் பண்ணுறாரோ அதே மாதிரி தான் mirchi சிவா வும் அவருக்கு னு ஒரு சில கொள்கைகளை வச்சு ஒரு gang அ நடத்திட்டு வராரு. இவங்க தான் கருணாகரனை கடத்தி வச்சுடுறாங்க. கருணாகரனை கடத்துறதுக்கு ஒரு பெரிய காரணமும் இருக்கு. சோ finance minister அ காணாம போனதுனால ரெண்டு police officers அ இதை பத்தி investigate பண்ணுறதுக்கு அனுப்புறாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்க போது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

mirchi shiva ஓட costumes , அவரோட body language , counter ல அவரு குடுக்கற dialogues  னு எல்லாமே பக்கவா குடுத்திருக்காரு. அரசியல் சம்பந்தப்பட்ட dialogues அ இருக்கட்டும் அதுல வர நகைச்சுவை னு ரொம்ப அழகா எல்லாத்தயும் எழுதிருக்காரு இயக்குனர் எஸ்.ஜே. அர்ஜுன். 


இந்த படத்துல மெயின் அ பாத்தீங்கன்னா கொள்கைகளை follow பண்ணுற kidnappers க்கும் politicians க்கு நடுவுல நடக்கற போராட்டம் தான் இந்த கதை னே சொல்லலாம். ஒரு பக்கம் ஒரு பெரிய politician அ கடத்தி வச்சனால நடக்கற பிரச்சனைகள் இன்னொரு பக்கம் police இவங்கள பிடிக்கறதுக்கு பண்ணற வேலைகள் னு ஒரு பக்க action நிறைஞ்ச நல்ல காமெடி படமா குடுத்திருக்காங்க. மொத்தத்துல  பூனை கிட்ட எலி மாட்டுதா இல்ல யா ன்றதா interesting அ எடுத்துட்டு வந்திருக்காங்க. 

மொத்தத்துல ஒரு நல்ல காமெடி படம். பாக்கறதுக்கு மிஸ் பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment