Featured post

உலகின் தலைசிறந்த கேன்ஸ் திரைவிழாவின் அதிகாரபூர்வ போட்டியில்

 *உலகின் தலைசிறந்த கேன்ஸ் திரைவிழாவின் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் “மாண்புமிகு பறை”   *“மாண்புமிகு பறை”  திரைப்படம் கேன்ஸ...

Wednesday, 7 May 2025

மே 9 ஆம் தேதி திரைக்கு வரும் ரோபோ சங்கர் நடித்த " அம்பி "

 மே 9 ஆம் தேதி திரைக்கு வரும் ரோபோ சங்கர் நடித்த " அம்பி " 













கதையின் நாயகனாக ரோபோ சங்கர் அறிமுகமாகும் " அம்பி " 


T2 Media என்ற புதிய பட நிறுவனம் சார்பில் F. பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்திருக்கும் படத்திற்கு " அம்பி "  என்று பெயரிட்டுள்ளனர். 


மேடை கலைஞராக தனது கலை பயணத்தை துவக்கி தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக  கலக்கிக்  கொண்டிருக்கும் ரோபோ சங்கர் இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.


அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். 


மற்றும்  ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன், சேரன்ராஜ், மிப்புசாமி, ராதாமா, ஷர்மிளா, ஆர்த்தி, வித்யா, ராணி பாட்டி என ஏராளமான நட்சத்திர பட்டாளங்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.


வெற்றிவேல் முருகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 


கன்னடத்தில் அகோரா, நெகிழா தர்மா, மகளே, Tt #50 படங்கள் உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் A.B. முரளிதரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 


நா.ராசா பாடல் வரிகளை பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி  மற்றும் பிரபல பாடகர்கள் சைந்தவி, சத்யபிரகாஷ், டிரம்ஸ் சிவமணி, தேவகோட்டை அபிராமி ஆகியோர் பாடி இருக்கிறார்கள்.


கலை இயக்குனராக அன்பு பணியாற்றியுள்ளார். வைலன்ட் வேலு ஸ்டண்ட் இயக்குனராகவும், கார்த்திக் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். 

மக்கள் தொடர்பு புவன் செல்வராஜ்.

தயாரிப்பு : T2 மீடியா F.பிரசாந்தி பிரான்சிஸ்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பாஸர் J எல்வின்.


படம் பற்றி இயக்குனர் பாஸர் J எல்வின் பேசியதாவது...


இது முழுக்க முழுக்க பேமிலி ட்ராமா கலந்த காமெடி திரைப்படம்.


இந்த கதையின் நாயகன் நிஜத்தில்  அம்பியாக ,அப்பாவியாக , பயந்தாங்கோலியாக இருக்க அவனை சுற்றி உள்ளவர்கள் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனால் தான் அனைத்தும் நடந்தது அவன் பெரிய வீரன், பெரிய அதிர்ஷ்டசாலி என்று நம்ப ஆரம்பிக்கிறார்கள். இப்படி மாட்டிக் கொண்ட நாயகன் எப்படி அவர்களிடம் இருந்து தப்பித்தார், இறுதியில் அம்பியாக இருந்தாரா இல்லை அன்னியனாக மாறினாரா என்பதை குடும்பத்துடன் பார்க்கக்கூடிய  நகைச்சுவை நிறைந்த படமாக உருவாக்கி இருக்கிறோம்.


இந்த கதைப்படி கதையின் நாயகன் திருமணம் ஆகாத 40 வயது மதிக்கத்தக்க கதாபாத்திரம் என்பதால் அதற்கு ஒரு காமெடியன் நடித்தால் நன்றாக இருக்கும்  என்று ரோபோ சங்கரை நடிக்க வைத்தேன். அவர் சிறப்பாக நடித்துள்ளார்.


படப்பிடிப்பு சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடைபெற்றது என்கிறார் இயக்குனர் பாஸர் J எல்வின்.


இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விண்வெளி நாயகன் டாக்டர் கமலஹாசன் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


படம் கோடை கொண்டாடமாக வரும் 9 ம் தேதி நூற்றுக்கு  மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

No comments:

Post a Comment