Featured post

Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting

 Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting wrapped up! Verus Productions, the makers of Gautham Ram K...

Saturday, 17 May 2025

மெகாஸ்டார் சிரஞ்சீவி, பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி, சாஹு கராபதி,

 மெகாஸ்டார் சிரஞ்சீவி, பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி, சாஹு கராபதி, சுஷ்மிதா கொனிடேலா, ஷைன் ஸ்க்ரீன்ஸ், கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் பிரம்மாண்ட திரைப்படமான #Mega157 படத்தில்  

நடிகை நயன்தாரா  இணைந்துள்ளார் !! 



மெகாஸ்டார் சிரஞ்சீவியின்  #Mega157 படத்தில்  நடிகை நயன்தாரா  இணைந்துள்ளார் !! 


மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில்,  பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள #Mega157, பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த அற்புதமான கூட்டணியில் உருவாகும், இந்தப் படம் முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும். நீண்ட  இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி முழு நீள நகைச்சுவை வேடத்தில் மீண்டும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் பேனரில் சாஹு கரபதி, சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார், ஸ்ரீமதி அர்ச்சனா வழங்குகிறார்.


மிகப்பெரிய வணிக ரீதியான பொழுதுபோக்கு படங்களை உருவாக்குவதில் திறமைசாலியாகவும், புதுமையான, பரபரப்பான புரமோசன்களை  வெளியிடுவதில் திறமைசாலியாகவும் அறியப்பட்ட அனில் ரவிபுடி, மீண்டும் ஒருமுறை அதை சாதித்து காட்டியுள்ளார்.  சங்கராந்திகி வாஸ்துன்னம் படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அனில் ரவிபுடி #Mega157 இன் புரமோசன்களில்  தனது தனித்துவமான நகைச்சுவை மூலம் அசத்தி வருகிறார். இன்று, சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாராவை ஜோடியாக  அறிமுகப்படுத்தும் அசத்தலான புதிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.


இந்த வீடியோவில் நயன்தாரா தனது ஊழியர்களுடன் தெலுங்கில் பேசுவதும், கார் பயணத்தின் போது சிரஞ்சீவியின் கிளாசிக் பாடல்களுக்கு வைப் செய்வதும், ஸ்கிரிப்டைப் படிப்பதும், சிரஞ்சீவியின் முத்திரை வசனங்களில்  ஒன்றைப் பேசுவதும், என அனைத்தும் ஒரு பிரகாசமான நகைச்சுவை தன்மையுடன் காட்டப்படுகிறது. கடைசியில், அனில் ரவிபுடி அவருடன் சேர்ந்து படத்தில் நயன்தாரா நடிக்கும் செய்தியை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.


சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் காட்ஃபாதர் படங்களில் நயன்தாரா நடித்த தாக்கத்தை ஏற்படுத்திய கதாபாத்திரங்களுக்குப் பிறகு, சிரஞ்சீவியுடன் நயன்தாரா இணையும் மூன்றாவது படம் Mega157.  இந்த புதுமையான புரமோசன் விளம்பரத்தில் அவர் பங்கேற்பது அரிதானது, அனில் ரவிபுடியின் படைப்பாற்றலுக்கு இதுவே ஒரு சான்றாகும். இந்த வீடியோ நயன்தாராவின் மென்மையான பக்கத்தை மட்டுமல்லாமல், அவரது பாத்திரத்தின் வேடிக்கையான தன்மையையும் சுட்டிக்காட்டுகிறது.


நயன்தாராவுக்காக அனில் ரவிபுடி ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை எழுதியுள்ளார், ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் மறக்கமுடியாததாக பாத்திரமாக இருக்கும். சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா ஜோடி திரையில் வருவது பார்வையாளர்களுக்கு ஒரு காட்சி விருந்தாக இருக்கும் என்பது உறுதி.


படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஆரம்ப அறிவிப்பு முதல் தொழில்நுட்பக் குழுவினரின் அறிமுகம் மற்றும் நயன்தாரா நாயகியாக அறிவிக்கப்படுவது வரை, புரமோசன் ஒவ்வொன்றும் தனித்துவமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.


இப்படத்திற்கு சமீர் ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார், பீம்ஸ் சிசிரோலியோ இசையமைக்கிறார், தம்மிராஜு படத்தொகுப்பை கவனிக்கிறார். எழுத்தாளர்கள் எஸ் கிருஷ்ணா மற்றும் ஜி ஆதி நாராயணா ஆகியோர் திரைக்கதையில் பணிபுரிகின்றனர், எஸ் கிருஷ்ணா நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார். ஏஎஸ் பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.


இந்தப் படம் 2026 சங்கராந்திக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இயக்குநர் அனில் ரவிபுடி "சங்கராந்திகி ரஃபதின்செத்தம்" என்ற புதிய விளம்பர வீடியோ மூலம் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.


நடிகர்கள்: மெகாஸ்டார் சிரஞ்சீவி, நயன்தாரா


தொழில்நுட்பக் குழு: 

எழுத்து இயக்கம் - அனில் ரவிபுடி 

தயாரிப்பாளர்கள் - சாஹு கராபதி & சுஷ்மிதா கொனிடேலா 

தயாரிப்பு நிறுவனம் : ஷைன் ஸ்கிரீன்ஸ் & கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் 

வழங்குபவர் - ஸ்ரீமதி.அர்ச்சனா 

இசை - பீம்ஸ் சிசிரோலியோ 

ஒளிப்பதிவு - சமீர் ரெட்டி 

தயாரிப்பு வடிவமைப்பாளர் - ஏ எஸ் பிரகாஷ் 

எடிட்டர் - தம்மிராஜூ 

எழுத்தாளர்கள் - எஸ் கிருஷ்ணா, ஜி ஆதி நாராயணா 

நிர்வாகத் தயாரிப்பாளர் - எஸ் கிருஷ்ணா 

Vfx மேற்பார்வையாளர் - நரேந்திர லோகிசா 

லைன் புரொடியூசர் - நவீன் கரபதி 

கூடுதல் வசனங்கள் - அஜ்ஜு மகாகாளி, திருமலா நாக் 

தலைமை இணை இயக்குனர் - சத்யம் பெல்லம்கொண்டா

மார்க்கெட்டிங் : ஹாஷ்டேக் மீடியா

மக்கள் தொடர்பு - சதீஷ்குமார் S2 Media

No comments:

Post a Comment