Jinn the Pet Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம jin the pet படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு fantasy படம். இந்த திரைக்கதையை எழுதி தயாரிச்சு இயக்கி இருக்கிறது T R bala . இந்த படத்துல mugen rao வும் bhavya வும் தான் lead role ல நடிக்கிறாங்க இவங்கள தவிர Bala Saravanan, Imman Annachi, Radha Ravi, Vadivukkarasi, Nizhalgal Ravi, Vinodhini Vaidyanathan, George Vijay, Rithvik ல நடிச்சிருக்காங்க. ஏற்கனவே T R Bala mugen அ வச்சு ஒத்த தாமரை ன்ற ஆல்பம் song அ direct பண்ணிருக்காரு. அப்போ தான் mugen அ வச்சு படம் எடுக்கறதா official அ சொல்லிருந்தாரு . இந்த படத்துல இருந்து இது வரைக்கும் 4 songs அ வெளி இட்டுருக்காங்க. இந்த படம் மே 30 த் அன்னிக்கு ரிலீஸ் ஆகா போது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துரலாம்.
mugen ஒரு unlucky person அ இருக்காரு. இவரு நினைக்கிறதோ இல்லனா ஆசைப்படுறதோ எதுவுமே நடக்காது அதுனால ஒரு மந்திரவாதி கிட்ட போறாரு. இந்த மந்திரவாதி black magic அ பண்ணுறவரு. தான் நினைச்சதெல்லாம் நடக்கணும் னு mugen கேக்குறாரு அதுக்கு அந்த மந்திரவாதி ஒரு jinn அ குடுக்குறாரு. இதை வாங்கிட்டு ரொம்ப சந்தோசமா இருக்க ஆரம்பிக்குறாரு mugen . தன்னோட bucket list ல என்னனலாம் இருக்கோ அதெல்லாத்தயும் நிறைவேத்துறாரு. ஆனா இந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கல. ஆசை பட்டு mugen வாங்கிட்டு வந்த jin ஏ கடைசில இவருக்கும் இவரோட குடும்பத்துக்கும் எதிரியா மாறிடுது. இந்த jin அ கடைசில எப்படி சமாளிச்சு mugen யும் அவரோட குடும்பம் தப்பிக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையா இருக்கு.
இந்த கதை malaysia ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. fantasy, mystery, magic, comedy னு எல்லாமே சூப்பர் அ balance பண்ணி கொண்டு வந்த interesting ஆனா கதைக்களம் தான் இது. இந்த படத்தோட கதை யா இருக்கட்டும் இல்லனா visuals அ இருக்கட்டும் ரெண்டுமே audience அ ஈர்க்கற விதத்துல அமைச்சிருக்கு. படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் entertaining அ இருக்குனு தான் சொல்லணும். இந்த படத்தோட highlighting ஆனா scene ந படத்தோட climax ல இந்த jinn terminator மாதிரியான ஒரு உருவத்தை எடுக்கும். அது பாக்கவே super அ இருக்கும். அப்புறம் இந்த படத்துல CGI அ use பண்ணிருந்தாங்க. அந்த scenes எல்லாமே ஒரு fantasy கதைக்களத்துக்கு பக்கவா குடுத்திருந்தாங்க னு தான் சொல்லணும்.
mugen rao ஓட நடிப்பு ரொம்ப எதார்த்தமா நல்ல இருந்தது னு சொல்லலாம். இவரோட body language , dialogues எல்லாமே இந்த படத்தோட கதைக்கு highlight அ இருந்தது. bhavya ஓட நடிப்பும் அழகா இருந்தது. balasaravanan எப்பவும் போல அவரோட comedy role ல அசத்திட்டாரு னு தான் சொல்லணும். supporting actors அ நடிச்ச Vinodhini Vaidyanathan அப்புறம் Vadivukkarasi ஓட screen presence கம்மியா இருந்தாலும் படத்துக்கு பக்க பலமா இருந்திருக்காங்க. இந்த படத்தோட villain அ நடிச்சிருக்க radha ravi ஒரு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திருக்காரு.
படத்தோட creativity அப்புறம் ஒரு தனித்துவமான கதைகளத்தக்காகவே இந்த படத்தை பாக்கலாம். entertaining அ இருக்கணும் அதே சமயம் fantasy கதைக்களமா இருக்கணும் நினைச்சிங்கன்னா இந்த படம் உங்களுக்காக தான். கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாருங்க. இது ஒரு must watch movie னு தான் சொல்லுவேன்.
No comments:
Post a Comment