Featured post

Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting

 Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting wrapped up! Verus Productions, the makers of Gautham Ram K...

Thursday, 29 May 2025

யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும்

 *யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – நமித் மல்ஹோத்ராவின் 'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது, இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.*





'இராமாயணா' படத்திற்காக யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – பிரம்மாண்ட ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியது !! 


இந்திய சினிமாவின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றான 'இராமாயணா' படத்திற்காக,  ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் (Mad Max: Fury Road, The Suicide Squad புகழ்) மற்றும் இந்தியாவின் 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் கைகோர்த்துள்ளார்கள்.


நடிகர் யாஷ், ராவணனாக நடிப்பதோடு, இப்படத்தின் இணை-தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இப்படம், பரந்த எதிர் நாயகனாக ராவணனை மிக பிரம்மாண்டமாகக் காட்டும். ஹாலிவுட் தரத்திலான ஸ்டண்ட் காட்சிகளை உருவாக்கும் நோக்கில், கய் நோரிஸ் இந்தியா வந்து வேலை செய்யும் நிலையில், யாஷ் இதில் நேரடியாக ஈடுபட்டு, இந்திய ஆக்சன் சினிமாவின் தரத்தை புதிய உச்சிக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்.


இராமாயணா பாகம் 1 க்காக யாஷ் 60–70 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். சமீபத்தில் வெளியான படப்பிடிப்பு புகைப்படங்களில், யாஷ் தனது உடல் அமைப்பை மாற்றி, ராவணனாக ஒரு வித்தியாசமான, மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்தத் தோற்றம், இந்திய ஹீரோக்களை உலகளவில் புதிய பார்வையில் காணச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.


இப்படத்தினை நிதேஷ் திவாரி இயக்குகிறார், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்கள். உலகத் தரத்தில் இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தும் நோக்கில் உருவாகும் இந்த படம், ஹாலிவுட் தர VFX, பிரம்மாண்டமான செட்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகையர்களை ஒன்றிணைத்த ஒரு காட்சித் திருவிழாவாக உருவாகிறது.


'இராமாயணா பாகம் 1' – தீபாவளி 2026, மற்றும் பாகம் 2 – தீபாவளி 2027 வெளியாகவுள்ளது.

No comments:

Post a Comment