Featured post

Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting

 Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting wrapped up! Verus Productions, the makers of Gautham Ram K...

Wednesday, 28 May 2025

தேஜா சஜ்ஜா நடிப்பில் மிராய் பட டீசர் வெளியாகியுள்ளது

 *தேஜா சஜ்ஜா நடிப்பில் மிராய் பட டீசர் வெளியாகியுள்ளது !!*



இந்தியாவில் முதன்முறையாக ஒரு  அற்புத உலகத்தை பார்க்க தயாராகுங்கள்! சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும், கார்த்திக் கட்டமனேனி இயக்கும், பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது, இப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!


ஹனுமான் படம் மூலம் இந்தியா முழுக்க ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த தேஜா சஜ்ஜா, இப்போது அதைவிட மிகப் பெரிய மற்றும் பிரம்மாண்ட திரைப்படமான  “மிராய்” படத்தோடு வந்துள்ளார்.  பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில், TG விஷ்வபிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர்  தயாரிக்கும், இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ளார். காட்சியமைப்பிலும், ஃபேண்டஸி கதைக்களத்திலும் பிரம்மாண்டத்திலும் அசத்தும், 

டீசர் இந்தியா முழுவதும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 




டீசரில் ஒரு முனிவரின் குரல், கலியுகக் களத்தில் பிறந்த கட்டுப்பாடற்ற சக்தியின் எழுச்சியைப் பற்றி முன்கூட்டியே அறிவிக்கிறது. அந்த இருண்ட சக்தி தான் தி பிளாக் ஸ்வார்ட் The Black Sword (மனோஜ் மாஞ்சு), மனித சக்திக்கு அப்பாற்பட்ட வல்லமை கொண்டவர், அழிவுக்கான பயணத்தை தொடங்குகிறார். ஆனால், இந்த முறை கடவுள்கள் அல்ல; அவர்களின் ஆயுதமே எதிர்விளைவு தருகிறது. அதுதான் மிராய்.


தேஜா ஒரு எளிய வீரராக அரங்கேற்றமாகிறார் — ஒரு மர்ம வாய்ந்த சக்தி மிக்க ஆயுதத்துடன், அதன் பலம் குறித்த கேள்விகளுடம் தனது பயணத்தை தொடங்குகிறார். இருளுக்கு எதிரான போரில் தன்னுடைய சக்தியை வலிமையை கண்டடைகிறார், நியாயத்திற்கு உண்மைக்கு ஆதரவாக அவர் எழும் தருணமே கதையின் மையம்.


இந்தியாவின் இளம் பான் இந்தியா நட்சத்திரமான தேஜா சஜ்ஜா, ஒரு சாதாரண மனிதனில் இருந்து சூப்பர் யோதாவாக மாறும் ஹீரோவாக வெளிப்படுகிறார். ரயிலின் மேலே  செய்யும் சாகசம்  உட்பட, பல உயிர் அபாயம் நிறைந்த சாகசங்களை  துணிவுடன் செய்து, அவர் ஒரு சக்திவாய்ந்த நட்சத்திரம் என்பதை நிரூபிக்கிறார்.


மனோஜ் மாஞ்சு ஒரு படு பயங்கர எதிர் நாயகனாக திகழ்கிறார். அவரது சக்தி வாய்ந்த நடிப்பு, ஒவ்வொரு காட்சியையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ரிதிகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெயராம் மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


கார்த்திக் கட்டமனேனி இயக்குநராக மட்டுமல்ல,  மிரட்டலான உலகை உருவாக்கி, பரபரப்பான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். அவரது காட்சியை உருவாக்கும் திறமை, வித்தியாசமான கதாபாத்திரங்கள், அதிரடி சண்டைகள் — இவை அனைத்தும் திரைக்கதையை சிறப்பிக்கின்றன. டீசரின் கடைசி நிமிடத்தில், இராமர் வரும் தருணத்தில் குரங்குகள் தலைவணங்கும் காட்சி, நம்மை மயிர்க்கூச்செரிய வைக்கிறது. 


கேமராவை கையாண்டுள்ள கார்த்திக், ஒவ்வொரு பிரேமையும் அற்புதமாகப் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் இசை அமைப்பாளர் கௌர ஹரி பின்னணி இசை, திரை அனுபவத்தை மேலோங்கச் செய்கிறது. மனிபாபு கரணம் வசனங்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீ நாகேந்திர தங்காலா கலை இயக்குநராக, சுஜித் குமார் கொல்லி நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளனர்.



கார்த்திகேயா 2 மற்றும் ஜாட் படங்களை தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் தயாரிப்பில், மிராய் திரைப்படம் இந்திய அளவில் மற்றொரு பான் இந்திய பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது. இப்படம் முற்றிலும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. வெறும் VFX பிரம்மாண்டமாக இல்லாமல் - மிராய் திரைப்படம் அத்தியாவசியமான, கட்டுப்படுத்தப்பட்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான கோடி பட்ஜெட்டுகளில் எடுக்கப்படும் படங்களின் பிரமாண்டத்திற்கு இணையாக உள்ளது என்பதுதான் இதன் சிறப்பம்சம். உண்மையான சினிமா தாக்கத்திற்கு எப்போதும் பிளாக்பஸ்டர் செலவு தேவையில்லை, துணிச்சலான கற்பனை மற்றும் கூர்மையான செயல்படுத்தல் மட்டுமே தேவை என்பதற்கு  இது உதாரணமாக இருக்கும்.


இந்த டீசர் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ள "மிராய்" திரைப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் அதிரடியாக வெளியாகிறது. இந்த திரைப்படம் 8 வெவ்வேறு மொழிகளில் 2D மற்றும் 3D வடிவங்களில் உலகளவில் வெளியிடப்படும்.


நடிகர்கள்: சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு


தொழில்நுட்பக் குழு: 

இயக்கம் : கார்த்திக் காட்டம்நேனி 

தயாரிப்பாளர்: டிஜி விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத் 

பேனர்: பீப்பிள் மீடியா பேக்டரி 

நிர்வாக தயாரிப்பாளர்: சுஜித் குமார் கொல்லி 

இசை: கவுரா ஹரி 

கலை இயக்குனர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா எழுத்தாளர்: மணிபாபு கரணம் 

எடிட்டர் - ஶ்ரீகர் பிரசாத்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் - ஹேஷ்டேக் மீடியா


https://youtu.be/Uf6allM1yWc

No comments:

Post a Comment