Featured post

இருண்ட ரகசியங்கள். ஆழமான குற்றவுணர்வு

 இருண்ட ரகசியங்கள். ஆழமான குற்றவுணர்வு. 'கன்கஜூரா' டிரெய்லர் கடந்த காலத்தின் மறக்கமுடியாத ஒரு பயணத்தை நமக்கு உறுதி அளிக்கிறது"....

Wednesday, 21 May 2025

இருண்ட ரகசியங்கள். ஆழமான குற்றவுணர்வு

 இருண்ட ரகசியங்கள். ஆழமான குற்றவுணர்வு.

'கன்கஜூரா' டிரெய்லர் கடந்த காலத்தின் மறக்கமுடியாத ஒரு பயணத்தை நமக்கு உறுதி அளிக்கிறது".







Sony LIV வழங்கும் 'கன்கஜூரா', வெளியில் அமைதியாகத் தோன்றும் பின்னணியில் பதற்றமூட்டும் ஒரு கதையை சுட்டிக்காட்டுகிறது – அங்கு அமைதியே ஏமாற்றமளிக்கிறது, மேலும் மறைந்திருக்கும் உண்மைகள், வெளியே தெரிவதைவிட அதிகம் அபாயகரமாக இருக்கின்றன.


இந்த டிரெய்லர் குற்றவுணர்வும், இருண்ட ரகசியங்களும், பழிவாங்க விரும்பும் உள்ளம், கடந்த காலம் என்று மாறும் ஒரு உலகத்தை உருவாக்குகிறது. விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்ட இஸ்ரேலிய தொடர் Magpie-இன் அதிகாரப்பூர்வ இந்தியத் தழுவலான 'கன்கஜூரா', இந்திய உணர்வுகளோடு கூடிய தீவிரமான மனநிலைக்கு ஏற்றபடி  புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இந்தக் கதை இரு சகோதரர்கள் தங்களது இருண்ட கடந்த காலத்தை எதிர்கொள்வது மற்றும் நினைவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையிலான எல்லைகள் மங்கத் தொடங்கும் தருணங்களை ஆராய்கிறது.

உங்களுடன் வாழும் நினைவுகள் தான், உங்களுடைய விலக முடியாத சிறைசாலையாக மாறும்போது என்ன நடக்கும்?


நிஷாவாக நடித்துள்ள சாரா ஜேன் டயஸ் கூறுகையில்:


“'கன்கஜூரா' தொடரில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் வெறும் கதையல்ல. அது நம்மை நேரடியாக எதிர்கொள்ள வைக்கும் உண்மைகள் – குற்றவுணர்வு, குடும்பம், நினைவுகள். நிஷா என்பவள் வெளியிலிருந்து அமைதியாகத் தோன்றினாலும், உள்ளே she’s falling apart. அந்த அளவுக்கு பல பன்முகத்தன்மையும் நுணுக்கங்களும் கொண்ட ஒரு பாத்திரத்தில் நடித்தது சவாலானது; ஆனால் அதே நேரத்தில் அது என் திறமையை வெளிப்படுத்தும் அனுபவமாக இருந்தது.”




அஜய் ராய் தயாரித்தும், சந்தன் அரோரா இயக்கத்திலும் உருவான இத்தொடரில்,

மோகித் ரெய்னா, ரொஷன் மேத்யூ, சாரா ஜேன் டயஸ், மஹேஷ் ஷெட்டி, நினத் கமத், டிரினேத்ரா ஹால்தார், ஹீபா ஷா, மற்றும் உஷா நட்கர்ணி உள்ளிட்ட பல்வேறு திறமைகள் கொண்ட நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.


   yes Studios வழங்கிய இந்தத் தொடருக்கான அதிகாரப்பூர்வ உரிமத்தின் கீழ், அடம் பிஸான்ஸ்கி, ஓம்ரி ஷென்ஹர், மற்றும் டானா எடன் ஆகியோரால் மறுவடிவமைக்கப்பட்டு, Donna and Shula Productions தயாரித்துள்ளது.


டிரெய்லர் பார்க்க:

 https://youtu.be/vxy2cPL8fR8?si=rRkVT4JF0iswaXeQ 



‘கன்கஜூரா’, மே 30 முதல் Sony LIV இல் மட்டுமே ஸ்ட்ரீமிங்! காணத்தவறாதீர்கள்.

No comments:

Post a Comment