Featured post

Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting

 Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting wrapped up! Verus Productions, the makers of Gautham Ram K...

Sunday, 25 May 2025

வித்தியாசமான திரில்லர் டிராமா “மனிதர்கள்” மே 30 முதல் திரையரங்குகளில்

 *வித்தியாசமான திரில்லர் டிராமா “மனிதர்கள்”  மே 30 முதல் திரையரங்குகளில் 






*திரையுலகினரின் பாராட்டைப் பெற்ற “மனிதர்கள்” திரைப்படம், மே 30 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது !!*


Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர்  இராம் இந்திரா  இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மனிதர்கள்” திரைப்படம், வரும் மே 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


சமீபத்தில் வெளியான இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர்,  திரை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு,  திரைப் படைப்பாளிகள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது. 


இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெகு சுவாரஸ்யமான டிரெய்லர், படத்திற்காக காத்திருக்கிறேன் எனக் கூறியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்திலும் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்துள்ளார்.


புகழ் மிகு ஒளிப்பதிவாளர் பி சி ஶ்ரீராம் இப்படத்தின் டிரெய்லரால் ஈர்க்கப்பட்டு, உடனடியாக படக்குழுவினரை அழைத்துப் பாராட்டி, அவர்களோடு உரையாடியுள்ளார். அந்நிகழ்வில்..   முதல் சில நொடிகளிலேயே இந்தப்படம் என்னை ஈர்த்துவிட்டது. காட்சியும் களமும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், எனத் தெரிவித்துள்ளார். 


ஒரு இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில், இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா. 


இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


வெளியீட்டுக்கு முன்னதாகவே மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம்,  வரும் மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகீறது. 


தொழில் நுட்ப குழு 

எழுத்து - இயக்கம் -  இராம் இந்திரா 

ஒளிப்பதிவு - அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ்,

இசை - அனிலேஷ் எல் மேத்யூ ,

படத்தொகுப்பு - தின்சா,

கலை - மகேந்திரன் பாண்டியன்,

பாடல் - கார்த்திக் நேத்தா,

ஒப்பனை - அ சபரி கிரிசன்,

துனைத்தயாரிப்பு - தரணிதரன் பரிமளா குலோத்துங்கன்,

நா யுவராஜ்,

உதவி இயக்கம் - லோகேஷ் க கண்ணன்,

சண்டை பயிற்சி - வின் வீரா,

ஒளிக்கலவை - ஆனந்த் இராமச்சந்திரன்,

சப்தம் - சதீஷ்,

வண்ணம் - வசந்த் செ கார்த்திக்,

வரைகலை - ஆன்டனி பிரிட்டோ,

விளம்பர வடிவமைப்பு  - ரிவர் சைடு ஹவுஸ்.


தயாரிப்பு (producers):

இராஜேந்திர பிரசாத்,

ஜெ.நவீன் குமார்,

மு.கி.சாம்பசிவம்.


மக்கள் தொடர்பு : AIM சதீஷ், சிவா.

No comments:

Post a Comment