Featured post

Vangala Viriguda Movie Review

Vangala Viriguda Tamil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vangala viriguda படைத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக...

Monday, 7 July 2025

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

 *வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது*




தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இருவரும் இணைந்து மிரட்டும் 'மாரீசன்'  திரைப்படம் எதிர்வரும் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர். 


இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள 'மாரீசன் ' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா,  சித்தாரா, பி. எல். தேனப்பன்,  லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் கிரியேட்டிவ் புரொடியுசராக பணியாற்றியுள்ளது. 


இப்படத்தின் டீசர் வெளியாகி நான்கு மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஜூலை மாதம் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 


'மாமன்னன்' படத்திற்குப் பிறகு வடிவேலு - பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்த படத்திற்கான டீசரில் இருவரும் அற்புதமாக நடித்திருப்பதாலும் .. படத்திற்கு ரசிகர்களிடத்தில் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment