Featured post

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

 *பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது  “மஹாவதார் நரசிம்மா”  டிரெய்லர் !* ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், க்ளீம் புரடக்சன்ஸின் “மஹாவதார் ...

Wednesday, 9 July 2025

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

 *பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது  “மஹாவதார் நரசிம்மா”  டிரெய்லர் !*



ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், க்ளீம் புரடக்சன்ஸின் “மஹாவதார் நரசிம்மா” திரைப்படம், உண்மையிலேயே தனித்துவமான சினிமா காட்சி அனுபவத்தைத் தரத் தயாராக உள்ளது.  சக்திவாய்ந்த கதை சொல்லல் மற்றும் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகி வரும்  மஹாவதர் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து,  மஹாவதர் நரசிம்மா படத்தின் அதிரடியான டிரெய்லரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். 


இந்தப்படத்தின் கதை, இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது.  விஷ்ணுவின் தீவிர சீடரான பிரஹலாதனைச் சுற்றி இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது, அவர் தனது நாத்திக தந்தை இரண்யகசிபுவின் எதிர்ப்பை மீறி விஷ்ணுவை வணங்குகிறார், இறைவன் பிரம்மாவிடமிருந்து அமரத்துவம் பெற்ற இரண்யகசிபுவை அழிக்க, பகவான் விஷ்ணு தனது அரிய அவதாரமான நரசிம்மராக அவதரிக்கிறார். விஷ்ணுவின் அவதாரமான மகாவதார நரசிம்மரின் பிறப்புடன் கூடிய நம்பிக்கையின் கர்ஜனையை,  இந்த டிரெய்லர் காட்டுகிறது.


பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுடனும், அற்புதமான பின்னணி இசையுடனும், இந்த டிரெய்லர் உண்மையிலேயே அற்புதமாக உள்ளது. இந்திய வரலாற்றிலிருந்து ஒரு இதிகாசத்தின் கதையை, இவ்வளவு அற்புதமாக இதற்கு முன்பு திரையில் பார்த்ததில்லை. சினிமா உச்சத்தை எட்டிய இடம் இதுதான்.


தயாரிப்பாளர் ஷில்பா தவான் கூறியதாவது.., "கர்ஜிக்க வேண்டிய நேரம் இது! 5 ஆண்டுகளின் இடைவிடாத உழைப்புக்குப் பிறகு, ஸ்ரீ நரசிம்மர் மற்றும் ஸ்ரீ வராஹரின் காவியக் கதையை, உலகிற்கு வெளிப்படுத்த நாங்கள் இறுதியாகத் தயாராகிவிட்டோம்! ஒவ்வொரு ஃபிரேமும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு இதயத்துடிப்பும் இந்த தெய்வீகக் கதையை உயிர்ப்பித்துள்ளன. உங்களை வியக்கை வைக்கும்,  தலைசிறந்த படைப்பிற்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்! நரசிம்மரின் கர்ஜனை உங்களை நோக்கி வருகிறது... அது எல்லாவற்றையும் மாற்றப் போகிறது!". 



இயக்குநர் அஷ்வின் குமார் கூறியதாவது…, "இறுதியாக மகாவதார் சினிமா பிரபஞ்சத்தின் முதல் அனிமேஷன் திரைப்படத்தின் டிரெய்லரை அவரது அருள் நிறைந்த இந்திரேஷ்ஜி மகாராஜ் புனித பூமியான பிருந்தாவனத்தில் வெளியிட்டார். தெய்வீக பயணத்தைத் தொடங்க என்ன ஒரு அற்புதமான வழி. க்ளீம் புரடக்சன்ஸின் தொலைநோக்குப் படைப்பாக,  திரை மூலம் பாரதத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு கனவு, பார்வையாளர்களுக்கான புதிய யுக அனுபவமாக  உயிர் பெற்றுள்ளது."


ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மற்றும் க்ளீம் புரடக்சன்ஸ் இந்த லட்சிய அனிமேஷன் திரைப்பட வரிசையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டன, இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடிக்கும் மற்றும் விஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை இப்படங்கள் விவரிக்கவுள்ளது. பட வரிசை மஹாவதார் நரசிம்மா (2025), மஹாவதார் பரசுராம் (2027), மஹாவதார் ரகுநந்தன் (202013), மஹாவதார் கோகுலானந்தா (2033), மஹாவதார் கல்கி பகுதி 1 (2035), மற்றும் மஹாவதார் கல்கி பகுதி 2 (2037). 



மஹாவதார் நரசிம்மா திரைப்படத்தை அஷ்வின் குமார் இயக்கியுள்ளார். ஷில்பா தவான், குஷால் தேசாய் மற்றும் சைதன்யா தேசாய் ஆகியோர் க்ளீம் புரடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இந்நிறுவனத்துடன் இணைந்து ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் இத்திரைப்படம், பல்வேறு பொழுதுபோக்கு தளங்களில் ஒரு சினிமா அற்புதத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் ஒப்பிடமுடியாத காட்சி பிரமாண்டம், கலாச்சார செழுமை, சினிமா சிறப்பு மற்றும் கதை சொல்லும் ஆழம் ஆகியவற்றுடன், இந்த திரைப்படம் 3D யில், ஐந்து இந்திய மொழிகளில்,  வரும் ஜூலை 25, 2025 அன்று வெளியாகிறது.


https://youtu.be/HmLCRMsKykk?si=s1WOrY5LGFo73Ju2

No comments:

Post a Comment