Featured post

தணல்' படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி "- நடிகை லாவண்யா திரிபாதி

 *"'தணல்' படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி "- நடிகை லாவண்யா திரிபாதி!* தனது ...

Showing posts with label Film Maker Pandiraj. Show all posts
Showing posts with label Film Maker Pandiraj. Show all posts

Friday, 10 May 2019

சன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் " SK 16" படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது !






இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் '  மெரினா' , ' கேடி பில்லா கில்லாடி ரங்கா ' ஆகிய படங்களில்  நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 
இந்த படம் மூலம் இருவரும் மூன்றாவது முறையாக  இணைகிறார்கள்.

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் பதினாறாவது பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது  எந்திரன்,சர்கார் , பேட்ட ஆகிய  பிரமாண்ட  படங்களை தயாரித்த  பிரபல தயாரிப்பு நிறுவனமான  “சன் பிக்சர்ஸ்”  தயாரிக்கும் நான்காவது படம் இது  . சன் பிக்ச்சர்ஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி முதல் முறையாக இணைகிறார்கள்  .

சிவகார்த்திகேயனின் 16 வது படமான  இந்த படத்தில் இரண்டு  முன்னணி கதாநாயகிகள்  நடிக்கிறார்கள் . “துப்பறிவாளன்”  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அனு இம்மானுவேல் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருகிறார்  . இது அவரது இரண்டாவது தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்த முதல் திரைப்படமான “கனா” படத்தில் கதாநாயகியாக நடித்த “ஐஸ்வர்யா ராஜேஷ்”  இந்த படத்தில் நடிக்கிறார் .

இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் இசை அமைக்கிறார் . சிவகார்த்திகேயன் நடிப்பில் இமான் இசைமைக்கும் இந்த படம் இருவரும் இணையும் நான்காவது திரைப்படம் . 

இப்படத்திற்கு  நிரவ் ஷா ஒளிபதிவு செய்கிறார் ,கலை இயக்கம் வீர சமர் ,படத்தொகுப்பினை ஆண்டனி எல்.ரூபன் மேற்கொள்கிறார்.

மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான பாரதிராஜா , சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்  இவர்களுடன் நட்டி(எ) நடராஜ், RK சுரேஷ் ,காமெடி நடிகர்களான சூரி , யோகி பாபு மற்றும் வேலராமமூர்த்தி ,நாடோடிகள் கோபால் , சுப்பு பஞ்சு , அர்ச்சனா , ரமா என  நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்  

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று எளிமையாக  தொடங்கியது !

நடிகர்கள் : 

சிவகார்த்திகேயன் , ,ஐஸ்வர்யா ராஜேஷ் , அனு இம்மானுவேல் ,பாரதிராஜா , சமுத்திரக்கனி
நட்டி(எ) நடராஜ், RK சுரேஷ் ,சூரி , யோகி பாபு, வேலராமமூர்த்தி ,நாடோடிகள் கோபால் , சுப்பு பஞ்சு , அர்ச்சனா , ரமா

தொழில்நுட்பக்குழு : 

இயக்கம் : பாண்டிராஜ்
தயாரிப்பு : சன் பிக்ச்சர்ஸ்
இசை : D .இமான்
ஒளிப்பதிவு :நிரவ் ஷா
கலை இயக்கம் :வீர சமர்
படத்தொகுப்பு : ஆண்டனி எல்.ரூபன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மது