Featured post

Mega Supreme Hero Sai Durgha Tej’s Pan-India Film Sambarala Yeti Gattu (SYG) Enters Crucial Schedule with

 Mega Supreme Hero Sai Durgha Tej’s Pan-India Film Sambarala Yeti Gattu (SYG) Enters Crucial Schedule with Peter Hein Spectacular Action Seq...

Tuesday, 9 September 2025

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில், பான்-இந்தியா திரைப்படம் “சம்பராலா ஏடிகட்டு (SYG)”

 *மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில்,  பான்-இந்தியா திரைப்படம் “சம்பராலா ஏடிகட்டு (SYG)” –  படத்தின் படப்பிடிப்பு,  பீட்டர் ஹெய்ன்(Peter Hein) வடிவமைப்பில், அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ளது !!*




மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பான்-இந்தியா திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு (SYG)”, படத்தின், மிக முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில்  துவங்கவுள்ளது.


இயக்குநர் ரோஹித் KP ( Rohith KP) இயக்கத்தில், K. நிரஞ்சன் ரெட்டி (K Niranjan Reddy ) – சைதன்யா ரெட்டி (Chaitanya Reddy ) ஆகியோர் தயாரிப்பில், பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பாக உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் ₹125 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இது சாய் துர்கா தேஜ் அவர்களின் இதுவரையிலான திரைப்படப் பயணத்தில், மிகப்பெரிய திரைப்படமாகும்.


செப்டம்பர் மாதத்தின் மத்தியில் துவங்கும் படப்பிடிப்பில், பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கும் அதிரடியான ஆக்ஷன் சீக்வன்ஸ்கள் படமாக்கப்படவுள்ளது. இதில் சாய் துர்கா தேஜ், ஒரு பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் மோதும் காட்சிகள் படமக்காப்படவுள்ளது. படத்தின் சினிமா அனுபவத்தை உயர்த்தும் வகையில், விரிவான CGI பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.


கடந்த இரண்டு ஆண்டுகளாக சாய் துர்கா தேஜ், தனது முழுமையான அர்ப்பணிப்புடன், சம்பராலா ஏடிகட்டு (Sambarala Yeti Gattu) படத்திற்காக உழைத்து வருகிறார். இந்த படம் அவருக்கு ஒரு புதிய திருப்புமுனையாகவும், உணர்ச்சிகரமான சவாலான கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது.


முதலில் தசரா வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்தாலும், தொழில்துறை வேலைநிறுத்தம் காரணமாக இப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. விரைவில் புதிய வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அறிவிக்க உள்ளனர்.


ஹனுமேன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பின், பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மிகச் சிறப்பான திட்டங்களில் ஒன்றாக SYG உருவாகி வருகிறது.


தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள சம்பராலா ஏடிகட்டு, ஒரு முக்கியமான பான்-இந்தியா ஆக்சன் -டிராமாவாக ரசிகர்களை கவரத் தயாராகி வருகிறது.


*நடிகர்கள்:*


சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜகபதி பாபு, ஸ்ரீகாந்த், சாய் குமார், அனன்யா நாகல்லா, ரவி கிருஷ்ணா.


*தொழில்நுட்பக் குழு:*


இயக்கம் & கதை: ரோஹித் KP

தயாரிப்பாளர்கள்: K. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி

நிறுவனம்: பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்

ஒளிப்பதிவு: வெற்றி பழனிசாமி

இசை: B. அஜனீஷ் லோக்நாத்

எடிட்டிங்: நவீன் விஜய கிருஷ்ணா

தயாரிப்பு வடிவமைப்பு: காந்தி நடிகுடிகர்

உடை வடிவமைப்பு: ஆயிஷா மரியம்

கிரியேட்டிவ் புரொடியூசர் : Y. சீதாராம்

No comments:

Post a Comment