Featured post

Samsari Sanyasi Review

Samsari Sanyasi Tamil Movie Review அந்த காலத்துல பாத்தீங்கன்னா ரெண்டு படம் ஒரே படமா release பண்ணிருக்காங்க. இது அப்போ ஒரு trend அ follow பண்...

Monday, 1 September 2025

ஹாலிவுட் குழுவுடன் இணையும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தி பாரடைஸ்” படக்குழு !!

 ஹாலிவுட் குழுவுடன் இணையும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தி பாரடைஸ்”  படக்குழு !!



நேச்சுரல் ஸ்டார் நானி – இதுவரை தோன்றியிராத  அதிரடி அவதாரத்தில்! ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ்  – ஸ்ரீகாந்த் ஒடேலா, சுதாகர் சேருகூரி, எஸ்.எல்.வி. சினிமாஸ் – இணையும் “தி பாரடைஸ்”  படம், ஹாலிவுட் குழுவுடன் இணைகிறது !!


நேச்சுரல் ஸ்டார் நானி, தனது மிகப்பெரிய கனவு முயற்சியான “தி பாரடைஸ்” படத்திற்காக முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறார். தசரா புகழ் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க, சுதாகர் சேருகூரி தயாரிப்பில், எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் இந்த ஆக்சன் டிராமாவை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் இரண்டு அதிரடியான பர்ஸ்ட்-லுக் போஸ்டர்கள், அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் என்கிற பட உருவாக்க காட்சிகள், படத்துக்கான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது. 


இந்த ஆண்டு வெளியான முதல் கிளிம்ப்ஸே காட்சியிலேயே, தி பாரடைஸ் படக்குழு இப்படம்  உலகளாவிய  ரசிகர்களுக்கானது என்பதை வெளிப்படையாகக் காட்டிவிட்டது. பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியீடு செய்வது முதல், துணிச்சலான புரமோஷன் வரை – ஒவ்வொரு நடவடிக்கையும், இந்த படம் இந்தியாவுக்கு மட்டும் அல்ல, உலகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை வலியுறுத்துகிறது.


அந்த முயற்சியை மேலும் ஒரு படி முன்னேற்றி, ஹாலிவுட் #ConnekktMobScene நிறுவனத்தின் க்ரியேட்டிவ் கண்டெண்ட் எக்ஸிக்யூட்டிவ் வைஸ் பிரெசிடெண்ட் அலெக்ஸாண்ட்ரா E. விஸ்கோந்தியை சந்தித்து, ஹாலிவுட் ஒத்துழைப்பை ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய விவரங்கள் தற்போது வெளிப்படையாக அறிவிக்கபடவில்லை என்றாலும், இந்த சந்திப்பு,  தி பாரடைஸ் படத்தை, சர்வதேச தரத்தில் நிலைநிறுத்தும் படக்குழுவின் உறுதியை, மேலும் வலுப்படுத்துகிறது.


படக்குழுவினர் தொடக்கம் முதல், இந்த படத்தை சாதாரண பிராந்திய வெளியீடாக அல்லாமல், உலகளாவிய நிகழ்வாகவே நடத்தி வருகின்றனர். பல மொழிகள், பல சினிமா மார்க்கெட்டுகள், பல தரப்பான ரசிகர்களிடம் தீவிர விளம்பரங்கள் மூலம் இயற்கையான ஆர்வத்தை உருவாக்கியதால், படம் வெளியாவதற்கு முன்பே அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.


2026 மார்ச் மாதம் உலகளவில் வெளியாகவுள்ள நிலையில், வர்த்தக வட்டாரங்கள் தி பாரடைஸ் படத்தை இந்தியாவில் இருந்து வெளிவரும், மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன. மேலும் சமீபத்திய தகவலின்படி, இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகரை படத்தில் இணைத்து, சர்வதேச மொழி பதிப்புகளை உலகம் முழுவதும் வெளியிட ஆலோசனைகள் நடந்து வருகின்றன என்றும் கூறப்படுகிறது. இது ஏற்கனவே மாபெரும் கனவாக உள்ள இந்த திரைப்படத்திற்கு இன்னொரு உலகளாவிய பரிமாணத்தை சேர்க்கும்.


இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் ராகவ் ஜுயால் தனது டோலிவுட் அறிமுகத்தை நிகழ்த்தவுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை C.H.சாய் மேற்கொள்கிறார். இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். எடிட்டர் நவீன் நூலி, புரடக்சன் டிசைனர் அவிநாஷ் கொல்லா ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.


“தி பாரடைஸ்” படம், 2026 மார்ச் 26 அன்று தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் உட்பட உலகளவில் எட்டு மொழிகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment