Featured post

அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி”(Con City) பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்

 *அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி”(Con City) பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் ...

Sunday, 7 September 2025

SIIMA சிறந்த அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ்

 SIIMA சிறந்த அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !! 



பாக்யஸ்ரீ போஸ், இந்தாண்டு துபாயில் நடைபெற்ற SIIMA விருதுகளில் சிறந்த அறிமுக நடிகை விருதை கைப்பற்றி, வெள்ளித்திரையில்  தன் வருகையை அழுத்தமாக பதித்துள்ளார் !! 


தென்னிந்திய திரைப்பட உலகில் மிஸ்டர் பச்சன் மற்றும் கிங்டம் படங்கள் மூலம் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போஸ், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து, முழு திரைத்துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளார்.


தற்போது, துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் காந்தா, மேலும் ராம் பொத்தினேனி ஜோடியாக  நடிக்கும் “ஆந்திரா கிங் தாலுகா” உள்ளிட்ட பல்வேறு படங்கள் அவரது நடிப்பில் விரைவில் வெளியாக காத்திருக்கின்றன. இந்த வரிசையோடு, தென்னிந்தியாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக உருவெடுத்துள்ள அவர் தன்னம்பிக்கையுடன் வலம்வருகிறார்.


ஔரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ, மிகச்சிறந்த நடிகையாக வேண்டுமென்கிற தன் கனவை அடைய, விடாமுயற்சியுடன் உழைத்து வருகிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான நடிப்பை வழங்க வேண்டும் என்ற ஆவலுடன் உழைத்து வருகிறார்.


SIIMAவில் சிறந்த அறிமுக நடிகை விருது வென்றிருப்பது, இந்த பன்முகத் திறமை கொண்ட நடிகை பாக்யஸ்ரீ போஸுக்கு ஒரு தொடக்கமே. அவரை பெரும் திரையில் கண்டு ரசிக்க, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment