புதுரக க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'பெண்கோடு'
பெண்கோடு படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை ஜித்தன் ரமேஷ் வெளியிட்டார்
மலையாளத்தில் இப்போது புதிய போக்கில் மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமலேயே கதையின் அடர்த்தியை நம்பி உருவாக்கப்பட்டு ஒரு வணிக பரப்பை எட்டி உள்ளன.அந்த வகையிலான வரிசையில் உருவாகியுள்ள படம் தான் 'பெண்கோடு'.
ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை;இரண்டும் தனித்தனியானவை. என்கிறார் தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி.
ஆண் இரண்டு கண்களால் பார்ப்பதைப் பெண் ஓர் இதயத்தால் பார்க்கிறாள்.ஆண் அழகை குணமாகப் பார்க்கிறான். பெண்ணோ குணத்தை அழகாகப் பார்க்கிறாள்.இப்படி ஆண், பெண் இடையே பார்வையில் எண்ணங்களில் வேறுபாடு உண்டு. இப்படி பெண்களுக்கு என்று பிரத்தியேகமான சில எண்ணங்கள் உள்ளன.அவர்களுக்கு என்று குறியீடுகள், சங்கேதங்கள், சமிக்ஞைகள் உள்ளன. அவற்றை அவர்களின் உலகத்தில் உள்ளே நுழைந்து பார்த்தால்தான் அறிந்து கொள்ள முடியும்.
அவற்றின் அடிப்படையில் உருவாகி இருப்பது தான் இந்த 'பெண்கோடு'
மலையாளப் படக்குழுவினர் உருவாக்கி உள்ள இப்படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் பரபரப்பான க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை அருண் ராஜ் பூத்தணல் எழுதி இயக்கியுள்ளார்.
ஆஸ்த்திரியா மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் JNKL கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரவிதா ஆர் பிரசன்னா, ஜெய் நித்ய காசி லட்சுமி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஜீத்து ஜோசப்பின் லைஃப் ஆஃப் ஜோசக்குட்டி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அருண் சாக்கோவும், இமை , மதர், வின்சென்ட் செல்வா இயக்கிய கம்மாட்டிக்களி திரைப்படத்தில் அறிமுகமான சரீஷ் தேவும் இப்படத்தில் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். லட்சுமி சாந்தா மற்றும் சோனா ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர்.
இவர்களைத் தவிர, ஓச்சாயி பட தயாரிப்பாளரும் நடிகருமான திரவிய பாண்டியன் அவர்கள்,கார்த்திகா ஸ்ரீராஜ், உன்னி காவியா, எபின் வின்சென்ட், ஷம்ஹூன், ஜார்ஜ் தெங்கனாந்தரத்தில், ஜோஸ் நடத்தி பறம்பில், பேபி அதிதி , சந்தீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
அருண் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தினேஷ் பாண்டியன் இசையமைத்துள்ளார்.
அர்ஜுன் ஹரீந்திரநாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
கலை இயக்குநராக உன்னி கோவளமும்,
தயாரிப்பு மேலாளராக எபின் வின்சென்ட்டும் பணியாற்றியுள்ளனர்.
நிர்வாகத் தயாரிப்பாளர்களாக அன்வர் கபூரான், திவ்யா வருண், பிந்து வின்சென்ட் ஆகியோர் செயலாற்றி உள்ளனர்
வயநாடு, ஊட்டி, திருவனந்தபுரம் ஆகிய கேரளாவின் பசுமை சூழ்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.படப்பிடிப்பு முடிந்து மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை ஜித்தன் ரமேஷ் வெளியிட்டார். அப்போது படக்குழுவினரைப் பற்றி விசாரித்தறிந்ததுடன் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் .
நவம்பர் முதல் வாரத்தில் JNKL ரிலீஸ் மூலம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியாகும்.
No comments:
Post a Comment