Featured post

Madharaasi Movie Review

 Madharaasi Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம madharasi  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு  தான் release ஆய...

Friday, 5 September 2025

சென்னையில் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலில் பெஸ்டிவலை F1 சாம்பியன் நரேன் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்!*

 *சென்னையில் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலில் பெஸ்டிவலை F1 சாம்பியன் நரேன் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்!*








சினிமா மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டின் கொண்டாட்டமாக செப்டம்பர் 3 மற்றும் 4, 2025 ஆகிய தேதிகளில் சென்னை, டி.நகரில் உள்ள ஏஜிஎஸ் சினிமாஸில் RUC ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல் தொடங்கியது. இந்த இரண்டு நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை, ஆங்கிலம் மற்றும் தமிழில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாக்பஸ்டர் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களின் மூலம் பார்வையாளர்கள் பெரிய திரையில் விளையாட்டின் சிலிர்ப்பை அனுபவித்தனர்.


இந்த நிகழ்வு ரைஸ் அப் சாம்பியன்ஷிப் ஃபவுண்டேஷனின் (RUC) அதிகாரப்பூர்வ தொடக்கமாகவும் அமைந்தது.  விளையாட்டு- கலாச்சாரம், பொழுதுபோக்கு மற்றும் லைஃப்ஸ்டைல் என பன்முகத்தன்மை கொண்ட நிகழ்வாகவும் இது அமைந்தது. F1 சாம்பியன் நரேன் கார்த்திகேயன் இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார். RUC-ன் அதிகாரப்பூர்வ ஜெர்சியையும் அவர் வெளியிட்டார். விளையாட்டு, சினிமா மற்றும் வணிகம் என பல்வேறு பின்னணிகளைக் கொண்ட குழுவால் நிறுவப்பட்டது RUC என்பது குறிப்பிடத்தக்கது. 


விளையாட்டின் புது முகத்தில் இருந்து காலத்தால் அழியாத கிளாசிக்ஸ் வரை இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒவ்வொரு மறக்க முடியாத அனுபவத்தை இந்த நிகழ்வு கொடுத்தது. விளையாட்டு மைதானத்திற்கு அப்பாறட்ட விளையாட்டின் ஒற்றுமை, இன்ஸ்பிரேஷன் ஆகியவற்றையும் நிகழ்வு எடுத்துரைத்தது. அத்லெட்ஸ், ரசிகர்கள், ஃபிலிம்மேக்கர்ஸ், பிசினஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் என அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும் இந்த நிகழ்வில் ஒன்றிணைந்தனர். 


நிகழ்வு குறித்து ஸ்போர்ட்ஸ் கியூரேட்டர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் RCU லீடர்ஷிப்பிம் அங்கமாக இருக்கும் வீரபாபு வேலாயுதம், "விளையாட்டும் பொழுதுபோக்கும் சரிசமமாக சந்திக்கும் RCU ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் போன்றதொரு நிகழ்வு அரிதானது. போட்டியின் தீவிரம், அதற்கு தயாராவது மற்றும் வெற்றிகளுக்குப் பின்னால் உள்ள தனிப்பட்ட பயணங்கள் என காட்டும் படங்களை பார்வையாளர்களுக்கு திரையிட தேர்ந்தெடுத்தோம்.  விளையாட்டு வீரர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கு திரைக்கு அப்பால் உரையாடலை உருவாக்கும் விதமாகவும் சென்னை மீதான அன்பை அதிகரிக்கும் விதமாகவும் இந்த நிகழ்வு இருக்கும்” என்றார்.


வளர்ந்து வரும் மற்றும் தொழில்முறை விளையாட்டுகளை ஊக்குவிக்கவும், விளையாட்டு வீரர்களின் திறமையைக் கண்டறிந்து வளர்க்கவும், நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் விளையாட்டை ஒருங்கிணைப்பது இதன் நோக்கமாகும்.  போட்டிகளை நடத்துவது மட்டுமல்லாமல், வாய்ப்புகளை உருவாக்குவது, புதிய திறமைகளுக்கான கதவுகளைத் திறப்பது மற்றும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அமைப்புகளுடன் இணைப்பது இதன் குறிக்கோள்.


அறக்கட்டளையின் தொடக்கத்தைப் பற்றி RUC நிறுவனர் மற்றும் சீரியல் தொழில்முனைவோர் செல்வகுமார் பாலு பேசியதாவது, “காலங்காலமாக விளையாட்டிற்கு என நாம் வகுத்து வைத்திருக்கும் எல்லைகளை மறுவரையறை செய்வதற்காக ரைஸ் அப் சாம்பியன்ஷிப் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. தொழில்முறை விளையாட்டு வீரர்களை ஆதரிப்பது மட்டுமல்லாமல், விளையாட்டு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள  திறமையாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் விரும்புகிறோம். விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார உலகங்களை இணைப்பதன் மூலம் விளையாட்டு வீரர்கள், படைப்பாளிகள் மற்றும் பிராண்டுகள் என அனைத்தும் ஒன்றாக வளரும் இடமாகவும் இது இருக்கும்" என்றார். 


அறக்கட்டளையின் தொடக்கத்தை அடுத்து செப்டம்பர் 26, 27 மற்றும் 28, 2025 ஆகிய தேதிகளில் மற்றொரு முக்கிய நிகழ்வான RUC பிக்கிள்பால் பை தி பே சென்னையில் நடைபெறுகிறது. இந்திய பிக்கிள்பால் சங்கத்துடன் இணைந்து இந்தியா இதற்கு முன் பார்த்திராத அளவில் பிக்கிள்பாலை அறிமுகப்படுத்துகிறது. இந்த போட்டியில் 25,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்வும் நடத்தப்படுகிறது. 


ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளில் இந்தப் போட்டி இடம்பெறும். ஒவ்வொன்றிலும் 32 எண்ட்ரி இருக்கும். போட்டிகள் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்படும். வலுவான டிஜிட்டல் கவரேஜ் மற்றும் இன்ஃபுளூயன்சர் பார்னர்ஷிப்போடு இந்தியாவின் முதல் சர்வதேச அளவிலான பிக்கிள்பால் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த இரண்டு நிகழ்வுகளின் மூலம், சென்னையிலும் அதற்கு அப்பாலும் விளையாட்டு எப்படி இருக்கிறது, எப்படி கொண்டாடப்படுகிறது மற்றும் ஆதரிக்கப்படுகிறது என்பதை RUC அறக்கட்டளை மறுவரையறை செய்துள்ளது.  விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரத்தின் சந்திப்பில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம் விளையாட்டு மற்றும் அதன் கதைகள் இரண்டிலும் RUC ஒரு புது அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment