Tamil Nadu theatrical rights of #Mandaadi have been bagged by @RedGiantMovies_ #Mandaadi in cinemas worldwide on September 10, 2026 @sooriofficial #Suhas #Sathyaraj @Mahima_Nambiar 3rdEyeReports | The Third Eye Reports creates Brands & Branding of Celebrities, Products, Services in different fields Stay tuned for latest blogs & video updates on latest happenings...
Featured post
கன்னடத்து பைங்கிளி' படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா
*'கன்னடத்து பைங்கிளி' படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா* *கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமான...
Showing posts with label Hero surya. Show all posts
Showing posts with label Hero surya. Show all posts
Friday, 13 March 2020
Friday, 27 September 2019
காப்பான் படத்தில் விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு!
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'காப்பான்' படத்தில் விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகளோடு நேரில் சந்தித்தார். பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை அப்பட்டமாகப் படமாக்கி, விவசாயிகளின் புரட்சிக் குரலாக முழங்கி இருக்கும் நடிகர் சூர்யாவையும் இயக்குநர் கே.வி.ஆனந்தையும் விவசாயிகள் பாராட்டினார்கள். கடைக்கோடி மக்களுக்கும் புரியும் வண்ணம் விவசாய பிரச்னைகளை உரத்துச் சொல்லி, பெரிய அளவிலான கார்பரேட் நிறுவனங்கள் பின்னுகிற சதி வலைகளை அம்பலப்படுத்தி காப்பான் படம் மிகப்பெரிய விவசாயப் புரட்சிக்கே வித்திட்டிருக்கிறது. விவசாயிகள் நலனில் இவ்வளவு அக்கறையோடு காப்பான் படத்தில் பங்களிப்பு செய்த நடிகர் சூர்யாவுக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்துக்கும் விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பாராட்டினார்கள். விவசாயத்தைச் சூழும் ஆபத்துகளை எதிர்த்து தொடர்ந்து போராடும் தங்களுக்கு காப்பான் படம் மூலமாக மிகுந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் சூர்யா ஏற்படுத்தி இருப்பதாகவும் சொன்ன விவசாய சங்க நிர்வாகிகள் டெல்டா மாவட்டங்களைப் பார்வையிடவும் அழைப்பு விடுத்தார்கள்.
Sunday, 14 July 2019
கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள் - நடிகர் சூர்யா
தேசிய கல்விக்கொள்கை வரைவு கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள் - நடிகர் சூர்யா பத்திரிகையாளர் சந்திப்பில்
அரசு பள்ளி மாணவர்கள் குறித்து பேச்சு!!
தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை பற்றி அகரம் பவுண்டேஷன் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பத்திரிகையாளரிடம் பேசினார். இதில் அவர், " மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை மக்களிடம் சென்று இன்னும் முழுமையாக சேரவில்லை, இன்னும் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படாத காரணத்தினால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தேறியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த கல்விக்கொள்கை வரைவில், 3ஆம் வகுப்பு முதல் நுழைவு தேர்வு, கல்வி தேர்வு என தேர்வுகள் வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். சரியான சமமான கல்வி இல்லாமல் எப்படி கல்வி தேர்வுகள் வைக்க முடியும்? இந்த புதிய கல்விக்கொள்கை என்பது முப்பது கோடி மாணவர்களின் வாழ்க்கை பற்றியது. இந்த கல்விக்கொள்கை பற்றிய கருத்துக்கள் மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றால் மட்டுமே மாற்ற முடியும் என்கின்ற போது பெற்றோர்களும், ஆசிரியர்களும் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது ஓராசிரியர் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது, அவ்வாறு இருக்கையில் எப்படி அங்கு படிக்கும் பிள்ளைகள் இதுபோன்ற கொள்கைகளுக்கு ஏற்ப தேர்வுகளை எழுத முடியும். ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்கின்றனர், இதுபோன்று மொழிகளை திணிப்பதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் . ஏனெனில் அரசு பள்ளிகளில் இதுபோன்ற கல்விகள் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. 5-ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு நடத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும், 6.5 கோடி மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள் . 60% மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள், புதிய கல்விக்கொள்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது மிகவும் அவசியம், அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை, 10 ஆண்டுகளாக ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் 30% மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள்?
பள்ளிகள் மட்டுமல்லாது கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கும் நுழைவுத் தேர்வு வைத்துள்ளனர். எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு நடத்தினால் மாணவர்கள் எப்படி படிக்க முடியும், ஒரு வேலை படிக்க முடியாமல் அவர்கள் தேர்வுகளில் தோல்வியடைந்தால் பின் எப்படி அனைத்து மாணவர்களும் படிக்க முடியும். நுழைவுத் தேர்வுகளால் தனியார் பயிற்சி மையங்கள் அதிகரிக்கும், தனியார் பயிற்சிப்பள்ளிகள் நாடு முழுவதும் ரூ.5000 கோடி வருமானம் ஈட்டுகின்றன, கற்பித்தல் என்ற முறைக்கு பதில் கோச்சிங் சென்டர் முறை வரும் .அதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பின் பள்ளி கல்லூரிகளின் தேவைகள் இல்லாமல் போய்விடும்." என அவர் கூறினார்.
Saturday, 23 March 2019
Subscribe to:
Posts (Atom)



























