Featured post

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!

 *இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!* *பத்து வருடங்களுக்க...

Showing posts with label Kabadadhaari Film. Show all posts
Showing posts with label Kabadadhaari Film. Show all posts

Friday, 22 November 2019

கபடதாரி படப்பிடிப்பில் சிபிராஜ் மற்றும் படக்குழுவினருடன் இணைந்தார் நந்திதா

'கபடதாரி' படப்பிடிப்பில் சிபிராஜ் மற்றும் படக்குழுவினருடன் இணைந்தார் நந்திதா.  

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் 'கபடதாரி'யை, கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்சயன் தயாரிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகனாக சிபிராஜ் இதுவரை நடித்திராத முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக நந்திதா ஒப்பந்தமாகியிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி, சிறிதும் சிதையாமல் நடிக்கும் திறமை வாய்ந்த நந்திதா, ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் படக்குழுவினருடன் இணைந்தார்.

இவர்களுடன் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் மற்றும் இன்னும் சில பிரபலங்களும் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் :-


கதையை எம். ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதை & வசனத்தை ஜான்  மகேந்திரன் & டாக்டர்.ஜி. தனஞ்சயன் கவனிக்கிறார்கள். ஒளிப்பதிவை ராசமதியும், கலை இயக்குநராக விதேஷும் பணியாற்றுகிறர்கள்.
சைமன் கே கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு,
பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்கிறார். வணிகத் தலைமையை எஸ். சரவணன் ஏற்க,
நிர்வாக தயாரிப்பை என்.சுப்ரமணியன் ஏற்கிறார். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க, தயாரிப்பு உருவாக்கம் டாக்டர்.ஜி. தனஞ்சயனும், தயாரிப்பை லலிதா  தனஞ்சயனும் செய்கிறார்கள்.


நவம்பர் 1-ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பமான ‘கபடதாரி’ 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகளவில் வெளியாகும்.

Thursday, 24 October 2019

சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு 'கபடதாரி' என்று பெயர் அறிவிப்பு

கிரியேட்டிவ்  என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழங்கும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. தற்போது அப்படத்திற்கு 'கபடதாரி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘கபடதாரி’ என்றால் பாசாங்குக்காரன்/வேஷக்காரன் என்று பொருள். சிபிராஜுடன் நாசரும் நடிப்பதாக முடிவாகிவிட்ட நிலையில் சமீபத்தில் சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா ஒப்பந்தமாகியிருந்தார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.


சிபிராஜ் இதுவரை நடித்த ஏற்று நடித்த பாத்திரங்களை விட இந்த படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் Dr. கோ. தனஞ்செயன். லலிதா தனஞ்செயன் படத்தைத் தயாரிக்க, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், Dr.கோ. தனஞ்செயனும் ஏற்கிறார்கள். கலை இயக்குநராக விதேஷ் பணியாற்ற, சில்வா சண்டை காட்சிகளை அமைக்க,  பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணியைச் செய்கிறார். சைமன் கே கிங் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து மற்றும் கு. கார்த்திக் எழுதுகிறார்கள். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். வணிகத்தை எஸ்.சரவணன் தலைமையேற்க, நிர்வாக தயாரிப்பு என்.சுப்பிரமணியன் கவனிக்கிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு  வரும் நவம்பர் 1-ஆம் தேதி துவங்குகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் நகரத்தில் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று மார்ச் 2020-ல் உலகளாவிய திரையரங்கில் வெளியிடப்படும்.