Featured post

A LEGEND RETURNS TO THE SILVER SCREEN

 *A LEGEND RETURNS TO THE SILVER SCREEN* *M.S. Subbulakshmi Amma’s Extraordinary Life to be Immortalised in Cinema* Some voices are heard. S...

Showing posts with label director Ragava Lawrence. Show all posts
Showing posts with label director Ragava Lawrence. Show all posts

Sunday, 2 June 2019

காஞ்சனா ஹந்தி ரீமேக் தயாரிப்பாளர் தந்த மரியாதை ...மீண்டும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்


தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.
 
பின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.
 
அவரது விலகல் முடிவு இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல ரசிகர்கள் மீண்டும் ராகவா லாரன்ஸ்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற ராகவா லாரன்ஸ்,தயாரிப்பு நிறுவனம் மீண்டும் பேச வருவதாகவும், தன் வேலைக்கு உரிய சுயமரியாதை கிடைத்தால் மீண்டும் படத்தை இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.
 
மும்பையிலிருந்து சென்னை வந்து ராகவா லாரன்ஸை சந்தித்த தயாரிப்பு நிறுவனத்தினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது. 
தன்னைத் தேடி வந்து பேசியதாலும்,அக்ஷய் குமார் ரசிகர்கள், என் ரசிகர்கள் என பலரும் கேட்டுக் கொண்டதாலும் மீண்டும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார்.

Sunday, 19 May 2019

நேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்



எளிய மக்களின் வாழ்வாதாரத்தை நொடிப்பொழுதிற்குள் நொடித்துப் போட்டது கஜா புயல். புயலின் கோரத்தாண்டவத்தில் வீடிழந்தவர்கள் பலர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு தன் சார்பாக வீடுகள் கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அறிவித்தது போலவே அந்தப்பணிகளைச் சரியாகச் செய்தும் வருகிறார். முதல் வீடு சமூக சேவகர் ஆலங்குடி  515   கணேஷன் என்பவர்க்கு கட்டிக் கொடுத்து சென்றவாரம் தான் கிரகப்பிரவேஷம் நடைபெற்றது. தற்போது  வீடிழந்து பெரும் துயரை கண்ட தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்துவரும்  செல்லகுஞ்சி  பாட்டிக்கும் வீடு கட்டிக் கொடுத்து பாட்டிக்கு தண்ணீர் கொடுத்த சோகத்தை ஆனந்தக் கண்ணீரால் ஆற்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ். அன்று பாட்டி வீடிழந்ததும் உலக அளவில் பாட்டியின் நிலைமை பேசப்பட்டது. பல நல்ல உள்ளங்களின் அனுதாபமும், அக்கறையும் லாரன்ஸ் மூலமாக இன்று  நிறைவேறியுள்ளது. இன்னும் இந்த மக்கள் பணிகள் தொடரும் என்று கூறுகிறார் ராகவா லாரன்ஸ்.






Sunday, 12 May 2019

ராகவா லாரன்ஸின் " தாய் " அன்னையர் தின சிறப்பு பாடல் வெளியீட்டு விழா
































நடிகர் ராகவா லாரன்ஸ் க்காக பாட்டு பாடி அசத்திய லாரன்ஸின் அம்மா | Thaai Album Song

Celebrities Spotted at Thaai Album Song Launch | Thaai Album Song

கண் கலங்க வைத்த நடிகர் லாரென்ஸ் ன் பேச்சு | Actor Ragava Lawrence

அன்னையர் தினத்தில் தாய்மார்களின் கலங்க வைக்கும் பேச்சு

உலகத்தை கட்டு படுத்தும் ஆயுதம் எது தெரியுமா ? | Director K

பாட்டு பாடும் போது அழுதுடுவேன் | Lyricist Arivazhagan


Tuesday, 30 April 2019

ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப் படுகிறது

ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப் படுகிறது...லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்...சரத்குமார் நடித்த வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்..கதா நாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்...
படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.