Featured post

காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி

 *காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி.* *நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் 'முருகா' அசோக் கதையின் நா...

Saturday, 25 February 2023

Following the success of 'Dha Dha 87' and 'Powder', director Vijay Sri G

 *Following the success of 'Dha Dha 87' and 'Powder', director Vijay Sri G who is making Mohan's 'Haraa' has commenced his next project*


*Amala Paul's brother Abhijit Paul is sharing screen space with Anithra Nair*





Director Vijay Sri G has been conveying important messages through his movies. 'Dha Dha 87' spoke about the love of transgenders, 'Powder' was based on the concept that women should be ready to protect themselves, while his upcoming 'Haraa' starring 'Silver Jubilee Star' Mohan conveys that children should be taught law right from a young age. 


Following this, now the director is working on a project about the importance of manufacturing medicine for Spinal Muscular Atrophy in India. The movie is produced Ravi Raayan on V R International Movies banner. 


Recently, we all have read and seen in the news that an anonymous man donated Rs 11 crore to a Kerala child who was diagnosed with Spinal Muscular Atrophy. The cost of this injection is a whopping Rs 17.5 crore.


Not long ago, many people had helped a child suffering from the same muscular atrophy in Tamil Nadu as well. 


Vijay Sri G, the director of films such as 'Dha Dha 87', 'Powder', and 'Haraa', is directing the movie, which focuses on Spinal Muscular Atrophy and why its treatment costs so much.


Director Vijay Sri G said that 75 per cent shooting for the film has been completed and the title will be released soon.


The director further revealed that the film will deal with the struggles of a mother of a child suffering from Spinal Muscular Atrophy.


"In a country with a large population like India, there is no injection for Spinal Muscular Atrophy. We have to import it from countries like the United States at a high price. This situation must change. While reaching the Sun and the Moon is important, Indian governement which aims to become a superpower should concentrate on manufacturing such life saving medicines in India at a low cost. The movie is based on this concept," Vijay Sri G said.  


Anithra Nair plays the child's mother in the film. Baby Vedashya plays her daughter. Amala Paul's brother Abhijit Paul, Arjun Raj, Vijay TV Deepa, Silmisham Siva, Ravi Raayan as antagonist, Rail Ravi as Anithra's father, Powder Ramarajan, K R Arjun, Bank Rajesh and many other actors are also part of the cast.


The film will feature a leading actor as a lawyer to convey the message of the movie in a compelling and relatable manner.


Prahath Muniyasamy is the cinematographer and Rashaanth Arwin is composing the music. Nikil Murukan handles public relations.


Directed by Vijay Sri G and produced V R International Movies Ravi Raayan, the title of the movie based on Spinal Muscular Atrophy will be announced soon. 


***

தாதா 87', 'பவுடர்' வெற்றிப் படங்களை தொடர்ந்து மோகன் நடிக்கும் '

 *'தாதா 87', 'பவுடர்' வெற்றிப் படங்களை தொடர்ந்து மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தை இயக்கும் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த புதிய திரைப்படம்*


*அனித்ரா நாயருடன் இணையும் அமலா பாலின் சகோதரர் அபிஜித் பால்*

 

திருநங்கைகளின் காதலை சொல்லும் 'தாதா 87', பெண்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்ட 'பவுடர்', பள்ளி பருவத்திலிருந்து மாணவர்களுக்கு சட்டத்தை கற்பிக்க வேண்டும் என்கிற கருத்தோடு வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில் உருவாகும் 'ஹரா' போன்ற படங்களின் மூலம் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வரும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, தசை சிதைவு நோயின் மருந்தை இந்தியா தயாரிக்க வேண்டும் என்கிற கருத்தை முன்னிறுத்தி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். 




இந்த படத்தை வி ஆர் இன்டர்நேஷனல் மூவிஸ் ரவி ராயன் தயாரிக்கிறார்.


சமீபத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த குழந்தைக்கு தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மனிதர் ஒருவர் ரூ 11 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளார் என்பதை நாம் அனைவரும் செய்தியில் படித்திருப்போம், பார்த்திருப்போம். 


இந்த தசை சிதைவு நோயயை குணப்படுத்தும் ஊசியின் விலை ரூ 17.5 கோடியாகும். 


தமிழகத்திலும் இதே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு சமீபத்தில் பலர் உதவி செய்தனர். 


தசை சிதைவுநோய் பற்றியும் அதன் சிகிச்சைக்கு ஏன் இவ்வளவு செலவு ஆகிறது என்பதையும் மையமாக வைத்து 'தாதா 87', 'பவுடர்' மற்றும் 'ஹரா' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். 


இந்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி கூறியுள்ளார். 


தசை பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தாய் படும் கஷ்டங்களை குறித்து இந்த படம் பேசும் என்று இயக்குநர் மேலும் தெரிவித்தார். 


"இந்தியா போன்ற அதிக ஜனத்தொகை கொண்ட நாட்டில் இதற்கான ஊசி கிடைப்பதில்லை. இதை அதிக விலை கொடுத்து அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். சூரியன் மற்றும் சந்திரனுக்கு செல்வது எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல இந்தியா வல்லரசு நாடாக முன்னேற இது போன்ற உயிர் காக்கும் மருந்துகளை குறைந்த செலவில் உள்நாட்டிலியே தயாரிக்க வேண்டியதும் அவசியம் என்பது தான் இந்த படத்தின் மையக்கரு," என்று விஜய் ஸ்ரீ கூறியுள்ளார். 


பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாக அனித்ரா நாயர் இப்படத்தில் நடிக்கிறார். அவரது மகளாக பேபி வேதாஷ்யா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் அமலா பாலின் சகோதரர் அபிஜித் பால், அர்ஜுன் ராஜ், அனித்ரா தந்தையாக ரயில் ரவி, விஜய் டிவி தீபா, சில்மிஷம் சிவா, வில்லனாக ரவி ராயன், பவுடர் ராமராஜன், கே.ஆர்.அர்ஜூன், பேங்க் ராஜேஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். 


படத்தின் கருத்தை அழுத்தமாகவும் அனைவரையும் சென்று சேரும் வகையிலும் சொல்வதற்கு வழக்கறிஞராக ஒரு முன்னணி நடிகர் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். 


ரஷாந்த் ஆர்வின் இசையமைக்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் மேற்கொள்கிறார். 


விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில், வி ஆர் இன்டர்நேஷனல் மூவிஸ் ரவி ராயன் தயாரிப்பில் தசை சிதைவு நோயை மையமாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 


***

இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் இணையும் இசையமைப்பாளர்

 இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் இணையும் இசையமைப்பாளர் தர்புகா சிவா 


'தேஜாவு' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் திரைப்படத்தை ழென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழும் ஆர்கா என்டெர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். 


அஸ்வின் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, பட தொகுப்பாளராக அருள் சித்தார்த் ஆகியோர் ஒப்பந்தம் செயப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. 




இந்நிலையில் 'கிடாரி', 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'முதல் நீ முடிவும் நீ' ஆகிய படங்களில் தனது பாடல்கள் மூலம் முத்திரையை பதித்து இசை ரசிகர்களை தன் வசப்படுத்திய தர்புகா சிவா இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் பணியாற்றுவது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும், மேலும் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பக்கபலமாக அமையுமென்று தயாரிப்பாளர் புகழ் தெரிவித்துள்ளார். 


இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், வரும் நாட்களில் அது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைப்பிரதேசங்களில் நடக்கும் ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம்

 மலைப்பிரதேசங்களில் நடக்கும் ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம்  " மூர்க்கன் 

K. N. பைஜூ  இயக்கி நாயகனாக நடிக்கும்  " மூர்க்கன் "

நவகிரக சினி ஆர்ட்ஸ்  என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு " மூர்க்கன் " என்று வித்தியாசமாக டைட்டில் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் K.N. பைஜூ எழுதி, இயக்கி நாயகனாக நடிக்கிறார்.















மேலும் ரியாஸ்கான், சம்பத்ராம், கன்னட நடிகர் டென்னீஸ் கிருஷ்ணா, மலையாள நடிகர் ஜெயன் சேர்தலா, நாராயணன் குட்டி, விஜயராஜ், கோபிநாத், MJ. ஜேக்கப் மாம்பறா, கேசவ தேவ், அபாபில் ரவி ஆகியோறும் நடிக்கிறார்கள்.


மற்றும் வில்லன் காதபாத்திரத்தில் மூன்று சைனீஸ் நடிகர்கள் நடிக்கின்றார்கள். கதாநாயகியாக நடிக்க ஹிந்தியில் பிரபல நாயகியிடம் பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது.


ஒழிப்பதிவு  - ராஜாராவ், கலை இயக்குனர் பி சுப்புரமணியம், மேக்கப் K R கதிர்வேல், ஆடை சுகேஷ் தானுர்,

எடிட்டிங் - K N B,

பாடல்கள்  - சிநேகன், தயாரிப்பு நிர்வகம் ஜேக்கப் மாம்பறா,

தயாரிப்பு மேற்பார்வை - R. நாகராஜ்,

மக்கள் தொடர்பு  - மணவை புவன்

தயாரிப்பு - நவகிரக சினி ஆர்ட்ஸ்.


படம் பற்றி இயக்கி, நாயகனாக நடிக்கும் K.N. பைஜூ கூறியதாவது....


இந்த படம் ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் கதை.

மலை பிரதேசத்தில் மர்மக் கொலைகள் நடக்கும் இடத்திற்கு நான்கு நண்பர்கள் வந்து மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் மர்மமான முறையில் சில ஆபத்தான பிரச்சனையில் சிக்கி திரும்பி போக முடியாமல் தவிக்கிறார்கள்.


இந்த மர்ம கொலைகளை செய்வது யார்? எதற்காக செய்கிறார்கள்? இறுதியில் நண்பர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பது தான் படத்தின் திரைக்கதை.


கர்நாடக மற்றும் தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறோம்.

படப்பிடிப்பு குற்றாலாம் மற்றும் பெங்கலூர் ஆகிய இடங்களில் விருவிருப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார் இயக்குனர் K.N. பைஜூ.

Friday, 24 February 2023

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி இணையும் “சப்தம்”படத்தின் நாயகியாக

 *இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி இணையும் “சப்தம்”படத்தின் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார்!  



ஈரம் படக்கூட்டணியில் உருவாகும் சப்தம் படத்தின் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார்!  



“சப்தம்” திரைப்படத்தின் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் ஒப்பந்தம் !!



தமிழ் திரையுலகில் அனைவரும் திரும்பி பார்க்கும் வெற்றியை ஈரம் படம் மூலம் தந்த இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி இணையும் சப்தம் படத்தில் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன்  இணைந்துள்ளார்.



Aalpha Frames  இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க,  இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடித்து வரும் திரைப்படம்  “சப்தம்”. தமிழ் சினிமாவில் “ஈரம்” படம் மூலம் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்த இந்த வெற்றிக்கூட்டணி இப்படத்தில்  மீண்டும் இணைந்துள்ளது. தற்போது இப்படத்தில் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார். 



இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை, திட்டமிட்டபடி படக்குழுவினர் இனிதே நிறைவு செய்தனர். விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதில் ஆதி லக்‌ஷ்மி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. 


நடிகை லக்‌ஷ்மி மேனன் இப்படத்தில் இணைந்தது குறித்த அறிவிப்பை ஒரு போஸ்டராக  தயாரிப்பு குழுவினர் பகிர்ந்திருந்தனர். ரசிகர்கள் வெகு உற்சாகத்துடன் இச்செய்தியினை பகிர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  


திரில்லர் படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் அறிவழகன். இப்படத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படத்தில் இந்த வெற்றிக்கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 



படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

நீதிமன்றம் மூலம் போராடி சாமானியன் டைட்டிலை வென்ற ராமராஜன் பட

 *நீதிமன்றம் மூலம் போராடி சாமானியன் டைட்டிலை வென்ற ராமராஜன் பட தயாரிப்பாளர்* 


*சாமானியன் டைட்டில் ராமராஜன் படத்திற்கே சொந்தம் ; நீதிமன்றம் உத்தரவு*


வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில்  தயாராகும் படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் R.ராகேஷ் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய  படங்களை இயக்கியவர்.








இந்த படத்தில் கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார். கடந்த வருடம் இந்தப்படத்தின் டைட்டில், டீசர் வெளியீட்டு விழா பிரமிக்கும் வகையில் நடைபெற்று படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.


தற்போது சாமானியன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. படத்தை வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடுவதற்கான வேலைகளில் தயாரிப்பு நிறுவனம் பரபரப்பாக ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் ‘சாமானியன்’ என்கிற டைட்டில் தங்களுக்கு தான் சொந்தம் என வேறு ஒரு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் சாமானியன் படத்தை வெளியிட தடை செய்து நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மனு செய்து இருந்தார்கள். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் எட்செட்ரா என்டர்டைன்மெண்ட்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் V மதியழகனுக்கு தான் இந்த டைட்டில் சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.


இந்த டைட்டில் பிரச்சனை, நீதிமன்றத்தின் மூலம் தங்களுக்கு கிடைத்துள்ள நியாயமான தீர்ப்பு குறித்து தயாரிப்பாளர் எட்செட்ரா என்டர்டைன்மெண்ட்ஸ் V மதியழகன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.


“இந்த படத்தை ஆரம்பித்த போது டைட்டில், டீசர் லான்ச் என பெரிய அளவில் தான் துவங்கினோம். அப்போதெல்லாம் யாரும் இந்த படத்தின் டைட்டிலுக்கு எதிராக சொந்தம் கொண்டாடிக்கொண்டு வரவில்லை. படப்பிடிப்பு துவங்கி பத்து நாட்கள் கழிந்த பிறகு நடன இயக்குனர் பாபி இந்த படத்தின் டைட்டில் உரிமை தன்னிடம் இருப்பதாக கூறினார். இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் இருவருமே, என் தரப்பு விளக்கம் எதுவுமே கேட்காமல் நான் பாபியிடம் இருந்து டைட்டிலை அபகரித்து விட்டதாக இந்த செய்தியை பெரிதுபடுத்தி விட்டார்கள். 


அவர்களை தொடர்புகொண்டு நான் பேசும்போது கூட என்னிடமும் நீங்கள் இதுகுறித்து விளக்கம் கேட்டு உண்மை என்ன என தெரிந்து கொண்ட பின்பு இப்படி பேசி இருக்கலாம்.. இந்த படத்தின் டைட்டிலை 2016ல் இருந்து புதுப்பித்து வருவதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. பாபி மாஸ்டரிடம் ஆவணம் எதுவும் இருந்தால் நீங்கள் அதை சமர்ப்பிக்க சொல்லுங்கள் என்று கூறியபிறகு தான் அவர்கள் தங்களது தவறை உணர்ந்தார்கள். இதனால் பாபி மாஸ்டருடன் மனக்கசப்பு தான் ஏற்பட்டது.. நான் இது குறித்து விளக்கத்தை அளிக்க முன்வந்தாலும் அதை கேட்கின்ற மனநிலையில் அவர் இல்லை.. அத்துடன் அந்த பிரச்சினை முடிந்தது..


அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்னொரு நபர் தாங்கள் ஏற்கனவே சாமானியன் என்கிற டைட்டிலில் ஒரு படத்தை எடுத்து வருவதாகவும் படத்தை முடித்து அதற்கு சென்சார் சான்றிதழும் வாங்கிவிட்டதாக கூறி எங்கள் படத்திற்கு சாமானியன் படத்தை பயன்படுத்துவதற்கு தடை கேட்டு நீதிமன்றத்தை அணுகினார்கள். 


இதையடுத்து  நாங்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராம நாராயணனிடம் சென்று இந்த படத்தின் டைட்டிலை பதிவு செய்து, தவறாமல் புதுப்பித்தும் வருகிறோம். இந்த வருட ஏப்ரலில் தான் புதுப்பிக்கும் காலக்கெடு முடிகிறது. அதற்குள் நாங்கள் படத்தையே ரிலீஸ் செய்து விடுவோம். மீண்டும் புதுப்பிக்க வேண்டிய தேவை கூட இருக்காது. இந்த நிலையில் இப்படி வழக்கு தொடர்ந்து உள்ளார்களே என கேட்டோம். 


அதற்கு முரளி ராம நாராயணன் அவர்கள், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) மூலம் இந்த டைட்டிலை பதிவு செய்துள்ளதாக அவர்கள் சொல்கிறார்கள். அதேசமயம் அதை ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது நிச்சயமாக இந்த டைட்டிலை நீங்கள் தான் முறைப்படி பதிவு செய்து இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் கூறுவோம் என்று உறுதி அளித்தார்.


நாங்களும் எங்களது வழக்கறிஞர் விஜயன் மூலமாக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டபடி படத்தின் வேலைகளை விரைவுபடுத்தி டப்பிங் வரை வந்து விட்டோம். அந்த சமயத்தில் மீண்டும் இந்த படத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று எதிர் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த விஷயத்தை ரொம்ப சீரியஸாக மாற்ற தொடங்கினார்கள்.


இதைத்தொடர்ந்து நாங்கள் இந்த படத்திற்காக விலங்குகள் நல வாரியத்தில் பெற்ற சான்று, டப்பிங் முடிந்ததற்காக பெற்ற சான்று மற்றும் படப்பிடிப்பு முடிந்ததற்கான பல சான்றுகளை ஒன்றிணைத்து இந்த படத்திற்காக நாங்கள் செலவுகளை செய்த செலவுகளையும் பட்டியலிட்டு ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். அவர்கள் தரப்பிலிருந்து இதுபோன்ற ஆவணங்கள் எதையுமே சமர்ப்பிக்காமலேயே டைட்டில் தங்களுக்கே சொந்தம் என்று வாதாடினார்கள். 


மேலும் அவர்கள் சென்சாரில் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் ஒன்றை சமர்ப்பித்தார்கள். அது அந்த படத்தில் எடுக்கப்பட்ட ஒரு நிமிட காட்சி ஒன்றுக்காக டீசர் அல்லது ட்ரைலர் என்கிற பெயரில் சென்சாரில் இருந்து வழங்கப்பட்ட சான்றிதழ். அந்த சான்றிதழில் சாமானியன் என டைட்டில் குறிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவே ஒரு மொத்த படத்திற்கான சென்சார் சான்றிதழ் அல்ல. உதாரணமாக தற்போது ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் யாரோ ஒருவர் ஒரு நிமிட காட்சி ஒன்றை படமாக்கி ஜெயிலர் என்கிற பெயரில் சென்ருருக்கு தணிக்கைக்காக அனுப்பி வைத்தால் அவர்கள் குறிப்பிட்ட அதே பெயரில் தான் சான்றிதழ் வழங்குவார்களே தவிர அதை யார் பதிவு செய்துள்ளார்கள் என்கிற விவரம் குறித்தெல்லாம் சென்சார் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவே மாட்டார்கள், அது அவர்கள் வேலையும் அல்ல..


அதை வைத்துக்கொண்டு ஜெயிலர் டைட்டில் எங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாட முடியுமா ? இதேபோல நாளை லியோ படத்திற்கும் யாராவது ஒருவர் இப்படி டைட்டில் பிரச்சனையை கிளப்பிக்கொண்டு வருவார்கள்..


இரு தரப்பு விளக்கத்தையும் கேட்ட நீதிபதியிடம், எங்களது தரப்பு வழக்கறிஞர் விஜயன், நாங்கள் முழு படத்தையும் முடித்து விட்டோம்.. தங்கள் முன் திரையிட்டு காட்ட தயாராக இருக்கிறோம்.. அவர்களது படத்தையும் அவர்கள் திரையிட்டு காட்டட்டும்.. எந்த படம் முழுதாக முடிவடைந்துள்ளதோ, அதன் பிறகு நீங்களே தீர்ப்பு கூறுங்கள் என்று எங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தோம்.


அதைக் கேட்ட நீதிபதி அவர்களிடம் இதற்கு சம்மதமா என்று கேட்க அவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.. இதை தொடர்ந்து, அவர்களிடம் நீங்கள் பொய்சொல்லி இருக்கிறீர்கள்.. இந்த படத்தின் டைட்டில் எக்ஸட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு தான் சொந்தம் என தீர்ப்பளித்துள்ளனர். .  


இதேபோன்றுதான் நாங்கள் தயாரித்து வெளியிட்ட கொலையுதிர் காலம் திரைப்படத்திற்கும் படம் வெளியாவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக இதே போன்று ஒரு டைட்டில் சிக்கல் பிரச்சனைக்கு ஆளானோம்.. ஆனால் அதையும் நீதிமன்றம் மூலமாகவே சென்று போராடி எங்கள் பக்கத்து நியாயத்தை வென்றோம்.


இப்படி இந்த டைட்டில் பிரச்சனை, அதிலும் குறிப்பாக மிகப்பெரிய படங்கள் வெளியாகும்போது, அந்த பட அறிவிப்பு வெளியான சமயத்திலேயே இதுகுறித்து எந்த தகவலையும் வெளிப்படுத்தாமல் படம் வெளியாகும் கடைசி நேரத்தில் வேண்டுமென்றே டைட்டில் தங்களுக்கு தான் சொந்தம் என்று இதுபோன்ற பலரும் அவ்வப்போது கிளம்பி வருகிறார்கள். இன்னும் நான் கேள்விப்பட்ட வகையில் இப்படி இந்த டைட்டில் விவகாரத்தை வைத்து திரையுலகில் உள்ள ஒருசிலர் பிரச்சனை எழுப்பி அதை வியாபாரமாக்கி அதன்மூலம் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.


இதற்கு தயாரிப்பாளர் சங்கம் மூன்றாக பிரிந்து இருப்பதும் பலரும் இந்த மூன்று பிரிவுகளில் தங்களுக்கு தோதான ஏதோ ஒன்றில் டைட்டிலை பதிந்து கொள்வதும் தான் இந்த பிரச்சனை மிகப்பெரிய அளவில் தலை தூக்குகிறது. இதற்கு சங்கங்கள் மூன்றும் ஒன்றாக இணைந்து ஆன்லைனில் டைட்டில் பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வந்தால் மட்டுமே இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்” என்று கூறினார்

நடிகர் கார்த்தி அவர்களின் முதல் திரைப்படமான பருத்திவீரன்

நடிகர் கார்த்தி அவர்களின் முதல் திரைப்படமான பருத்திவீரன் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி ரிலீஸ் ஆனது.  


தற்போது 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதை கொண்டாடும் விதமாக கார்த்தி ரசிகர்கள் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறார்கள்



பாடி கிரீன் சினிமாஸ் தியேட்டரில் பருத்திவீரன் திரைப்படம் திரையிடப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.


அந்நிகழ்வை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானமும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டன.

மேலும் பல்வேறு திரைப் பிரபலங்கள் 'ஜப்பான்' திரைப்படத்தில்  கார்த்தி அவர்களின் தோற்றத்தை காமன் DP யாக வைத்து '16years of Karthism' என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டார்கள்.அது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்ததது.


— johnson,pro

சிக்லெட்ஸ்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

 *'சிக்லெட்ஸ்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு*


தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமான நடிகர் சாத்விக் வர்மா, கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'சிக்லெட்ஸ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.





'திறந்திடு சிசேம்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. எஸ். எஸ். பி பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ஸ்ரீனிவாசன் குரு தயாரித்திருக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா மற்றும் 'வலிமை' ஜாக் ராபின்சன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.  இவர்களுடன் நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹைதர், மஞ்சீரா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். மேலும் ஸ்ரீமன், மனோபாலா, சம்பத்ராம், சுரேகா வாணி, ஜானகி, மீனாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். 'துணிவு' விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை ராஜு மேற்கொண்டிருக்கிறார். 


டீன்ஸ் டிராமா ஜானரில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் காமமும், இளமை குறும்பும் ததும்பும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் ஒரு இளம் பெண், 'துளசி வாசமிக்க ஆணுறை கிடைக்குமா?' என கேட்பது, அதிர்ச்சியாக இருந்தாலும், இன்றைய இளம் தலைமுறையின் மனநிலையைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது. அத்துடன் பெற்றோர்களுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் இடையே காதலிப்பது தொடர்பான கருத்து மோதல்களும் இடம் பிடித்திருக்கிறது. மேலும் இப்படத்தின் டைட்டிலுடன் '2k கிட்ஸ்' என்ற டேக்லைன் இணைக்கப்பட்டிருப்பதால், இதற்கு இணையவாசிகளிடத்தில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.


https://youtu.be/-kRrofblYco

படமாகிறது பெருமாள் முருகனின் சிறுகதை

 **படமாகிறது பெருமாள் முருகனின் சிறுகதை*


*திரைப்படமாக உருவாகும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி சிறுகதை*


நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார்.






புகழ்பெற்ற தமிழாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையின் புதிய விளக்கமாக இந்த படம் தயாராகிறது.


இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஞ்ஜோய் சாமுவேல் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்,


இந்த படத்திற்கான முதல்கட்ட பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட நிலையில், மார்ச் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது..


படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.


தாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கே எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக படத்தின் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.


*திரைப்படமாக உருவாகும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி சிறுகதை*


நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார்.


புகழ்பெற்ற தமிழாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையின் புதிய விளக்கமாக இந்த படம் தயாராகிறது.


இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஞ்ஜோய் சாமுவேல் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்,


இந்த படத்திற்கான முதல்கட்ட பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட நிலையில், மார்ச் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது..


படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.


தாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கே எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக படத்தின் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.