Magudam Tamil Movie Review
ஒரு நடிகர் direct பண்ண வரும்போது பொதுவா இரண்டு விஷயங்கள் நடக்கும். ஒரு பக்கம் இயக்குநர் அவருடைய நட்சத்திர இமேஜை balance பண்ணவரு ; இல்லனா அந்த acting அவருடைய இயக்குநர் பார்வையை முழுசா dominate பண்ணும். கிட்டத்தட்ட மூன்று மணி நேர ஓட்டத்தில் நடிகர் விஷாலும் இயக்குநர் விஷாலும் இடையே ஒரு போட்டி இருக்கற மாதிரி தான் போகுது. ; அதுவே படத்திற்கு தனித்துவமான ஒரு சுவையை கொடுக்குது னு சொல்லலாம்.
இந்த படத்தோட கதை கடலோர சரக்கு அப்புறம் கப்பல் போக்குவரத்து வணிகத்தின் பின்னணியில் நடக்கிறது — பணம், அதிகாரம், செல்வாக்கு, பழைய விசுவாசங்கள் ஆகியவை வலுவாக இருக்கற ஒரு உலகம். விஷால் , கிருபாகரன் கதாபாத்திரத்தில் வருகிறார். ஒரு சாதாரண நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிற அவரோட உலகம், எதிர்பாராத சூழ்நிலையால மொத்தமா மாறிடுது . அப்போ அவர் மறந்து வைச்ச ஒரு தீவிரமான குடும்ப மரபை எதிர்கொள்ள வேண்டியா ஒரு நிலை வருது .இந்த journey க்கு support அ இருக்கிறது அவரோட அப்பா லிங்கா; இந்த வேடத்திலும் விஷால்தான். பழிவாங்குறது , குடும்ப உணர்வுகள், மறைக்கப்பட்ட உண்மைகள், கடந்தகால ரகசியங்கள் னு ஓவுவுன்னா கதை கதை போக release பண்ணுறாங்க.
இந்த படத்தோட கதை பல காலவரிசைகளிலும் வெவ்வேறு காலகட்டங்களிலும் விரிகிறது; அதனால தான் இந்த படத்தோட கதை இன்னும் strong அ இருக்கு . விஷால் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் கவனம் ஈர்க்கிறார்: இளம் மற்றும் ஆபத்தான காங்க்ஸ்டர் லிங்கா, அனுபவங்களால் உறுதியடைந்த மூத்த லிங்கா, மற்றும் சாதாரண வாழ்க்கை வாழும் கிருபாகரன் — லிங்காவின் மகன். இந்த அடையாள மாற்றங்கள் படத்தின் மர்ம உணர்வை அதிகரிக்கின்றன. ஒரு காலவரிசை முடிந்தவுடன் லிங்காவின் கடந்தகாலத்தை மெதுவா காமிக்கறாங்க ; அதனால audience ஓட ஆர்வம் தொடர்ந்து நீடிக்க்குது னு சொல்லலாம்.
படத்தோட performance அ பத்தி பாத்தோம்னா விஷால் ஓட நடிப்பை கண்டிப்பா பேசணும். Career ஆரம்பிச்சதுல இருந்து இருந்த dedication இதுலயும் full ஆ தெரியும். வெவ்வேறு timeline ல ஒரே character ஓட மூணு version ல நடிக்கறது ரொம்ப challenging ஆன விஷயம். ஆனா விஷால் ஒவ்வொரு role க்கும் physically யும் emotionally யும் முழுசா effort போட்டிருக்காரு.
Particularly வயசான Linga character ரொம்ப weight ஆன performance ஆ இருந்தது. பல வருடங்களா violence பாத்த மனுஷனோட body language, look, expression எல்லாத்தையும் நல்லா carry பண்ணிருக்காரு. Young gangster Linga வந்த இடங்களும் mass ஆ work ஆகுது. அந்த role ல அவருக்கு இருக்கும் confidence நல்லாவே தெரியும், அதனால screen presence இன்னும் strong ஆக இருக்கு.
Family emotions, sentiment, love மாதிரியான scenes லயும் விஷால் ரொம்ப natural ஆ perform பண்ணிருக்காரு. Writing simple ஆ இருந்தாலும், அவர் expressions மூலமா அந்த emotion audience கிட்ட நல்லா connect ஆகுது. Overall ஆ இந்த படம் விஷால் ஓட performance range ஐ நல்லா காட்டுற ஒரு solid movie னு சொல்லலாம்.
படத்துல துஷாரா விஜயன் க்கு குறைவான screen space இருந்தாலும், வந்த இடங்கள்ல நல்ல performance கொடுத்திருக்காங்க. Anjali யும் Madha Gaja Raja க்கு அப்புறம் விஷாலோட மீண்டும் சேர்ந்திருக்காங்க. அவரோட character க்கு script ல கொடுத்த அளவுக்கு நல்ல intensity யும் attitude யும் கொண்டு வந்திருக்காங்க. குறிப்பா action scenes ல Anjali sema fire ஆ தெரிஞ்சாங்க, screen ல வந்த உடனே impact feel ஆகுது.
John Vijay, Jayaprakash னு மத்த supporting actors எல்லாரும் தங்களோட role அ neat ஆ carry பண்ணிருக்காங்க. இவர்களோட presence கதைக்கு நல்ல support ஆக இருக்கு.படத்தோட first half கொஞ்சம் calm ஆ world building க்கு time எடுத்துக்குது. Linga ஓட family life, அவனை சுற்றி இருக்குற people, emotional setup எல்லாத்தையும் slowly establish பண்ணுறாங்க. அந்த scenes நல்லா connect ஆகுது, அதனால அடுத்தடுத்து வர்ற conflict க்கு weight கிடைக்குது.
படம் போக போக இன்னும் engaging ஆக மாறுது. Linga ஓட past, அவனை target பண்ணுறதுக்கான காரணங்கள் எல்லாம் reveal ஆகுற இடங்கள் நல்ல impact கொடுக்குது. குறிப்பா அவனோட மகன் safety க்காக அவன் போராடுற emotional angle revenge கதைக்கு strong connect கொடுக்குது. அதனால story பெரிய scale க்கு போனாலும் audience involvement தொடர்ந்து maintain ஆகுது.
படத்துல timeline shifts ரொம்ப interesting ஆன முயற்சியா இருக்கு. ஒரே character ஓட மூணு version களை வெவ்வேறு காலகட்டங்கள்ல காட்டுறது easy இல்ல. Vishal இந்த structure மூலமா கதைக்கு mystery அ கூட்ட முயற்சி பண்ணிருக்காரு. Second half ல ஒவ்வொரு timeline உம் தனித்தனியா reveal ஆகுற மாதிரி வர்றதால audience க்கு அடுத்தது என்னன்னு curiosity தொடர்ந்து இருக்கு.
Screenplay complex ஆ feel ஆகுது. Linga ஓட past, present, family emotions, revenge எல்லாத்தையும் connect பண்ணிருக்காங்க. சில இடங்கள்ல details அதிகமா இருந்தாலும், overall ஆ படம் ஒரு mass thriller மாதிரி தெரியுது.
இப்போ climax அ பத்தி சொல்லணும்னா, promotions ல Vishal ரொம்ப confident ஆ பேசின அந்த almost 8 நிமிஷம் continuous action sequence தான் படத்தோட biggest highlight. ஒரே flow ல போகும் action, powerful choreography, intense emotion — மூன்றும் சேர்ந்து ஒரு நல்ல impact அ create பண்ணுது. Theatre ல இந்த portion க்கு நல்ல goosebumps feel கொடுத்துச்சு . அதோட emotional அ connect ஆகுறதால climax இன்னும் strong ஆ work ஆகுது. இந்த energy and intensity படம் முழுக்க இருந்ததால, Magudam இன்னும் பெரிய theatrical experience ஆ மாறியிருக்கும் னு சொல்லலாம்.
இந்த படத்துக்கு இன்னொரு பெரிய plus point cinematography தான். Richard M Nathan மற்றும் Abinandhan Ramanujam னு இவங்க ரெண்டு பேரும் இந்த world க்கு சரியான gritty = look அ கொடுத்திருக்காங்க. Cargo port, harbour, coastal locations எல்லாத்தையும் பெரிய scale ல அழகா capture பண்ணிருக்காங்க. Over glamour இல்லாம, அந்த இடத்தோட raw feel ஐ maintain பண்ணியது ரொம்ப நல்லா work ஆகுது.
GV Prakash Kumar ஓட music மற்றும் BGM இந்த படத்துக்கு பெரிய strength. Action scenes ல mass feel கொடுக்கறதுலயும், emotional scenes ல connect ஆகறதுலயும் BGM ரொம்ப help பண்ணுது. Fight sequences வரும்போது score கூடவே energy ஏறுற மாதிரி feel ஆகுது. Overall ஆ visuals மற்றும் music ரெண்டுமே சேர்ந்து படத்தோட theatre experience ஐ இன்னும் strong ஆ குடுத்திருக்கு .
மொத்தத்துல ஒரு நல்ல படம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை போய் பாருங்க.

No comments:
Post a Comment