Featured post

FEFSI புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

 *FEFSI புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா* போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய FEFSI நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்களின் பதவியேற்ப...

Monday, 25 December 2023

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'சலார் பார்ட் 1 - சீஸ்ஃபயர்- இந்த திரைப்படம்

 *ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'சலார் பார்ட் 1 - சீஸ்ஃபயர்- இந்த திரைப்படம் உலக பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்து, புதிய வரலாற்றை எழுதி வருகிறது. 'கே ஜி எஃப்' இயக்குநர் பிரசாத் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், வார இறுதியில் உலகளவில் மொத்தம் 402 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது.*



ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்' திரைப்படம், 'கே ஜி எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மிகப் பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பி உள்ளது. படம் வெளியான வெள்ளிக்கிழமையன்று உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 178.7 கோடி ரூபாயை வசூல் செய்து, இதற்கு முன்னரான பல பெரிய சாதனைகளின் சாதனையை முறியடித்தது. மேலும் இத்திரைப்படம் அற்புதமான ஓப்பனிங்கைப் பெற்ற ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. திரைப்படம் வெளியான இரண்டாவது நாளில் உலகம் முழுவதும் 295.7 கோடி ரூபாயை வசூலித்து, தொடர்ந்து பெரிய திரைகளில் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. மேலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலுடன் இப்படத்திற்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும் 'டிக்கெட் விண்டோ'விலும் தொடர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


இந்தத் திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் தனது இடத்தை மிகப்பெரிய வித்தியாசத்துடன் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த திரைப்படம் வார இறுதியில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 402 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.


இத் திரைப்படத்தின் வசூல் ஒவ்வொரு நாளும் மேல்நோக்கி செல்வதை காட்டுகிறது. இந்த திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் பார்வையாளர்கள் பதிவு செய்த டிக்கெட்டுகள் குறித்து 'டிக்கெட் விண்டோ:வில் இதன் சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் செய்யும் என்பதையும் உறுதி செய்கிறது.


இந்தத் திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்திருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு படைப்புகளை பார்வையிடும் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய படைப்பின் சான்றாகவும் திகழ்கிறது.


இந்தத் திரைப்படம்... ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமின்றி... படத்தில் இடம்பெற்ற தொழில்நுட்பம் மற்றும் காட்சி அமைப்பு குறித்தும், பிரசாந்த் நீல்- பிரபாஸ் கூட்டணியின் கடுமையான உழைப்பு குறித்தும் விமர்சர்களிடமிருந்தும் ஏகோபித்த அன்பையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது.


'சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்' திரைப்படம் தற்போது உலக அளவில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றுள்ள நிலையில்.. 'சலார் பார்ட் 2- சௌரியங்க பர்வம்' படத்தின் தொடர்ச்சிக்கான களத்தையும் அமைத்துள்ளது. கான்சாரின் வாழ்க்கையை... மிகப் பெரிய ஆக்சன் நிறைந்த உலகத்தை... பிரசாந்த் நீல் தன்னுடைய படைப்பில் வழங்கிய விதம்... அனைத்து தரப்பினரிடமிருந்தும் மிகப்பெரிய அளவில் அன்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.


ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'சலார் பார்ட் 1 -சீஸ்ஃபயரி'ல் பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவாகி, தற்போது உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Hombale Films Salaar Part 1: Ceasefire starring Prabhas continues to

Hombale Films Salaar Part 1: Ceasefire starring Prabhas continues to write History at the global box office! The film helmed by KGF Director Prashanth Neel collected 402 CR. Worldwide Gross over the weekend

Hombale Film Salaar Part 1: Ceasefire, starring Pan India Superstar Prabhas, helmed by KGF director Prashanth Neel, has indeed arrived as the biggest celebration for the fans and the audiences. The film has taken the box office by storm and is breaking the records of several biggies by collecting 178.7 crore gross at the global box office on Friday, becoming the only Indian film to achieve such a phenomenal opening. The trend continued on the second day where the film has achieved 295.7 crores worldwide on Day 2. Since the grand release of the film on the big screens, it refused to slow down and continues to surprise at the ticket window with the box office numbers.

The film has cemented it's position on the global box office with big margin and has collected phenomenal numbers of 402 crores gross at the worldwide box office in the weekend.

The film has shown an upward trend with each passing day and the numbers the film has clocked in just three days ensures a long run at the ticket window.


Sharing the official collection on the social media, the makers wrote,

"𝑩𝑶𝑿 𝑶𝑭𝑭𝑰𝑪𝑬 𝑲𝑨 𝑺𝑨𝑳𝑨𝑨𝑹 🔥


#BlockbusterSalaar hits 𝟒𝟎𝟐 𝐂𝐑𝐎𝐑𝐄𝐒 𝐆𝐁𝐎𝐂 (worldwide) 𝐢𝐧 𝟑 𝐃𝐚𝐲𝐬!


#RecordBreakingSalaar #SalaarRulingBoxOffice


#Salaar #SalaarCeaseFire #Prabhas #PrashanthNeel @PrithviOfficial @shrutihaasan @VKiragandur @hombalefilms @IamJagguBhai @sriyareddy @bhuvangowda84 @RaviBasrur @vchalapathi_art @anbariv @SalaarTheSaga"

https://x.com/salaarthesaga/status/1739198064899072318?s=46

The film broke all the previous records at the global box office and the numbers are proof of the audiences love towards  the biggest entertainer of the year. 


The film is receiving unanimous love and praises from not just the fans and the audiences but from the critics as well who hailed the craft and the visuality of the film and lauded the combination of Prashanth Neel and Prabhas.


With Salaar Part 1: Ceasefire now a roaring global success, the stage is set for the sequel to the film 'Salaar Part 2: Shauryanga Parvam'. The way Prashanth Neel has presented the larger-than-life action-packed world of Khansaar in the film has earned tremendous love and appreciation from all across.


Hombale Films, Salaar: Part 1: Ceasefire features Prabhas, Prithviraj Sukumaran, Shruti Haasan, and Jagapathi Babu. Made under the direction of Prashanth Neel, the film was produced by Vijay Kiragandur and is now released in cinemas.

Fans greet SRK with Dunki cut outs celebrating his film as he comes out to wave

Fans greet SRK with Dunki cut outs celebrating his film as he comes out to wave



The Dunki fervor doesn't seem to settle down easily. While the film has been receiving immense love from from all across the world, how could SRK fans resist themselves from expressing it to the superstar. To do the same, a huge crowd of fans gathered outside Mannat as SRK came to wave his love to them. 


A huge crowd of around 1000 fans came to wish and express their love for SRK in front of Mannat. Amid the rising craze of Dunki, the fans are overwhelmed to see the superstar spreading his magic in his signature pose. Dunki has indeed arrived at a celebration for fans as well as the superstar as well. While the fans every year come to wish SRK on his birthday, Dunki has indeed yet another celebration for them. 


Dunki features an ensemble cast, with colorful characters portrayed by exceptionally talented actors Boman Irani, Taapsee Pannu, Vicky Kaushal, Vikram Kochhar, and Anil Grover, along with Shah Rukh Khan. A JIO Studios, Red Chillies Entertainment, and Rajkumar Hirani Films presentation, produced by Rajkumar Hirani and Gauri Khan Written by Abhijat Joshi, Rajkumar Hirani, and Kanika Dhillon, Dunki is now released on the big screen.

ஷாருக்கானின் 'டங்கி' படத்தின் கட்அவுட்டுகளுடன் அவரின்

ஷாருக்கானின் 'டங்கி' படத்தின் கட்அவுட்டுகளுடன் அவரின் வீட்டிற்கு முன் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்து, ஷாருக்கான் உற்சாகமாக கையசைத்ததை.. ரசிகர்கள் கொண்டாடினர்..!



'டங்கி' படத்தின் மீதான மோகம் இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்களின் அபரிமிதமான அன்பை பெற்று வரும் தருணத்தில்.. ஷாருக்கின் ரசிகர்கள் அதை சூப்பர் ஸ்டாரிடம் வெளிப்படுத்துவதற்காக.. அவரது வீட்டிற்கு முன் திரண்டனர். இதனை கண்ட ஷாருக்கான், தனது அன்பை பகிர்ந்து கொள்ள அவர்களைப் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார்.


கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்ட பெரிய கூட்டமொன்று... ஷாருக் கானின் வீடான மன்னத் பகுதியில் ஒன்று திரண்டனர்.‌ ஷாருக்கான் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கும், வாழ்த்துவதற்கும் அவர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து உலகம் முழுவதும் அதிகரித்து வரும் டங்கியின் வரவேற்புக்கு இடையே சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.. தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை பார்த்து கையசைத்து.. பறக்கும் முத்தத்தை வழங்கி.. தனது மாயாஜால வசீகரத்தை வெளிப்படுத்தினார்.‌ 'டங்கி' திரைப்படத்தின் வெற்றியை... ரசிகர்களும், சூப்பர் ஸ்டாரும் கொண்டாடுவதற்காக ஒன்று கூடினர்.  ஒவ்வொரு ஆண்டும் ஷாருக் கானின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அவருடைய வீட்டிற்கு முன் திரண்டு வாழ்த்து  தெரிவிப்பர். தற்போது 'டங்கி' படத்தின் வெற்றி.. ரசிகர்களுக்கு மற்றொரு கொண்டாட்டமாக அமைந்தது.  


ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் டங்கியில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதியிருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.‌

என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” ; ‘சல்லியர்கள்’

“என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமான் ஆதங்கம்


*”வரலாறு எப்போதும் பொய் பேசாது.. பேசக்கூடாது..” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமானின் அறச்சீற்றம்*


*”தேன்கூட்டை தொடுவது போன்ற கவனத்துடன் ‘சல்லியர்கள்’ படத்தை எடுத்துள்ளனர்” ; சீமான் பாராட்டு*   


*”’சல்லியர்கள்’ படம் பார்ப்பது நாவலை படிப்பது போன்ற உணர்வை கொடுத்தது” ; இயக்குநர் பொன்ராம்*


*“ஒரு இன அழிப்பை பற்றி படமெடுத்து தணிக்கை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்ற முதல் படம் ‘சல்லியர்கள்’; கருணாஸ் பெருமிதம்* 


*”தன் மகனுக்கு வைத்துவிட்டு போகும் சொத்து பற்றி வெளிப்படையாக ‘சல்லியர்கள்’ பட விழாவில் பேசிய கருணாஸ்*


*“ஒரு பேயை போல நடித்துள்ளளார்” ; ‘சல்லியர்கள்’ பட நாயகிக்கு இயக்குநர் வ.கவுதமன் பாராட்டு*


*“தமிழர்கள் முன்னிலையில் என்னை ஒரு குற்றவாளியாக நிறுத்த முயற்சி நடக்கிறது” ; ‘சல்லியர்கள்’ நிகழ்வில் இயக்குநர் வ.கவுதமன் அதிர்ச்சி தகவல்*


*”வெளிநாட்டு போர்க்கள பட தமிழ் ரசிகர்களின் ஏக்கத்தை ‘சல்லியர்கள்’ தீர்த்து வைக்கும்” ; நடிகர் திருமுருகன்*


*”கன்னத்தில் முத்தமிட்டால் படம் போலத்தான் ‘சல்லியர்கள்’ படமும்” ; தயாரிப்பாளர் தேனப்பன் பாராட்டு*


ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. 


சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,  அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.


கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். 


இந்தப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், சிவா கிலாரி, இயக்குநர்கள் வ.கவுதமன், பொன்ராம் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் *கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது,* “சல்லியர்கள் சாமானியர்கள் அல்ல.. சகாப்தம், சரித்திரம் படைக்கப் போகிறார்கள்..” என்று கூறினார்


*தயாரிப்பாளர் சிவா கிலாரி பேசும்போது,* “எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரிந்தாலும் இங்கே அண்ணன் சீமான் அமர்ந்திருப்பதால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. அதனால் தமிழில் தான் பேச போகிறேன். என் முதல் படம் ‘விசித்திரன்’. இரண்டாவது படம் ‘போகும் இடம் தூரம் இல்லை’. அதில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் தயாரிப்பது எளிதான காரியம் அல்ல. படம் பற்றி கொஞ்சம் பாசிட்டிவாக எழுதினால் திரையரங்குகளுக்கு கூட்டம் வரும். திரையரங்குகளை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்” என்று கூறினார்.


*இயக்குநர் பொன்ராம் பேசும்போது,* “இந்த விழாவிற்கு என்னை அழைப்பதற்காகவே படத்தை போட்டு காட்டினார்கள். அற்புதமான படைப்பு இந்த சல்லியர்கள். இந்த படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகைக்கு எத்தனை நாள் பயிற்சி கொடுத்தார்கள் என தெரியவில்லை, அந்த அளவிற்கு மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு மண்ணை சார்ந்த உணர்வுபூர்வமான படம் இது. படம் என்று சொல்வதை விட ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வை கொடுத்தது. போர் காட்சிகளும் முறையான பயிற்சி கொடுத்து படமாக்கப்பட்டது போல் தெரிகிறது” என்று கூறினார்.


*தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் பேசும்போது,* :இயக்குநர் கிட்டு தனது முதல் படமான மேதகு படத்தையும் சிறப்பாக எடுத்திருந்தார். ஓடிடியில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான படம் அது. இந்த படத்தையும் நான் பார்த்தேன். நல்ல தரமான படைப்பாக வந்திருக்கிறது. இதை ஒரு இலங்கை படம் என பாராமல் கன்னத்தில் முத்தமிட்டால் படம் போல ஒரு காதல் படமாக பாருங்கள்.  ஒரு இசையமைப்பாளராக கருணாஸின் மகன் கென் இன்னும் பக்குவப்பட்டவராக இருக்கிறார். அருமையாக இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்” என்று கூறினார்.


*இயக்குநர் வ.கவுதமன் பேசும்போது,* “சல்லியர்கள் திரைப்படமாவதற்கு முன்பே கிட்டு என்னிடம் இந்த கதையை கூறினார். ஒருவகையில் என்னுடைய மகன் தமிழ் கவுதமன் இந்த படத்தின் நாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் இன்னொரு படத்தில் நடிப்பதற்கான வேறு தோற்றத்தில் இருந்ததால் உடனடியாக இதற்கு மாற முடியவில்லை. கதையாக கேட்கும் போது எனக்குள் ஒரு சிலிர்ப்பையும் படமாக பார்த்தபோது, குறிப்பாக இரண்டாம் பகுதியை பார்த்து முடித்தபோது எனக்கும் இயக்குநர் பொன்ராமுக்கும் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பெண் ஒரு பேயை போல நடித்துள்ளளார். திரையில் இன்று இருக்கும் எந்த ஒரு பெரிய நடிகையும் அந்த நடிப்பை வழங்கியிருக்க முடியுமா என தெரியவில்லை. நடிப்பால் நம் மனதை உறைய வைத்து விட்டார்.


பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என பாரதியார் சொன்ன அந்த வார்த்தைகள் தமிழர்களுக்கு மட்டுமே பொருத்தம். அந்த கருத்தை தான் இந்த படம் சொல்லுகிறது. போராட்டத்தில் காயம்பட்டவர்களை காப்பாற்றும் மருத்துவர்களை கூட அழிக்க வேண்டும் என எதிரி நினைக்கிறான்.. அதுதான் இந்த படத்தின் கருப்பொருள்.. காப்பாற்றுபவன் கடவுளுக்கு சமமானவன். அந்த கடவுளையே அழிக்க நினைக்கிறான் எதிரியான சிங்களவன் ஆனால் அவனையும் காப்பாற்ற நினைக்கும் இனம் தான் நம் தமிழினம். மேதகு பிரபாகரனால் வளர்க்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். இந்த படைப்பை தமிழினம் உச்சி முகர்ந்து கொண்டாட வேண்டும் 


பேசாப்பொருளை பேசுவது தான் படைப்புக்கு பேரழகு. அதை இந்த படம் பேசுகிறது. 15 வருடங்களுக்கு முன்பே ‘சந்தனக்காடு’ தொடர் மூலமாக வீரப்பன் வாழ்க்கையை எந்த சமரசமும் இன்றி அரசுகளின் அச்சுறுத்தலை எல்லாம் எதிர்கொண்டு நிஜத்தை மட்டுமே துணிச்சலாக கூறியிருந்தேன். அது இன்றும் பேசப்படுகிறது. அதே சமயம் இன்று வீரப்பனை பற்றி பல பொய்யும் புனைக் கதைகளும் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் இன்றும் கூட அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கொடுக்க இங்கு யாருக்கும் தோன்றவில்லை. வீரம் செறிந்த ஈழப் போராட்டத்தை ஒரு படமாக எடுப்பதற்கு முன்னோட்டமாகவே சந்தனக்காடு தொடரை எடுத்தேன். சந்தனக்காடு போலவே இந்த உலகத்தை முழுக்க அதிர வைக்க இன்னும் படைப்புகள் ஒரு நாள் வரும். அதை செய்யாமல் நான் ஓயமாட்டேன்.


இன்றைய சூழலில் ஒரு குறிப்பிட்ட சதவீத தமிழர்கள் முன்னிலையில் என்னை ஒரு குற்றவாளியாக நிறுத்தும் ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. சண்டை போட்டவன், கொன்று குவித்த சிங்களவன் இன்றும் ஒற்றுமையாக இருக்கிறான்.. ஆனால் சிதறி ஓடிய நம் கூட்டம் இன்னும் தங்களுக்குள் பகை வளர்த்து பிரிந்தே கிடக்கிறது. பொய்யை உண்மையாக்குகிற ஒரு சூழலை இனி தமிழினம் அனுமதிக்க கூடாது” என்று கூறினார்.


*நடிகர் திருமுருகன் பேசும்போது,* “நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் எனது மனதுக்கு நிறைவான படம். தம்பி கிட்டு ஆரம்பத்தில் எடுத்த குறும்படத்தில் நான் தான் நடித்தேன். ஆனால் மேதகு படத்தில் நடிக்க முடியவில்லை. கிட்டு தமிழ் சமூகத்திற்கு ஒரு முக்கியமான படைப்பாளி. மேதகு படத்தை விட சல்லியர்கள் மிகப்பெரிய வெற்றி பெறும். சல்லியர்கள் யுத்த களத்தில் நடக்கின்ற ஒரு படம். ஆனால் பார்வையாளர்களை பொருத்தவரை அது ஒரு ஹீரோ வில்லன் படம் தான். முழு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படம். ஒரு அரக்க கூட்டத்திற்கும் அறத்துடன் நிற்கும் கூட்டத்திற்கும் இடையில் நடக்கிற கதை இது. வெகு ஜன ரசிகராக நீங்கள் இருந்தால் 100% இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். தமிழ் உணர்வாளர்களாக இருந்தால் ஆயிரம் முறை உங்களுக்கு பிடிக்கும். இந்த படைப்பை மிகப்பெரிய அளவில் கொண்டு வந்ததற்கு காரணம் கருணாஸ் அண்ணன் தான். இந்த படம் அவருக்கு நிச்சயம் பெரிய வெற்றியை கொடுக்கும். யுத்த களத்தை மையப்படுத்திய வெளிநாட்டு படங்களை பார்க்கும் நம்மவர்களுக்கு ஏன் நம்மூரில் இப்படி ஒரு படம் வருவதில்லை என்கிற ஏக்கம் இருக்கும். அப்படி நம் ஊரில் போர்க்களத்தை மையப்படுத்தி வந்த படங்களில் இந்தப் படம் தான் ஆகச்சிறந்த படமாக இருக்கும்” என்று கூறினார்.


நார்வே நாட்டில் *நார்வே திரைப்பட திருவிழாவை பல வருடங்களாக நடத்தி வரும் வசீகரன் பேசும்போது,* “அகிம்சை ஏந்தி போராடிய எங்கள் இனம் ஆயுதம் ஏந்தி போராடிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்று அறிவாயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். கடந்த 14 ஆண்டுகளில் எம் இனம் விழுந்து கிடந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சினிமா என்னும் ஊடகத்தின் ஊடாக சரியான திரைப்படங்கள் வரவேண்டும் என்ற 10 நோக்கங்களில் ஒரு நோக்கத்திற்காக நார்வே திரைப்பட விழா 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் மற்றும் வலிகளை பேசுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழர்களின் அடையாளம் என்றால் அந்த சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக அப்படிப்பட்ட படங்களை தான் கடந்த 14 வருடங்களாக நாங்கள் தேர்வு செய்து வருகிறோம். அந்த வகையில் தம்பி கிட்டு மேதகு திரைப்படத்தை கலைக்கூத்து வழியாக அழகான கதை நகர்த்தல் மூலம் சொல்லி இருந்தார். தமிழகமாக இருந்தாலும் தமிழீழமாக இருந்தாலும் போதை வஸ்து, வன்முறை கலாச்சாரம் இவற்றை விதைக்கும் விதமாகத்தான் படங்கள் வருகின்றன என்பது வருத்தமாக இருக்கிறது, சல்லியர்கள் போன்ற படங்கள் தமிழகத்திலும் சரி, வெளிநாட்டிலும் சரி வெளியாவதற்கு நிறைய போராட வேண்டி இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி இந்த படத்தை வெளிக்கொண்டு வருவோம்” என்று கூறினார்.


*நடிகர் சேது கருணாஸ் பேசும்போது,* “இந்த படத்தை எடுக்க வேண்டும் என கிட்டு முடிவு செய்தபோது என்னிடம் பரமக்குடியை சேர்ந்த இராவணனை அழைத்து வந்தார். பெரிய வசதி வாய்ப்புகள் எல்லாம் இல்லாதவர். ஆனால் இந்த படம் எடுப்பதற்கு முன்பணமாக 10 லட்சம் ரூபாய் கொடுத்து துவக்கி வைத்தவர் இவர்தான். இப்படி சாதாரண கிராமத்தில் இருக்கும் ஒருவருக்கே இந்த உணர்வு இருக்கும்போது, சினிமாவில் இருக்கும் எனக்கு இந்த மொழியால், இனத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஏதாவது செய்யக்கூடாதா என்கிற வெறி ஏற்பட்டது. தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளை எடுத்துச் சொல்லுங்கள். அதற்கு நான் உங்களுடன் உறுதுணையாக நிற்கிறேன் என்று சொல்லி ஒரு உத்வேகத்தை கொடுத்து இந்த நிமிடம் வரை எனக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய தம்பி கரிகாலனுக்கு இந்த நேரத்தில் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


கிட்டு இயக்கிய ‘மேதகு’ படத்தை பார்த்து விட்டுத்தான் இந்த படம் பண்ணும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதையும் சரியாக பண்ணியிருக்கிறார். அவர் என்ன கேட்டாரோ ஒரு தயாரிப்பாளராக அதை சிறப்பாக நான் செய்து கொடுத்திருக்கிறேன். அவரும் இந்த படத்திற்கு நேர்மையாக, உண்மையாக உழைத்திருக்கிறார், பிப்ரவரி மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறோம். தமிழ் சினிமாவில் ஒரு பிரச்சனைக்குரிய, ஒரு இன அழிப்பை பற்றிய வரலாற்று பதிவாக பண்ண வேண்டும் என்று சொல்லி, அதை படமாக எடுத்து தணிக்கை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்ற முதல் படம் எனக்குத் தெரிந்து இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.


இந்த படத்தை எடுத்ததற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், என்னுடைய மகன் கென் தான். இந்த படத்திற்கு அவன் தான் இசையமைத்திருக்கிறான். ஆனால் என் பையன் என்னிடம் கேட்ட கேள்வி என்னவென்றால் இவ்வளவு வறண்ட, இவ்வளவு சீரியஸான, இந்த மாதிரியான ஒரு படத்தை இப்போ கஷ்டப்படுகிற நேரத்தில் எதற்காக காசு செலவு பண்ணி எடுக்கிறீர்கள் என்று கேட்டான். காதலிக்கும்போது கூட மண், இனம், மொழி என்று தான் பேசுகிறார்கள், இதையெல்லாம் யார் இந்த காலத்தில் ஏற்றுக்கொள்வார்கள் என்றான். 


அவனிடம் இது நடந்த காலகட்டம் அப்போது.. போராளிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. நானும் நிறைய பேரை பார்த்திருக்கிறேன்.. ஆனால் அந்த காதலில் கூட அவர்களிடம் ஒழுக்கமும் அறமும் இருந்தது. அது உங்களுக்கு புரியவில்லை. 21 வயது பையன் உனக்கே புரியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு இது சுத்தமாக தெரியாமல் போய்விடுமே என்பதற்காகத்தான் இந்த படத்தை எடுத்தேன்.. அப்பா உனக்காக காசு பணம் நிறைய சேர்த்து வைக்கவில்லை என வருத்தப்படாதே.. எதிர்காலத்தில் நடிகராகவோ, ஏதோ ஒரு இடத்தை பிடித்து விடுவாய். அப்படியே ஆனாலும் கூட வரக்கூடிய காலங்களில் நடிகர் கருணாஸின் பையன், எம்எல்ஏ கருணாஸின் பையன் என்று சொல்வதை விட சல்லியர்கள் என ஒரு படத்தை எடுத்தானே அவனுடைய பிள்ளை என்கிற ஒரு அடையாளத்தை உனக்கு நான் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காத்தான் இந்த படத்தை எடுத்தேன். இதுதான் நான் உனக்கு கொடுக்கும் சொத்து என்றேன்.  உண்மையிலேயே அந்த உணர்வில் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன். எல்லோரும் நமக்கென்ன என்று போய்விட்டால் வேறு யார் தான் செய்வது? நம் தமிழகம், நம்ம ஊர்.. இந்த ஊரில் எல்லோரும் வாழலாம்.. ஆனால் நம்மை ஆள்பவன் தமிழனாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.


*நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசும்போது,* “சல்லியர்கள் என்பதை ஒரு படம் என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. அது ஒரு ஆவணம்.. வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்துவிட்ட இனமும்  வாழாது.. தன் இன வரலாறு தெரியாத எந்த இனமும் எழுச்சி பெற முடியாது.. என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது.. ஏனென்றால் வரலாற்றை படைப்பவனுக்கு வரலாற்றை எழுத நேரம் கிடைக்காது. தமிழர் இன வரலாறை நீங்கள் பார்த்துக் கொண்டே வந்தால் எதிரிகளால் வீழ்த்தப்பட்டதே கிடையாது. உடன்பிறந்த ரத்த சொந்தங்களின் துரோகங்களால் தான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் இறுதியாக எங்கள் தலைவர் உட்பட.


கற்றறிவை விட பட்டறிவு மேலானது. அதனால் தான் என் தலைவர் மேதகு பிரபாகரன் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தினார். ஆனால் இறுதிப் போரில் அவற்றில் பாதிக்கு மேல் சிதைந்து அழிந்து விட்டது. அவருக்கு ஒரு பேரார்வம் இருந்தது. சிண்ட்லர்ஸ் லிஸ்ட் ,போல பிரேவ் ஹார்ட் போல, டென் கமான்மெண்ட்ஸ் போல நம்முடைய விடுதலைப் போராட்ட வரலாறும் படமாக வர வேண்டும் என்று பெரிய அளவில் ஆர்வப்பட்டார். அதற்காகத்தான் அவர் ஆணிவேர் படத்தை தயாரித்தார். தலைவரின் படத்தை போஸ்டர்களில் அடித்து ஒட்டினாலே இங்குள்ள போலீசார் கிழித்தெறிகின்றனர். இங்குள்ள அரசியல் சூழல் அப்படி இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். அதன் பின்னர் தம்பி கவுதமன் சொன்னது போல அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும்.


விழித்துக்கொண்ட வீர மறவர்களின் வரலாறுதான் தமிழர்களுடைய வீர காவிய வரலாறு. அதில் ஒரு துளி தான் இந்த ‘சல்லியர்கள்’ படம். மருத்துவம் என்பதே மகத்துவம். தன் உயிரை எடுக்க வந்த ஒருவனுக்கும் உயிரைக் கொடுக்கின்ற அறம் சார்ந்த மறவர்கள் நம் தமிழர்கள் என்பதை இந்த படம் உணர்த்துகிறது. இந்த படம் இன்னும் பிரம்மாண்டமாக கூட எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த உணர்வை சிதைக்காமல் நமக்குள் கடத்தி விட்டார் கிட்டு. அதில் பிரம்மாண்டம் எதுவும் தேவைப்படவில்லை. 


என் தம்பி இயக்குநர் கிட்டுவிடம் குறும்படம் எடுக்கும் காலத்தில் இருந்தே படைப்பாற்றல், எழுத்தாற்றல் நிறைய இருக்கிறது. படத்தில் வசனங்கள் நன்றாகவே இருக்கிறது. காட்சி அமைப்புகளில் எதுவும் பொய் சொல்லி விட முடியாது. இலக்கியம் பொய் பேசும்.. புராணம் பொய் பேசும்.. ஆனால் வரலாறு எப்போதும் பொய் பேசாது.. பேசக்கூடாது. பகைவனாக இருந்தாலும் அன்பு காட்டுங்கள் என்பதை தான் இந்த படம் பேசுகிறது. மருத்துவ பெண் நந்தினியாக நடித்துள்ளவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். புதிதாக வந்துள்ளவர் என்று சொல்லவே முடியாது. அந்த நாட்டில், அந்த காட்டில் என்ன முகத்தைப் பார்த்தேனோ, அதேபோன்ற ஒரு முகம்.. அதேபோன்ற ஒரு போராளியின் முகம்தான் மகேந்திரன்.. கருணாஸ் நடித்துள்ள அந்தப்பகுதி இந்த படத்தின் இதயம் போன்றது. 


இதை ஒரு படம் என்று சொல்லாமல் ஒரு வரலாற்று பதிவு என்று தான் உலக தமிழ் சொந்தங்கள் வரவேற்க வேண்டும். நம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். வரலாறு தான் எல்லா தேசிய இனங்களுக்கும் வழிகாட்டி இருக்கிறது. நம் குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரம் நாம் காட்டுகின்ற ஒரு பாடமாக இதை செய்ய வேண்டும். 


அயோத்தி போன்ற படங்களுக்கு நாங்கள் குரல் கொடுப்பது அதை மக்கள் சாதாரணமாக கடந்து போய் விடக்கூடாது என்பதற்காகத்தான். அதனால் இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சமீபத்தில் வெளியான சித்தா படம் சிறப்பாக இருந்தது. பார்க்கிங் படம் கூட நன்றாக இருந்தது என என்னிடம் கூறி பார்க்க சொன்னார்கள்.. வெள்ளத்தில் சிக்கிக் கிடந்த எங்களால் எப்படி படம் பார்க்க முடியும் ? எங்களது படமே பெரிய படமாக போய்விட்டது. 


இந்த நாட்டை ஐந்து ஆறு முறை ஆண்ட நிர்வாக தலைவர்களைப் போல என் தலைவனுக்கு ஒரு ஐந்து ஆண்டுகள் மட்டும் இருந்திருந்தால் உலகத்தில் தலை சிறந்த வல்லாதிக்க நாடாக எங்கள் தமிழ் ஈழ நாட்டை கொண்டு போய் சேர்த்திருப்பார். ஆனால் கடைசி வரை அவர் போர்க்களத்தில் போராளி தலைவனாகவே நிற்க வேண்டியதாக போய்விட்டது.  விடுதலைப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்துவது போன்று, எங்களது மருத்துவ பிள்ளைகளை பெருமைப்படுத்துவது போன்று ஒரு தேன்கூட்டை தொடுவது போன்று கவனமாக இந்த பதிவை கையாண்டு இருக்கிறார்கள் கருணாஸும் இயக்குநர் கிட்டுவும்..” என்று கூறினார்.


*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*


தயாரிப்பு ;  சேது கருணாஸ் &  கரிகாலன்


இணை தயாரிப்பு ; சாத்தனூர் சிவா


இயக்கம் ; கிட்டு  


ஒளிப்பதிவு ; சிபி சதாசிவம்


இசை , கென்-ஈஸ்வர்  


படத்தொகுப்பு ; சி,எம் இளங்கோவன்


கலை இயக்குனர் ; முஜிபூர் ரஹ்மான்  


ஆக்சன் ; எஸ்.ஆர்.சரவணன்


விஎப்எக்ஸ் ; விக்னேஷ்


மக்கள் தொடர்பு ; A.ஜான்

Sunday, 24 December 2023

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!




மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் தனது 'புரொடக்ஷன் நம்பர் 2' ஃபேண்டஸி கதையான 'சிரோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் 'பதினெட்டாம் படி' மற்றும் 'வாலாட்டி' போன்ற பிளாக்பஸ்டர் மலையாளத் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரம் பெற்ற அக்ஷய் ராதாகிருஷ்ணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சர்டிஃபைட் கமர்ஷியல் பைலட்டான நடிகை பிரார்த்தனா சாப்ரியா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். ரோகினி, 'போர் தோழில்' புகழ் லிஷா சின்னு, 'சூப்பர் டீலக்ஸ்' புகழ் நோபல் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படக்குழுவினரின் சரியான திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு காரணமாக திட்டமிட்ட 45 நாட்களுக்குள் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. முன்னாள் விளம்பர பட இயக்குநரும் வடிவமைப்பாளருமான விவேக் ராஜாராம் இப்படத்தை எழுதி இயக்கி, இயக்குநராக அறிமுகமாகிறார்.


மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளரான எம்.எஸ். மன்சூர் கூறும்போது, ​​“நாங்கள் தயாரித்திருக்கும் ‘சிரோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு 27 அக்டோபர் 2023 அன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சென்னை, கோவளம், பிச்சாவரம், பாண்டிச்சேரி மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 45 நாட்கள் விரைவான படப்பிடிப்பைத் தொடர்ந்து, டிசம்பர் 10, 2023 அன்று படப்பிடிப்பு முடிந்தது. தற்போது, ​​போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை பிப்ரவரி 2024 இல் வெளியிட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.


இப்படத்தை 'தனி ஒருவன்', 'வழக்கு எண் 18/9', 'தில்லுக்கு துட்டு' புகழ் கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அஸ்வின் ஆர்யன் இசையமைத்துள்ளார். படத்தை பிப்ரவரி 2024 இல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

Million Studios MS Manzoor presents ‘CHIRO’ shooting wraps up

 *Million Studios MS Manzoor presents ‘CHIRO’ shooting wraps up* 




Million Studios Producer MS Manzoor has officially announced the completion of the shooting for his Production No.2 titled 'CHIRO', a fantasy film. The film stars Akshay Radhakrishnan, who gained recognition for his outstanding performances in blockbuster Malayalam movies such as 'Pathinettam Padi' and 'Valaati', in the titular role. Actress Prarthana Chabria, a certified commercial pilot, will be playing the female lead. Other notable actors such as Rohini, Lisha Chinnu from 'Por Thozhil' fame, Nobel from 'Super Deluxe' fame, and others will be portraying pivotal roles in the film. The shooting was successfully completed within the planned timeframe of 45 days, thanks to meticulous planning and execution by the crew. The film is written and directed by Wivek Rajaram, a former ad filmmaker and designer, who is making his directorial debut with this project.


Producer MS Manzoor, Million Studios, says, “We Million Studio are happy to announce that the shooting of our ambitious film ‘CHIRO’ is wrapped up now. The shoot of the movie was started in Chennai on 27 October 2023 with pooja. The movie was shot at various locations in and across Chennai, Kovalam, Pitchavaram, Pondichery and Chidambaram. Following a rapid shooting for 45 days, the production curtain fell on 10 December 2023. Currently, the postproduction work is briskly progressing, and we are planning to release the film in February 2024.” 


The movie is edited by Gopi Krishna of Thani Oruvan, Vazhakku Enn 18/9, Dillukku Duddu fame.  The music is composed by debutant Ashwin Aryan. The movie is scheduled to release in February 2024.

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கில் போட்டியிடும் ஹைதராபாத்

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கில் போட்டியிடும் ஹைதராபாத் அணியின் உரிமையாளராகியிருக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்




மும்பை டிசம்பர் 24 2023 - இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் ( ISPL) - ஒரு ஸ்டேடியத்தின் எல்லைக்குள் அமைக்கப்பட்ட டென்னிஸ் பந்து மூலம் விளையாடப்படும் T10 கிரிக்கெட் போட்டி.  இந்த போட்டியில் விளையாடும் ஹைதராபாத் அணிக்கு 'குளோபல் ஸ்டார்' ராம் சரண் பெருமைக்குரிய உரிமையாளராகியிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் மூலம் இந்த போட்டியில் கலந்து கொண்டிருக்கும் ஏனைய பாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் பட்டியலில் ராம்சரணும் இணைந்திருக்கிறார். இந்த பட்டியலில் அக்ஷய் குமார் (ஸ்ரீநகர்) அணிக்கும், ஹிர்த்திக் ரோஷன் (பெங்களூரு) அணிக்கும், அமிதாப்பச்சன் (மும்பை) அணிக்கும் உரிமையாளராக இடம் பிடித்திருக்கிறார்கள். இதனால் நாடு முழுவதும் இந்த போட்டிக்கான ஆர்வத்தை கூட்டாக உயர்த்தியிருக்கிறது. 


ஐ எஸ் பி எல் உடன் ராம்சரண் இணைந்திருப்பது சாதாரணமான பார்ட்னர்ஷிப் அல்ல. இது நிஜாம் நகரத்தில் உள்ள வீரர்களுக்குள் இருக்கும் கிரிக்கெட் ஆர்வத்தை ஆற்றல் மிக்க வகையில் தூண்டுவதாகும். மேலும் விளையாட்டு வீரர்களின் ஒத்துழைப்பு மற்றும் ராம் சரணின் நட்சத்திர ஆற்றல் இவை இணைந்து, கிரிக்கெட் விளையாட்டின் மீது அசைக்க முடியாத உற்சாகத்தையும், ஹைதராபாத் அணியின் உரிமையாளரான ராம்சரண்.. இந்த போட்டிக்கு கூடுதல் சக்தியையும் கொண்டு வருகிறார். ஹைதராபாத் மற்றும் அதற்கு அப்பால் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு ஒரு மறக்க இயலாத பயணத்திற்கும் அவர் உறுதியளிக்கிறார்.‌ ஐ எஸ் பி எல் இன் துடிப்பான பதாகையின் கீழ் சினிமா மற்றும் கிரிக்கெட் ஒன்றிணைவது... விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தளத்தின் எல்லையை மறு வரையறை செய்வதாக அமைக்கப்பட்டுள்ளது. இது எல்லைகளைக் கடந்து மில்லியன் கணக்கிலானவர்களின் இதயங்களை கவரும் ஒரு காட்சியையும் உருவாக்குகிறது. ராம் சரணின் உரிமையின் கீழ் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத தயாராகி வரும் ஐ எஸ் பி எல் கிரிக்கெட் போட்டி வழங்கும் இணையற்ற அனுபவத்திற்கு தயாராகுங்கள்.


Players are encouraged to register here: www.ispl-t10.com


ஐ எஸ் பி எல் இன் முதல் சீசன் 2024 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி முதல் முதல் மார்ச் 9 வரை இந்தியாவின் முக்கியமான நகரங்களான மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, ஸ்ரீநகர் (ஜம்மு & காஷ்மீர்) ஆகிய இடங்களில்.. ஆறு அணிகளுக்கு இடையேயான 19 போட்டிகளாக நடைபெறுகிறது.‌ 


இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக் உடனான தனது தொடர்பு குறித்து ராம் சரண் பேசுகையில், '' ஐ எஸ் பி எல் இன் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது கிரிக்கெட் சார்ந்த பொழுது போக்கை மறுவரையறை செய்வதை உறுதியளிக்கிறது. ஹைதராபாத் எப்போதும் விதிவிலக்கான கிரிக்கெட் திறமையாளர்களின் மையமாக இருந்து வருகிறது. இந்த லீக் போட்டி எங்களுடைய உள்ளூர் வீரர்களுக்கு தேசிய அளவிலான அரங்கத்தில் பிரகாசிக்க ஒரு அருமையான தளத்தை வழங்குகிறது. ஹைதராபாத் அணியை வழிநடத்தவும், நகரத்தின் கிரிக்கெட் திறமையை.. இது போன்ற பெரிய போட்டிகளில் வெளிக்கொணரவும் நான் உற்சாகமாக இருக்கிறேன்'' என்றார். 


வழக்கமான விதிமுறைகளிலிருந்து விலகி, 19 வயதுக்குட்பட்டவருக்கான குறைந்த பட்சம் ஒரு வீரையாவது விளையாடும் வீரர்களின் பட்டியலில் இணையவேண்டும். இதைத் தவிர, ஐ எஸ் பி எல் - வயது வரம்புகளை விதிக்கவில்லை. இந்த புதுமையான அணுகுமுறை.. ஐஎஸ்பிஎல்..ஐ நாடு முழுவதும் மறைந்திருக்கும் திறமையாளர்களை கண்டறிய ஒரு வளமான மைதானமாகவும் நிலை‌நிறுத்துகிறது. 


இந்த போட்டி தொடர்பாக ஐ எஸ் பி எல்லின் கோர் கமிட்டி உறுப்பினர் ஆஷிஷ் ஷெலர் பேசுகையில், '' ஐ எஸ் பி எல் உடன் ராம்சரண் இணைந்தது எங்களுடைய லீக் போட்டிற்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கி இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டு மற்றும் நட்சத்திர வலிமையின் மீதான அவரது ஆர்வம் சந்தேகத்திற்கு இடமின்றி.. ஹைதராபாத்தில் வளரும் இளம் கிரிக்கெட் வீரர்களை இந்த ஒரு வகையிலான போட்டிக்கு பதிவு செய்ய ஊக்குவிக்கும். வீரர்களிடமிருந்து வெற்றிகரமான ஒத்துழைப்பையும், உற்சாகமான சீஸனையும் எதிர் நோக்குகிறோம்'' என்றார். 


இது தொடர்பாக கோர் கமிட்டியின் மற்றொரு உறுப்பினரான அமோல் காலே பேசுகையில், '' ஐ எஸ் பி எல் கிரிக்கெட் லீக் போட்டி மட்டுமல்ல இது திறமை மற்றும் விளையாட்டு திறனின் கொண்டாட்டத்தை கொண்டது. ராம்சரணின் ஈடுபாடு.. இத்தகைய லீக் போட்டியில் நட்சத்திரங்கள் நிறைந்த பட்டியலை மேம்படுத்துகிறது. மேலும் ஒரு புதிய ஆற்றலையும் வழங்குகிறது. ஹைதராபாத் வீரர்களே..! இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த லீக் சீசனை மறக்க முடியாததாக மாற்றுவோம்.'' என்றார்.  


ஐ எஸ் பி எல் லீக் போட்டிக்கான ஆணையர் சூரஜ் சமத் பேசுகையில், '' ஹைதராபாத் அணியுடன் ராம்சரண் இணைவதன் மூலம் ஒரு உயர்ந்த தரத்திலான போட்டியை எதிர்பார்க்கிறோம். ராம்சரணின் கவர்ச்சியும், அணி மீதுள்ள நம்பிக்கையும், அவர்களை களத்தில் சிறப்பாக செயல்பட தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. கடுமையான மற்றும் விறுவிறுப்பான போட்டியையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஹைதராபாத் அணி.. ராம்சரண் தலைமையில் ஒரு அடையாளத்தை உருவாக்கவுள்ளது.'' என்றார்.


ஐ எஸ் பி எல் லீக் போட்டியின் முதல் சீசனுக்கு தயாராகி வரும் நிலையில்... ஆர்வமுள்ள வீரர்கள் ஐ எஸ் பி எல் இன் அதிகராப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, மாநகரத்தில் நடைபெறும் சோதனை போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளையும், தங்களுடைய 'கோல்டன் டிக்கெட்'டை பெறுவதற்கும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மைதானத்திலும் உள்ள சோதனைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இது ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பிரம்மாண்டமான மேடையில் பிரகாசிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த கிரிக்கெட் களியாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பை தவற விடாதீர்கள்.!


Players are invited to register for the tournament here:  www.ispl-t10.com

GLOBAL STAR RAM CHARAN THE PROUD OWNER OF HYDERABAD TEAM IN

GLOBAL STAR RAM CHARAN THE PROUD OWNER OF HYDERABAD TEAM IN INDIAN STREET PREMIER LEAGUE*




The Indian Street Premier League (ISPL), an innovative tennis ball T10 cricket tournament staged within the confines of a stadium, is elated to announce Global Star Ram Charan as the proud owner of the Hyderabad team. This groundbreaking revelation adds another luminary name to the list of Bollywood superstars venturing into team ownership, including Akshay Kumar (Srinagar), Hrithik Roshan (Bengaluru), and Amitabh Bachchan (Mumbai), collectively amplifying cricket fervor to unprecedented levels nationwide.


Ram Charan's association with ISPL transcends mere ownership; it symbolizes a dynamic collaboration poised to ignite the flames of cricket passion in the city of Nizams. With his star power and unwavering enthusiasm for the sport, Ram Charan injects an electrifying energy into the league, promising an unforgettable journey for cricket enthusiasts in Hyderabad and beyond. The convergence of cinema and cricket under the vibrant ISPL banner is set to redefine the sports and entertainment landscape, creating a spectacle that transcends boundaries and captures the hearts of millions. Brace yourselves for an unparalleled cricketing experience as the ISPL, under the stewardship of Ram Charan, prepares to inscribe a new chapter in India's cricketing saga.


The inaugural edition of ISPL is scheduled to enthrall cricket enthusiasts from March 2nd to March 9th, 2024, in the dynamic city of Mumbai, featuring a dazzling array of 19 matches among six competitive teams – Hyderabad, Mumbai, Bengaluru, Chennai, Kolkata, and Srinagar (Jammu and Kashmir).

Expressing his enthusiasm for his association with the Indian Street Premier League, Ram Charan shared, "I am thrilled to be part of ISPL, a unique initiative that promises to redefine cricket entertainment. Hyderabad has always been a hub of exceptional cricketing talent, and this league provides a fantastic platform for our local players to shine on the national stage. I am excited to lead the Hyderabad team and witness the city’s cricketing prowess unfold on this grand platform.”


Diverging from conventional norms, ISPL imposes no age restrictions, except for the inclusion of at least one player from the U-19 age group category in the playing XI. This innovative approach positions ISPL as fertile ground for discovering hidden talents across the country.


Ashish Shelar, Core Committee Member of the Indian Street Premier League, commented, “Ram Charan’s entry into ISPL adds a new dimension to our league. His passion for the game and star power will undoubtedly inspire budding cricketers in Hyderabad to register for this one-of-a-kind tournament. We look forward to a successful collaboration and an exciting season ahead.”


Amol Kale, another Core Committee Member, emphasized, “ISPL is not just a cricket league; it’s a celebration of talent and sportsmanship. Ram Charan’s involvement enhances the league’s star-studded lineup and brings a new energy. Hyderabad players, seize this opportunity, and let’s make this season unforgettable!”


Suraj Samat, the ISPL League Commissioner, anticipates an elevated level of competition with Ram Charan's association with the Hyderabad team. He stated, “Ram Charan’s charisma and belief in the team will undoubtedly spur them to perform exceptionally well. We anticipate a fierce and thrilling competition, and the Hyderabad team, with Ram Charan at the helm, is set to make a mark.”


As the league gears up for its inaugural edition, aspiring players are encouraged to register on the ISPL Official Website and secure their 'Golden Ticket' for a chance to participate in city trials. Further details about the trials in each venue will be announced soon, providing aspiring cricketers with an opportunity to shine on the grand stage. Don't miss your chance to be part of this cricketing extravaganza!


Aspiring Players are encouraged to register here: www.ispl-t10.com