Featured post

நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

 ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வ...

Thursday, 30 January 2025

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் 'டாடா'

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் 'டாடா' இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' அரசியல் திரில்லர் திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது*










*தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால், ரவி மோகன் ஜோடியாக அறிமுகமாகிறார்*


பல வெற்றிப் படங்களையும் 'மத்தகம்' இணையத் தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது. 


சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் 'கராத்தே பாபு' படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாக இவர்களுடன் முக்கிய வேடங்களில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் நடிக்கின்றனர்.


படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, "அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது. உணர்வுப் பூர்வமான அரசியல் திரில்லராக இது உருவாகி வருகிறது," என்று தெரிவித்தார். 


ரவி மோகனுடன் பணியாற்றுவது குறித்து பேசிய அவர், "ஒரு முன்னணி நடிகருடன் வேலை செய்வது போல இல்லாமல் எந்த டென்ஷனும் இன்றி மிகவும் கூலாக இப்படத்தை உருவாக்கி வருகிறோம். இதற்கு காரணம் ரவி மோகன் வழங்கும் முழு ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பும் தான். இதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.  


இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு முதல் கட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 




இசை - சாம் சி எஸ்


ஒளிப்பதிவு - எழில் அரசு கே படத்தொகுப்பு - கதிரேஷ் அழகேசன் 


தயாரிப்பு வடிவமைப்பு - சண்முகராஜா




இதர நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விவரம்:


நடிகர்கள்: வி.டி.வி கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜா ராணி பாண்டியன், இலன், சாம் ஆண்டர்சன், ஸ்ரீ தன்யா, சந்தீப் ரவி ராஜ், ஆனந்தி, சிந்து பிரியா, அஜித் கோஷ், கல்கி ராஜா, நைஃப் நரேன், வெற்றி, அரவிந்த், தர்மராஜ், நந்தினி செந்தமிழன், ஜீவா சுப்ரமணியம், மணிமேகலா


இணை எழுத்தாளர்கள்: ரத்ன குமார், பாக்கியம் சங்கர்


சண்டை பயிற்சி: திலிப் சுப்பராயன்


ஒலி வடிவமைப்பாளர்: அருணாச்சலம் சிவலிங்கம்


நடன இயக்குநர்: சதீஷ் கிருஷ்ணன்


ஆடை வடிவமைப்பாளர்: காயத்ரி பாலசுப்ரமணியன்


தயாரிப்பு நிர்வாகி: கார்த்திக் ஆனந்த்கிருஷ்ணன்


நிர்வாகத் தயாரிப்பாளர்: கே.எஸ். செந்தில் குமார்


விநியோகத் தலைவர்: கிரண் குமார் எஸ்


கோ டைரக்டர்: எஸ் ஏ பாஸ்கரன்


தயாரிப்பு: சுந்தர் ஆறுமுகம்


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கணேஷ் கே பாபு


***



கவனத்தை ஈர்க்கும் ஸ்ருதிஹாசனின் 'தி ஐ '( The Eye) பட ஃபர்ஸ்ட் லுக்

 *கவனத்தை ஈர்க்கும் ஸ்ருதிஹாசனின் 'தி ஐ '( The Eye) பட ஃபர்ஸ்ட் லுக்* 



*வரவேற்பை பெற்று வரும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'தி ஐ' ( The Eye ) ஹாலிவுட் பட ஃபர்ஸ்ட் லுக்*


இசைக்கலைஞர்- பாடகி - பாடலாசிரியர்- தனித்துவமான திறமை மிக்க நடிகை- என பன்முக ஆளுமையான ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் தி ஐ ( The Eye) எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதற்கு உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. 


ஹாலிவுட் இயக்குநர் டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தி ஐ ' ( The Eye) எனும் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன், மார்க் ரௌலி, லிண்டா மார்லோவ், பெரு கவாலியேரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜேம்ஸ் செக்வின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஸ்விட்சர் இசையமைத்திருக்கிறார். 


இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் டயானா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இயக்குநரான டாட்னே ஷ்மோன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டு, 'அற்புதமான மற்றும் துணிச்சல் மிக்க ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் எப்போதும் எங்களின் 'டயானா'வாக இருப்பார். லண்டன், கிரீஸ், அமெரிக்கா மற்றும் இந்தியாவை சார்ந்த 'தி ஐ' படக் குழுவினர் இந்த பிரத்யேக நாளில் உங்களை போற்றுகிறோம். கொண்டாடுகிறோம்@ ஸ்ருதிஹாசன் '' என பகிர்ந்து கொண்டிருக்கிறார். 


இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஸ்ருதிஹாசன்- டயானா கதாபாத்திரத்தில் நீல வண்ணத்தில் கழுத்தை மூடிய  ஸ்வெட்டர் அணிந்து கவலையுடன் தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.


இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு நடிகை ஸ்ருதிஹாசன், மூன்று ஹாட்டின் இமோஜிகளுடன், 'நன்றி என் அன்பானவர்களே ' என பதிவிட்டு, தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 


சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படம் கிரேக்க நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் மற்றும் லண்டனில் நடைபெற்ற சுயாதீன படைப்புகளுக்கான திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டு அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. 


ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கோலிவுட் நட்சத்திரமான ஸ்ருதிஹாசனுக்கு ஏராளமான வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 


இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது 'தி ஐ' ( The Eye) எனும் ஹாலிவுட் படத்திலும், நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்திலும், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ' ட்ரெயின்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

OCCUCON 2025: A Milestone for Occupational Health

OCCUCON 2025: A Milestone for Occupational Health





The Tamil Nadu branch of the Indian Association of Occupational Health (IAOH) is proud to announce the 75th National Conference on Occupational Health, OCCUCON 2025, from January 29 to February 1, 2025, at the Radisson Blu GRT, Chennai.  Each year, IAOH hosts this National Conference, highlighting workplace initiatives, best practices, and research from a diverse group of professionals, including doctors, safety experts, and HR representatives. 

IAOH, established in 1948, serves as a national organization focused on promoting and maintaining the health and safety of workers in various industries. Originally named the Society for the Study of Industrial Medicine (SSIM), it has grown in membership to about 3,000 today, with branches across the country. IAOH is affiliated with the International Commission on Occupational Health (ICOH), the leading global scientific body in occupational health, and the Society of Occupational Medicine[SOM] in the UK. In a historic achievement, India will host the ICOH 2027 Congress in Mumbai, the first-ever in the country, further elevating its significance on the global stage.

OCCUCON will host over 450 participants, including international delegates, ICOH representatives, and experts, with the theme “Occupational Health & Wellbeing: A Key to Organizational Sustainability.” Key highlights include workshops, academic sessions, and discussions on the latest trends in workplace health. Over ninety scientific papers and posters, alongside participation from current and former office bearers of ICOH and SOM, are being featured this year.

This diamond-jubilee year, the Tamil Nadu branch has conducted Continuing Medical Education (CME) programs in Madurai which attracted occupational health physicians from across southern Tamil Nadu, encouraging new memberships for IAOH. Our branch plans to organize similar initiatives in other districts.

OCCUCON 2025 underscores IAOH’s ongoing commitment to advancing occupational health in India, serving as a platform for sharing knowledge and reinforcing the commitment to creating safe and sustainable workplaces, a priority as India navigates the complexities of its growing workforce.


Dr. Sudha S. Ramachandran                                                      Dr. S. Sarangadharan

Conference Director                                                                   Conference Secretary

OCCUCON 2025: தொழில்சார் ஆரோக்கியத்திற்கான ஒரு மைல்கல்

 *OCCUCON 2025: தொழில்சார் ஆரோக்கியத்திற்கான ஒரு மைல்கல்*





சென்னை, ஜனவரி 27, 2025 – 

இந்தியத் தொழில்சார் சுகாதாரச் சங்கத்தின் (IAOH - Indian Association of Occupational Health) தமிழ்நாடு கிளையானது, தொழில்சார் ஆரோக்கியம் குறித்த 75 ஆவது தேசிய கருத்தரங்கு - OCCUCON 2025, ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1, 2025 வரை, சென்னையில் உள்ள ராடிசன் ப்ளூ GRT இல் அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.  ஒவ்வொரு ஆண்டும், IAOH இந்த தேசிய கருத்தரங்கினை நடத்துகிறது. இக்கருத்தரங்கில், மருத்துவர்கள், பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் மனிதவளப் பிரதிநிதிகள் என பலதரப்பட்ட நிபுணர்கள் கலந்து கொண்டு, பணியிடத்தில் முன்முயற்சிகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது.


IAOH, 1948 இல் நிறுவப்பட்டு, பல்வேறு தொழில்களில் உள்ள தொழிலாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் கவனம் செலுத்தும் ஒரு தேசிய அமைப்பாகச் செயல்படுகிறது. முதலில், தொழில்துறை மருத்துவ ஆய்வுக்கான சங்கம் (SSIM - Society for the Study of Industrial Medicine) என்று பெயரிடப்பட்டது. தற்போது, சுமார் 3,000 உறுப்பினர்களைக் கொண்டு நாடு முழுவதும் கிளைகளுடன் வளர்ந்துள்ளது. IAOH, தொழில்சார் ஆரோக்கியத்தில் முன்னணி உலகளாவிய அறிவியல் அமைப்பான,  தொழில்சார் ஆரோக்கியத்திற்கான சர்வதேச ஆணையம் (ICOH - International Commission on Occupational Health), மற்றும் UK இல் உள்ள தொழில் மருத்துவ சங்கம் (SOM - Society of Occupational Medicine) ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. ஒரு வரலாற்று சாதனையாக, நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ICOH 2027 காங்கிரஸை இந்தியா நடத்தவுள்ளது, இது உலக அரங்கில் அதன் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தும்.


OCCUCONஇல், சர்வதேச பிரதிநிதிகள், ICOH பிரதிநிதிகள் மற்றும் வல்லுநர்கள் உட்பட 450 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கருத்தரங்கில், "தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு: நிறுவன நிலைத்தன்மைக்கான திறவுகோல் (Occupational Health & Wellbeing: A Key to Organizational Sustainability)" என்ற தலைப்பு விவாதிக்கப்படும். இக்கருத்தரங்கின் முக்கிய சிறப்பம்சங்களாக, பயிலரங்குகள், கல்வி அமர்வுகள், பணியிட ஆரோக்கியத்தின் சமீபத்திய போக்குகள் பற்றிய விவாதங்கள் ஆகியவை அடங்கும். ICOH மற்றும் SOM இன் தற்போதைய மற்றும் முன்னாள் அலுவலகப் பணியாளர்களின் பங்கேற்புடன் தொண்ணூறுக்கும் மேற்பட்ட அறிவியல் ஆவணங்கள் மற்றும் சுவரொட்டிகள் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ளன.


இந்த வைர விழா ஆண்டில், தமிழ்நாடு கிளை, மதுரையில் தொடர்ச்சியான மருத்துவக் கல்வி (CME - Continuing Medical Education) நிகழ்ச்சிகளை நடத்தியது, இது, தென் தமிழகம் முழுவதும் உள்ள தொழில்சார் சுகாதார மருத்துவர்களை ஈர்த்து, IAOH க்குப் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு வித்திட்டது. இதே போன்ற முயற்சிகளை மற்ற மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்ய எங்கள் கிளை திட்டமிட்டுள்ளது.


OCCUCON 2025, இந்தியாவில் தொழில்சார் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான IAOH இன் உறுதிப்பாட்டினை வலியுறுத்துகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் பணியாளர்களின் சிக்கல்களை சரிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அது தொடர்பான அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும், பாதுகாப்பான மற்றும் நிலையான பணியிடங்களை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு தளமாக OCCUCON 2025 செயல்படுகிறது.


Dr. சுதா S. ராமச்சந்திரன்                                                    

கருத்தரங்கு இயக்குநர் 


Dr. S. சாரங்கதாரன்

கருத்தரங்கு செயலாளர்

Wednesday, 29 January 2025

Celebrate Valentine’s Day with Love, Laughter, and “Madurai Paiyanum Chennai Ponnum” on

Celebrate Valentine’s Day with Love, Laughter, and “Madurai Paiyanum Chennai Ponnum” on AhA Tamil**  




This Valentine’s Day, **AhA Tamil** brings a refreshing take on romance with its new web series, **“Madurai Paiyanum Chennai Ponnum”**. A perfect blend of comedy, emotions, and Tamil culture, the series promises to keep audiences entertained and charmed.  


**Synopsis:**  

Set against the vibrant backdrop of Tamil Nadu, “Madurai Paiyanum Chennai Ponnum” is a heartwarming rom-com that explores the cultural and personal differences between a Madurai boy and a Chennai girl. Will their contrasting worlds collide or create sparks of love?  


**Cast & Crew:**  

- **Angeline**, a popular influencer and anchor, makes her much-anticipated debut as the bubbly and confident Chennai Ponnu.  

- **Kanna Ravi**, known for his versatile performances, plays the charming and grounded Madurai Paiyan.  

- **Director:** Vignesh Pazhanivel  

- **Director of Photography:** Murugesh Veera  

- **Music Composer:** Saachin Raj Chelory  


The series is a visual treat with stunning cinematography and soulful music, perfectly capturing the essence of Tamil romance.  


**Release Date:**  

The series will premiere on **February 14, 2025**, exclusively on **AhA Tamil**, making it the perfect binge-watch for lovebirds and rom-com enthusiasts.  


Join us as we celebrate love in all its forms with this feel-good series. Don’t miss out!

இந்த காதலர் தினத்தன்று, **ஆஹா தமிழ்** அதன் புதிய வெப் சீரிஸ்

இந்த காதலர் தினத்தன்று, **ஆஹா தமிழ்** அதன் புதிய வெப் சீரிஸ்  **"மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்"** மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதலைக் கொண்டுவருகிறது. 




மதுரை பையனுக்கும் சென்னைப் பெண்ணுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளை ஆராயும் ஒரு மனதைக் கவரும் வெப் சீரிஸ் ஆக தயாரிக்கப்பட்டுள்ளது.


பிரபல இணைய மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஏஞ்செலின் இந்த தொடரின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு இணையாக தொடரின் நாயகனாக கண்ணா ரவி நடிக்கின்றார் .இவர்களுடன் ரேணுகா , குரேஷி, ஷ்யாமா ஷர்மி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.


விக்னேஷ் பழனிவேல் இயக்கும் இந்த வெப் சீரிஸ் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 14 அன்று வெளியாகவுள்ளது .காதலை கொண்டாடும் இந்த தொடரை காதலர் தினத்தன்று ஆஹா ஓடிடி தளத்தில் காணத்தவறாதீர்கள்.


---  


**

நல்ல காரணத்திற்காக ரோட்டரி கிளப்பின் மாரத்தான் நிகழ்ச்சியில்

 *நல்ல காரணத்திற்காக ரோட்டரி கிளப்பின் மாரத்தான் நிகழ்ச்சியில் இணைந்துகொண்ட ‘கெவி’ படக்குழு*






டெகாத்லான் மற்றும் விளையாட்டு அரங்கத்துடன் இணைந்து ஒரு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரோட்டரி கிளப் ஒரு மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. துவக்கத்தில் இந்த நிகழ்ச்சி போதை பொருட்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாகவே திட்டமிடப்பட்டு இருந்தது. 


அதேசமயம் ‘கெவி’ திரைப்பட குழுவினர், கிராமத்து பகுதிகளில் தரமான சாலைகள் அமைப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது குறித்த இதேபோன்று இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த சமூக பிரச்சனையை கையிலெடுத்து ரோட்டரி கிளப்புடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.


சாலைகள், மருத்துவமனைகள், மற்றும் பள்ளிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் பற்றாக்குறையாக உள்ள, ரொம்பவே தொலைதூர பகுதிகளுக்குள் இருக்கும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை போராட்டங்களை மையப்படுத்தி ‘கெவி’ திரைப்படம் உருவாகியுள்ளது. 


கெவி படக்குழுவினர் மலைக் கிராமத்து மக்கள் பயன்படுத்தும்‘டோலி’ என்கிற சாதனத்தை  கைகளில் பிடித்தபடி இந்த மாரத்தான் நிகழ்வில் கலந்துகொண்டனர். 


இந்த தனித்துவம் கொண்ட முயற்சியின் மூலமாக தமிழகத்தின் மேற்கத்திய மலைப்பகுதி கிராம மக்கள் சந்திக்கும் சவால்கள் மீது அனைவரின் கவனத்தையும் திருப்ப வைத்துள்ளனர்.


‘கெவி’ திரைப்படத்தை பிரபலப்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் தங்களை இணைத்துக்கொண்டாலும் கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே பிரதான நோக்கமாக கொண்டிருந்தனர்.  இந்த கூட்டு முயற்சியானது, சமூகத்தில் ஆக்கப்பூர்வமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஒன்றாக இந்த டெக்கத்லான் விழா நடைபெற்றது. 


*A.John PRO*

Rotary Club Marathon Event for a Noble Cause

 Rotary Club Marathon Event for a Noble Cause






The Rotary Club, in association with Decathlon and Sport Arena, organized a marathon event to promote a social cause. Initially, the event aimed to raise awareness about the dangers of drugs. However, the team behind the movie "Gevi" joined forces with the organizers to shift the focus towards a more pressing issue: the need for proper roads and infrastructure in rural areas.


The movie "Gevi" highlights the struggles of people living in remote villages, where basic necessities like roads, hospitals, and schools are scarce. The film's team participated in the marathon, by holding a mode of transport named "Doli" to complete the Marathon which is used by the villagers. Through this unique effort, they drew attention to the challenges faced by villagers, particularly in the Western Ghats region.


By combining the marathon event with the promotion of movie "Gevi," the organizers and the film's team aimed to inspire change and raise awareness about the importance of infrastructure development in rural areas. This collaborative effort demonstrates the power of creative partnerships in driving social impact.

Shakthi Thirumagan – A Landmark Film in Vijay Antony’s Career

*Shakthi Thirumagan* – A Landmark Film in Vijay Antony’s Career




The much-anticipated film Shakthi Thirumagan, starring Vijay Antony, is set to be a milestone in his illustrious career. This marks his 25th film, promising to be a mass action family entertainer that will captivate audiences with its power-packed performances and gripping storyline.


A Blend of Mass Appeal & Strong Storytelling


Directed by Arun Prabu, known for his critically acclaimed films Aruvi and Vaazhl, Shakthi Thirumagan retains his signature storytelling while delivering a high-octane action spectacle. The film is produced by Vijay Antony Films Corporation, Meera Vijay Antony presenting the project.


The film’s ensemble cast includes seasoned actors Vaagai Chandrasekar, Sunil Kriplani, Cell Murugan, Trupthi Ravindra, and child actor Master Keshav, adding depth and versatility to the narrative.


Technical Brilliance Behind the Film


The film boasts a stellar technical crew:


Writer-Director: Arun Prabu


Cinematography: Shelley Calist


Music: Vijay Antony


Editing: Raymond Derrick Crasta


Action Choreography: Rajashekar



With its powerful mass appeal, intense family drama, and a blend of action and emotions, Shakthi Thirumagan is set to be a defining moment in Vijay Antony’s career. The film is currently in post-production, and the team is working diligently to deliver a grand cinematic experience to audiences soon.


Stay tuned for further updates on Shakthi Thirumagan!