Featured post

உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு

 *உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு* தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிக...

Thursday, 23 July 2026

நடிகர் திரு. சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ₹4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

 நடிகர் திரு. சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ₹4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


நடிகர் திரு. சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் குழந்தைகளுக்காக ₹4 லட்சம் மதிப்பிலான 51 தங்க மோதிரங்கள், பேபி ஹேர் கிட்கள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.


இந்த நலத்திட்டம் அயனாவரம் அரசு மகப்பேறு மருத்துவமனை, புரசைவாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் புளியந்தோப்பு அரசு மகப்பேறு மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தயாரிப்பாளர் திரு. ராஜசேகர் பாண்டியன் அவர்கள், குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்வை சிறப்பித்தார்.


சமூக அக்கறையையும், மனிதநேயத்தையும் முன்னிறுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பொதுமக்கள் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் திரு. சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment