Featured post

அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு

 *அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்  டீசர் வெளியீடு* அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்தி...

Thursday, 27 February 2025

தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி! - ஷபீர் சாம்பியன் பட்டம்

 தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி! - ஷபீர் சாம்பியன் பட்டம் வென்றார்



சென்னையில் நடைபெற்ற முதல் மாநில அளவிலான தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி!


முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள ’லெட்ஸ் பவுல்’ டென்பின் பவுலிங் விளையாட்டு மையத்தில் நடைபெற்று வந்த நிலையில், இதன் இறுதிப் போட்டி இன்று (பிப்ரவரி 26) ஆம் தேதி நடைபெற்றது.


சிறந்த மூன்று விளையாட்டுகளின் அடிப்படையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஷபீர் தன்கோட் - விஷ்ணு.எம் மோதினார்கள். இதில், முதல் இரண்டு விளையாட்டுகளில் தலா ஒரு வெற்றியுடன் இருவரும் சமநிலையில் இருந்தனர். (162-173 & 212-201) மூன்றாவது விளையாட்டில், ஷபீர் தன்கோட், தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஷ்ணுவை 5 பின்கள் என்ற குறுகிய வித்தியாசத்தில் (180-175) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றார்.


முன்னதாக முதல் அரையிறுதியில் சிறந்த மூன்று விளையாட்டுகளின் அடிப்படையில் விளையாடிய விஷ்ணு, தன்னை எதிர்த்து விளையாடிய ஆனந்த் பாபுவை 2-0 (173-171 & 192-143) என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.


இரண்டாவது அரையிறுதியில் ஷபீர் மற்றும் தீபக் மோதினார்கள். இதில், முதல் இரண்டு விளையாட்டுகளுக்குப் பிறகு (184-164 & 208-215) தலா ஒரு வெற்றியுடன் இருவரும் சமநிலையில் இருந்த நிலையில், மூன்றாவது விளையாட்டில் ஷபீர், (152-126) என்ற கணக்கில் தீபக்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.


மஹிபால் சிங் 2 வது சுற்றுக்குப் பிறகு 2393 பின்பாலுடன் 199.42 சராசரி பெற்று முதல் இடத்தைப் பிடித்தார், அவரைத் தொடர்ந்து ஷபீர் தன்கோட்  2386 பின்பால் 198.83 சராசரியை பெற்றார்.


6 விளையாட்டுகளின் பிளாக்கில் அதிகபட்ச சராசரி (201.1) பெற்ற மஹிபால் சிங் மற்றும் 225-க்கு மேல் என்ற அதிகபட்ச ஸ்கோர்கள் (2) பெற்ற ஷபீர் தன்கோட் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

1st Tamil Nadu State Ranking Tenpin Bowling Tournament LetsBowl

 Tamil Nadu Tenpin Bowling

Association

(Affiliated to Tenpin Bowling Federation (India)) - 26th February 2025



1st Tamil Nadu State Ranking Tenpin Bowling Tournament LetsBowl,

Thoraipakkam, Chennai



‘Shabbir Wins title’


Shabbir Dhankot defeated Vishnu M (2-1), in the finals of the 1st Tamil Nadu State Ranking Tenpin

Bowling Tournament which concluded at LetsBowl, Thoraipakkam, Chennai today 26th February 2025.


In the finals played based on the best of three games, Shabbir and Vishnu were tied with one game win each after the first two games (162-173 &212-201) In Game 3, Shabbir defeated

Vishnu by a narrow margin of 5 pins (180-175) to eventually claim the trophy.


Earlier in the day, in the first Semi-Final played based on the best of three games format Vishnu

trounced Anand Babu 2-0 (173-171 &192-143). In the second Semi-Final, Shabbir and Deepak

were tied with one game win each after the first two games (184-164 & 208-215).In Game 3

Shabbir managed to defeat Deepak (152-126) to enter the finals.


Mahipal Singh finished on top of the table after Round 2 with a pinfall 2393 at an impressive average of 199.42 followed by Shabbir Dhankot (Pinfall – 2386, Average – 198.83).



Special Prizes:

Highest Average in 6 Game Block: Mahipal Singh (201.1)

Maximum No. of Scores above 225: Shabbir Dhankot (2)

Favourite of the 90s, Rambha all set for a Stunning Silver Screen Comeback

 *Favourite of the 90s, Rambha all set for a Stunning Silver Screen Comeback*








Renowned actor Rambha, a beloved name in Indian cinema, is all set to make her much-anticipated comeback to the silver screen. After taking a break from acting, the versatile performer is now eager to embrace roles that challenge her craft and allow her to showcase her acting prowess like never before.  


With a career spanning multiple languages, including Tamil, Telugu, Malayalam, Hindi, and Kannada, Rambha has captivated audiences with her charm, grace, and effortless performances. Known for her impeccable comic timing, powerful screen presence, and memorable dance numbers, she remains a fan favorite even today.  


Speaking about her return, Rambha expressed her excitement, saying, "Cinema has always been my first love, and I feel the time is right to come back and take on roles that truly challenge me as an actor. I’m looking forward to performance-driven characters that allow me to explore new dimensions and connect with audiences in a meaningful way."


Fans and audience are eagerly awaiting her return, hoping to see her in roles that highlight her versatility and depth as a performer.  


Rambha’s comeback marks a new chapter in her illustrious career, and the film fraternity is excited to witness her magic on screen once again.

நெஞ்சிற்கினிய ஊடக நண்பர்களுக்கு அன்பு வணக்கம்

 நெஞ்சிற்கினிய ஊடக நண்பர்களுக்கு அன்பு வணக்கம், 



ஒரு இயக்குனராக அகத்தியா திரைப்படத்தை பற்றிய எண்ணப் பதிவினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் 


மூன்றாண்டு கால தொடர் உழைப்பில் நேர்த்தியான தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டணியோடு vels film international limted டாக்டர் கே.ஐசரி கணேஷ் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் wide angle media அனீஸ் அர்ஜூன்  தேவ் இணைதயாரிப்பில் , நடிகர்கள் ஜீவா, அர்ஜூன் ,ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் அகத்தியா திரைப்படத்தின் ஊடக நண்பர்கள் காட்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி 



ஒரு நிறையான படைப்பாக அகத்தியாவை உங்கள் முன் முதல் காட்சியாக திரையிடும் இந்நேரத்தில் தமிழ் மரபு சார்ந்த ஒரு முக்கியப்  பதிவையும் நம் மண்ணும் நம் முன்னோர்களும் நமக்களித்த பெரும் ஆற்றலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியையும் அகத்தியா திரைப்படத்தில் கதைக்களமாக படைத்துள்ளோம். 


இந்நேரத்தில் ஒரு இயற்கையின் அதிசய ஆசீர்வாதமும் இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது, நாசா விண்வெளி நிறுவனம் நேற்று  வெளியிட்ட அறிக்கையில்      பிப்ரவரி 28 ஆம் தேதி ஏழு கிரகங்கள் நேர் கோட்டில் சந்திப்பதாக அதிசய நிகழ்வை குறிப்பிட்டுள்ளது.  அதே தேதியில் பிப்ரவரி 28 வெளியாகும் அகத்தியாவும் இந்த நிகழ்வில் இணைக்கிறது . மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இக்கதையை எழுதும் போது அகத்தியாவின் அடிநாதத்தில் வான்வெளியில் நிகழும் ஏழு கிரங்களின் நேர்க்கோட்டு கூட்டணியை ‘கிரக மாலை ’ என்று அழைப்பார்கள் அந்த கிரக மாலை என்கிற அதிசயத்தை இத்திரைப்படத்தின் ஆரம்பக்காட்சி முதலே எதேச்சையாக பதிவாகி கிளைமாக்ஸ் காட்சியே இந்த கிரக மாலை ஏற்படுகிற சம்பவத்தை நோக்கி படமாக்கப்பட்டுள்ளது . . இது இயற்கையின் ஆசிகளாகவே தோன்றுகிறது, 



ஒரு ஹாரர் ஃபேண்டஸி திரைப்படத்திற்குள்  நாங்கள் சொல்ல முயற்சித்திருக்கும் நம் மண் சார்ந்த மரபு வழி அறிவை திரைப்படமாய் படைத்திருக்கிறோம். 



மக்களின் ஜனரஞ்சக வெற்றியை பெறுவதற்கு ஒரு சக நண்பனாக உங்களின் இரு கரங்கள் பற்றி அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன். 



உங்களின் பேராதரவிற்கும் பேரன்பிற்கும் நன்றியுடன் பா.விஜய்.

புத்தம் புது பொலிவுடன் திரையினை அலங்கரிக்க வருகிறது ப்ளாக்பஸ்டர்

 *புத்தம் புது பொலிவுடன் திரையினை அலங்கரிக்க வருகிறது ப்ளாக்பஸ்டர்* *“ஜெயம்” மற்றும் “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” திரைப்படங்கள் !!* 



















தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் திரைத்துறையில் 20 வருடங்களைக் கடந்திருக்கிறார். இதனைக் கொண்டாடும் வகையில் அவர் அறிமுகமான ஜெயம் படமும், பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” படமும் மீண்டும் புதுப்பொலிவுடன்  விரைவில் வெளியாகவுள்ளது. 

  

எடிட்டர் மோகன் தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், 2003 ஆம் வருடம் ரவி மோகனை திரைக்கு அறிமுகப்படுத்திய படம் ஜெயம். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து திரையுலகில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அதர்கடுத்த ஆண்டு 2004 ல் இதே கூட்டணியில் வெளியான    

“எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி”  படமும் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. அதிரடி ஆக்‌ஷன் படமான இப்படத்தை தியேட்டர்களில் மக்கள் கொடுத்த ஆர்பாட்ட ரியாக்‌ஷன் மறக்க முடியாதது. இந்த வெற்றி 

ரவிமோகன்-மோகன்ராஜா இருவர் காம்பினேஷனுக்கும் இன்றைக்கும் பெரும் வரவேற்ப்புள்ளது. 


இந்த இரண்டு திரைப்படங்களும், புத்தம் புதிய பொலிவுடன் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. 

நவீன உயர்தர 4K டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், 

5.1 அட்மாஸ் சவுண்ட் அமைப்பில், இப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.


- Johnson PRO

Re-Release of Actor Ravi Mohan’s All-Time Blockbusters ‘Jayam’ & ‘M. Kumaran S/o Mahalakshmi

 *Re-Release of Actor Ravi Mohan’s All-Time Blockbusters ‘Jayam’ & ‘M. Kumaran S/o Mahalakshmi’ Digitally Remastered versions!* 


















Actor Ravi Mohan has established a strong presence in the film industry over the past 20 years by participating in several blockbuster movies. Among all his extraordinary films, ‘Jayam’ and ‘M Kumaran S/o Mahalakshmi’ happen to be special ones for everyone. 


Here comes the Good News! These films will be re-released in the theatres with digitally remastered versions. 


‘Jayam’ produced by Editor Mohan, and directed by Mohan Raja in 2003 marked the acting debut of Ravi Mohan. The film won a heart-warming reception from fans, and critics, thereby becoming an important milestone in his career. The very next year in 2004, his second outing as actor ‘M Kumaran S/o Mahalakshmi’ turned out to be a blockbuster hit, and was celebrated by audiences in the theatres. These films strengthened the combination of the Ravi Mohan-Mohan Raja duo combo, and their collaborations remain special for everyone even now. 


Both these movies have been digitally remastered with 4K and 5.1 Atmos Sound technology and will be re-releasing soon. 


The official announcement about the re-release dates will be made soon.


- Johnson PRO

SRAM & MRAM குழுமம் மற்றும் Paradigm Pictures AD Ltd ஆகிய நிறுவனங்கள்

 SRAM & MRAM குழுமம் மற்றும் Paradigm Pictures AD Ltd ஆகிய நிறுவனங்கள் லண்டனின் மதிப்புமிக்க வாரன் ஹவுஸில்  தங்களது லேண்ட்மார்க் இணைப்பை அறிவித்தன !! இவர்கள் இருவரும் இணைந்து திரைத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ளன !!

 






உலகளாவிய நிறுவனமான SRAM & MRAM குழுமம் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான Paradigm Pictures AD Ltd ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பு,  மதிப்புமிக்க வாரன் ஹவுஸில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்தியா மற்றும் உலகளவில்  உள்ள பொழுதுபோக்கு துறையில்,  பிரம்மாண்டம், தொழில்நுட்பம் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றில் அற்புதமான பல புதிய முயற்சிகளை இந்த கூட்டாண்மை நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும்.

 

SRAM & MRAM குழுமத்தின் தலைவர் டாக்டர். சைலேஷ் எல். ஹீரானந்தானி மற்றும் Paradigm Pictures-யின் தலைவர் திரு. அர்விந்த் தர்மராஜ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த இணைப்பு மூலம் SRAM & MRAM குழுமம் இந்தியாவின் உயர்மட்ட பொழுதுபோக்குத் துறையில்,  பாரம்பரியத்துடன் கலாச்சாரத்தைப் போற்றும் பல புதிய படைப்புகளை உருவாக்க உதவும்.

 

SRAM & MRAM குழுமம் தொழில்நுட்பம், நிதி, விவசாயம், சுகாதாரம், எரிசக்தி, விருந்தோம்பல் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளின் மூலம் அதன் நற்பெயரைப் பெற்றுள்ளது. முன்னோடி தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் நிலையான நடைமுறைகளில்,  குழுவின் தலைமை அதை உலகளாவிய அதிகார மையமாக மாற்றியுள்ளது. இந்த இணைப்பின் மூலம், SRAM & MRAM தனது நிறுவனத்தை பொழுதுபோக்கு துறையில் கொண்டு வரவுள்ளது. இது தொழில்நுட்ப சிறப்பையும், Paradigm Pictures-யின் படைப்பாற்றல் புத்திசாலித்தனத்தையும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

இவ்விணைப்பின் நோக்கம் குறித்து டாக்டர் சைலேஷ் எல். ஹீரானந்தானி கூறுகையில்…

"எங்கள் பார்வை, உலகத் தரம் வாய்ந்த திரைப்பட நகரத்தை உருவாக்குவது, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள உயர்தர  திறமைகளுடன் அதிநவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து, கதைசொல்லல் மற்றும் தயாரிப்பின் சிறப்பம்சங்களின் தரத்தை, மறுவரையறை செய்வதாகும்" என்றார்.

 

50 ஏக்கர் பரப்பளவில், திரைப்பட நகரம் முன்மொழியப்பட்டு, விரைவில் கட்டுமானத்தைத் தொடங்கும் எனும் திட்டமே இந்த இணைப்பின் மூல நோக்கமாகும்.

 

திரைப்படத் தயாரிப்பிற்கான உலகளாவிய அளவுகோலாகக் கருதப்படும் இந்த வசதி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகளுக்கான தனிப்பயனாக்கக்கூடிய செட்கள் உட்பட விரிவான உள்கட்டமைப்பை வழங்கும். இந்த அனைத்தையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பானது படைப்பாளர்களுக்கான திரைப்படத் தயாரிப்பு செயல்முறையை எளிதாக்கும்.

 

திரைப்பட நகரத்தில்  இடம்பெறும் முக்கிய விஷயங்கள்:

 

● உலகத்தரம் வாய்ந்த ஸ்டுடியோக்கள் - மேம்பட்ட VFX திறன்கள் மற்றும் உயர்தர டப்பிங் மற்றும் எடிட்டிங் ஸ்டுடியோக்கள்.

 

● சொகுசு ப்ரீவியூ தியேட்டர்கள் - டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய, ஐந்து திரையரங்குகள், இதில் இரண்டு பிரஸ் ஸ்கிரீனிங்குகளுக்கு, 100க்கும் மேற்பட்ட இருக்கைகள் மற்றும் மூன்று பிரத்தியேக முன்னோட்டங்களுக்கு 25 அல்ட்ரா-பிரீமியம் இருக்கைகள்.

 

● ஆடம்பரமான தங்கும் விடுதிகள் மற்றும் ரிசார்ட்ஸ் - பத்து உயர்நிலை ஓய்வு விடுதிகள், ஒவ்வொன்றும் தனியார் குளங்கள் மற்றும் நான்கு படுக்கையறைகள் கொண்ட பிரபலங்களுக்கான தங்குமிடங்கள், படக்குழுக்களுக்கான 100 அறை வசதிகளுடன்.

 

● பொழுதுபோக்கு மற்றும் நிகழ்வு இடங்கள் - கஃபே, பப், மாநாட்டு அரங்குகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கான அதிநவீன இடம், தயாரிப்பு மற்றும் ஓய்வு எடுக்கும் நேரத்தைச் சிரமமின்றி இணைக்கிறது.

 

Paradigm Pictures AD Ltd, வாரன் ஹவுஸ் நிகழ்வில் அதன் விருது பெற்ற கேன்ஸ் குறும்படத்துடன் தனது சினிமா திறமையை வெளிப்படுத்தியது. அமேசான் பிரைம் வீடியோவில் 100 மில்லியன் நிமிடங்களைத் தாண்டி வி1 கொலை வழக்கு மற்றும் ஹர்காரா திரைப்படங்கள் மூலம் Paradigm Pictures AD Ltd ஸ்ட்ரீமிங் மைல்கற்களை எட்டியுள்ளது. ஏழு திரைப்படங்களின் முன் தயாரிப்பு  பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதன் மூலம்,   உலகம் முழுவதும் பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை ஸ்டுடியோ தொடர்ந்து வடிவமைத்து வருகிறது.

 

உலகளாவிய மற்றும் பான்-இந்திய தயாரிப்புகள்:

 

புதிதாக இணைக்கப்பட்ட நிறுவனங்கள், அதிநவீன திரைப்பட நகரம் அதன் கட்டுமான கட்டத்தில் நுழைந்தவுடன், உயர்தர பான்-இந்தியத் திரைப்படங்களின் தயாரிப்பைத் தொடங்க தயாராக உள்ளது. ஐந்து படங்களின் முதல் ஸ்லேட் நாவல்கள் மற்றும் நிஜ வாழ்க்கைக் கதைகள் மற்றும் பிரபல நடிகர்களைக் கொண்டு தயாராகவுள்ளது.   ஒரே நேரத்தில், இந்த ஒத்துழைப்பு ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தைகளில் விரிவடையும், சர்வதேச அளவில் ஈர்க்கும் திரைப்படங்களை வழங்குவதற்காக, இந்தியக் கதை சொல்லும் மரபுகளை, உலகளாவிய திரைப்படத் தயாரிப்பின் நிறுவனத்துடன் இணைக்கிறது.

 

இணைப்பின் முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், RingDance Entertainment உடன் உருவான கூட்டணி, ரட் & மைல் எழுதிய புகழ்பெற்ற நாவலான “பேர்ட் விஸ்பரர்” இல் அடிப்படையாகக் கொண்ட நோர்டிக் கேஸ்ஃபைல்ஸ் ட்ரைலாஜிக்கு புதிய உயிர் ஊட்டுகிறது.

 

இந்த லட்சிய திட்டத்தில் பின்வருவன அடங்கும்:

 

● RUUD & MILD: நோர்டிக் கேஸ்ஃபைல்ஸ் (கேம்) - குற்றங்களின் மர்மங்களைத் தீர்க்கும் அனுபவம்.

● BIRD WHISPERER (தொலைக்காட்சித் தொடர்) - ஸ்காண்டிநேவிய குற்றக் கதைகள்.

● PARISTAN (திரைப்படம்) - ஸ்டாக்ஹோமில் காணாமல் போன தனது மகனைத் தேடும் தந்தை, மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த கதை.

 

இந்த நிகழ்வில் BBC, Netflix பிரதிநிதிகள் மற்றும் புகழ்பெற்ற இயக்குநர் டேனி பாயிலின் கூட்டாளிகள் உட்படப் பல  சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்கள், தொழில்நுட்பம், கலைகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பங்களிப்புகளை அங்கீகரித்து, இந்த  இணைப்பைக் கொண்டாடினர்.

 

வாரன் ஹவுஸில் நடந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, உலகளாவிய பொழுதுபோக்கின் மாற்றமான அத்தியாயத்தை முன்னறிவிக்கிறது, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களைக் கவரும் வகையில் புதிய படைப்புகளுக்குக் களம் அமைக்கிறது.

Akash Jagannadh’s High-Octane Action Thriller ‘Thalvar’ Glimpse Creates Sensational Feast

 *Akash Jagannadh’s High-Octane Action Thriller ‘Thalvar’ Glimpse Creates Sensational Feast*




Director Puri Jagannadh, synonymous with his blockbuster commercial hits, has established a huge presence across the country. His son, Akash Jagannadh, has earned impeccable experience as an actor over the years. He began his journey as a child artist, acting in several movies, and later garnered a stupendous reception for his heroic arrival in the industry. While his previous movies have become notable hits, Akash Jagannadh is all set to enthrall the fans with his ultimate action-packed avatar in Thalvar, a big-budget film produced on a grand scale by Dr. Bhaskar ELV, the founder and chairman of ELV Group of Companies and Warnick Studios, and directed by Kasi Parasuuram.


The film’s visual glimpse, which was recently released, has left fans and viewers awestruck with its grandeur and breathtaking action sequences.


The makers of Thalvar are creating this Pan-Indian film with the vision of delivering a top-notch action-packed thriller. Currently, the team is shooting the film, which is expected to be completed by June, followed by the audio launch in September-October and a worldwide theatrical release before the end of this year.


A lot of time has been dedicated to shaping this film, as it features numerous action sequences shot across many locations.


While Akash Jagannadh plays the lead role, Prakash Raj, Puri Jagannadh, Anasuya Bharadwaj, Shine Tom Chacko, Ajay, and several other prominent actors will perform pivotal roles. Additionally, a few famous North Indian and Bollywood actors will also be a part of the film.


Mr. Johny Basha, Head of Production at Warnick Studios, states that filmmaker Kasi Parasuuram is creating a marvelous cinematic experience for the audience. It is being very well complemented by Kesava Kiran’s musical score, Trilok Siddu’s visuals, and mind-blowing action sequences choreographed by Dinesh Kasi.


The film is being made in Tamil, Telugu, Hindi, Kannada, and Malayalam.


Technical Crew


Executive Producer: Johny Basha (Warnick Productions)

Music Director: Kesava Kiran

Director of Photography: Trilok Siddu

Action: Dinesh Kasi

Production Controller: Manjunath Kn

Costume Designer: Dipti Desai

Akash Jagannadh Stylist: Sumaiya Tabassum

Digital Marketing Executive: Rashmikaa Santhosh (Warnick Productions)

Team Warnick Productions: Harihara Suthan, Rashmikaa Santhosh, Nagendra Reddy, Yanadi Reddy

Publicity Designer: Aves Designs - Avinash, Sivaprakasam (Warnick Productions)

Title Animation: Shree Varshan

ஆக்ஷனில் மாஸ் காட்டிய ஆகாஷ் ஜெகன்நாத்.. பட்டையை கிளப்பும்

 *ஆக்ஷனில் மாஸ் காட்டிய ஆகாஷ் ஜெகன்நாத்.. பட்டையை கிளப்பும் தல்வார் கிளிம்ப்ஸ் வீடியோ*




*எதிர்பார்ப்பை எகிற செய்த ஆகாஷ் ஜெகன்நாத்தின் 'தல்வார்' கிளிம்ப்ஸ் வீடியோ*



பிளாக்பஸ்டர் கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி நாடு முழுக்க பிரபல இயக்குநராக அறியப்படுபவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இவரது மகன் ஆகாஷ் ஜெகன்நாத் கடந்த சில ஆண்டுகளில் திறமை மிக்க நடிகராக உருவெடுத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கிய ஆகாஷ் ஜெகன்நாத் ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிறகு கதாநாயகனாக அறிமுகமானார்.


இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்ற நிலையில், ஆகாஷ் ஜெகன்நாத் நடித்துள்ள அடுத்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. 'தல்வார்' என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இ.எல்.வி. குழும நிறுவனங்கள் மற்றும் வார்னிக் ஸ்டூடியோஸ் நிறுவனர் டாக்டர் பாஸ்கர் இ.எல்.வி. இந்தப் படத்தை தயாரித்துள்ளார். காசி பரசுராம் இப்படத்தை இயக்கியுள்ளார்.


சமீபத்தில் இதன் ஆடியோ கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கும் 'தல்வார்' அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. 


தல்வார் திரைப்படத்தை பான்-இந்தியன் படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு பணிகள் வருகிற ஜூன் மாதம் நிறைவுபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்தப் படம் வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 


பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஆக்ஷன் காட்சிகளை படமாக்க வேண்டியிருப்பதால், படக்குழு இதனை எழுதுவதற்கும் படப்பிடிப்புக்கும் அதிக நேரம் எடுத்துக் கொண்டுள்ளது. ஆகாஷ் ஜெகன்நாத் இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், பிரகாஷ் ராஜ், பூரி ஜெகன்நாத், அனசுயா பரத்வாஜ், ஷின் டாம் சாக்கோ, அஜய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், வட இந்திய, பாலிவுட் திரையுலகை சேர்ந்த சில நடிகர்களும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர். 


இந்தப் படம் ரசிகர்களுக்கு தலைசிறந்த சினிமா அனுபவத்தை வழங்கும் நோக்கில் இயக்குனர் காசி பரசுராம் இயக்கியுள்ளார் என்று வார்னிக் ஸ்டூடியோஸ்-இன் தயாரிப்பு பிரிவு தலைவர் ஜானி பாஷா தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு கேசவ கிரண் இசையமைக்கிறார். சண்டை காட்சிகளை தினேஷ் காசி மேற்கொள்ள, ஒளிப்பதிவு பணிகளை திரிலோக் சித்து மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது.


*தொழில்நுட்ப குழு விவரம்:*


நிர்வாக தயாரிப்பு: ஜானி பாஷா (வார்னிக் புரொடக்ஷன்ஸ்)


இசையமைப்பாளர்: கேசவ கிரண்


ஒளிப்பதிவு: திரிலோக் சித்து


சண்டை பயிற்சி: தினேஷ் காசி


தயாரிப்பு நிர்வாகம்: மஞ்சுநாத் கே.என்.


ஆடை வடிவமைப்பு: தீப்தி தேசாய்


ஆகாஷ் ஜெகன்நாத் ஒப்பனையாளர்: சுமையா தபசும்


டிஜிட்டல் விளம்பர நிர்வாகி: ராஷ்மிகா சந்தோஷ் (வார்னிக் புரொடக்ஷன்ஸ்)


வார்னிக் புரொடக்ஷன்ஸ் குழு: ஹரிஹரா சுதன், ராஷ்மிகா சந்தோஷ், நாகேந்திர ரெட்டி, யனடி ரெட்டி


விளம்பர வடிவமைப்பு: ஏவ்ஸ் டிசைன்ஸ் - அவினாஷ், சிவபிரகாசம் (வார்னிக் புரொடக்ஷன்ஸ்)


டைட்டில் அனிமேஷன்: ஸ்ரீ வர்ஷன்