Featured post

Rebel Star Prabhas, Creative Director Hanu Raghavapudi, Prestigious Banner Mythri Movie Makers, T Series Presents’ Most-Awaited Pan

 Rebel Star Prabhas, Creative Director Hanu Raghavapudi, Prestigious Banner Mythri Movie Makers, T Series Presents’ Most-Awaited Pan India P...

Sunday, 13 December 2020

விஷால் மற்றும் ஆர்யா கூட்டணியில்

 விஷால் மற்றும் ஆர்யா கூட்டணியில் மிரட்டலாக உருவாகும் எனிமி - படம் பற்றி வெளியான முக்கிய தகவல்.!! 


விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் எனிமி படத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 


தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் விஷால் மற்றும் ஆர்யா. நடிகர்கள் என்பதைத் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 


இவர்கள் இருவரும் இணைந்து பாலா இயக்கத்தில் அவன் இவன் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 


அவன் இவன் படத்தை தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வினோத்குமாரின் மினி ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.


இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சில சண்டைக் காட்சியில் மட்டும் 4 நாட்களில் 4 கேமராக்களை கொண்டு முற்றிலும் மாறுபட்ட வகையில் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.


தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர். 


இதனையடுத்து படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் நடைபெற உள்ளது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பை முடித்த பிறகு நான்காம் கட்டமாக படக்குழு முழுவதும் மலேசியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


வித்தியாசமான கதைக் களத்தோடு உருவாகி வரும் இந்த படத்திற்காக விஷால் மற்றும் ஆர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவன் இவன் திரைப்படத்தைப் போல எனிமி திரைப்படமும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க ஆர் டி ராஜசேகர் அவர்கள் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். கலை இயக்குனராக ராமலிங்கம் ஒப்பந்தமாகி உள்ளார். ரவி வர்மா கோரியோகிராபி பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment