One Man Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம one man படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது, produce பண்ணிருக்கறது, cinematography , music , எடிட்டிங் , stunt master , னு படத்துல இருக்கற எல்லா வேலைகளையும் செஞ்சு, யாரோடைய help யும் இல்லாம தனி மனிதனை இந்த படத்தை உருவாக்கி இருக்காரு sangagiri rajkumar . இதோட இந்த list முடியல, hero , அப்புறம் side characters , மக்கள் னு எல்லாமே இவரு ஒருத்தர் தான் நடிச்சிருக்காரு. ஒரு வித்யாசமான அணுகுமுறை, வித்யாசமான கதைக்களம் தான் இது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
raja , booma , jacky , roobi னு மொத்தம் நாலு friends இருக்காங்க. இவங்க எல்லாருமே rajkumar தான். இவங்க நாலு பேரும் ஒரு science conference க்காக வெளிநாட்டுக்கு போறாங்க. போற வழியில இவங்க வண்டி puncture ஆயிடுது. அதுவும் அது ஒரு forest area . இந்த வண்டியை சரி செய்ய பல மணி நேரம் ஆகும் ன்றது னால அந்த காட்டை சுத்தி பாக்கலாம் னு போறாங்க. அப்போ தான் அங்க பழைய building அ பாக்குறாங்க. அதுக்குள்ள இவங்க நாலு பேரும் போறாங்க.
அது science experiment பண்ணுற ஒரு இடம். அங்க இவங்களுக்கு ஒரு video கிடைக்குது அதா இவங்க பாக்குறாங்க. அந்த video ல இருக்கற scientist , ஒரு red colour liquid இருக்கு, அதா injection ல ஏத்தி போட்டுக்கணும், அதுக்கு அப்புறம் இன்னொரு red colour gas இருக்கு, அதா release பண்ண அது காத்தோட வேகமா பரவி , உலகத்துல இருக்கறவங்க எல்லாருமே மறஞ்சுருவாங்க, ஆனா அந்த injection போட்டவங்க மட்டும் மறைய மாட்டாங்க னு சொல்லுறாரு. அது மட்டும் இல்ல மறைஞ்சவங்க 10 நாள் ல உலகத்துக்கு வந்துருவாங்க, ஆனா இந்த red injection போட்டவங்க 10வது நாள் அன்னிக்கு green colour gas யா release பண்ணி green colour liquid அ injection அ போடணும் னு சொல்லுறாரு. அப்படி பண்ணல ந அந்த red colour injection போட்டவங்க உருகி இறந்து போய்டுவாங்க னு சொல்லுறாரு.
அந்த 10 நாள் red colour injection போட்டவங்களோட இந்த உலகமே வசம் ஆயிடும், அவங்க என்ன வேணாலும் பண்ணலாம். இந்த video வை பாக்குற இவங்க நாலு பேரும் அந்த red liquid injection அ போட்டு அந்த gas யும் release பண்ணிடுறாங்க. அந்த scientist சொன்ன மாதிரியே, மக்கள் எல்லாரும் மறைஞ்சு போயிடுறாங்க. எல்லா இடத்துக்கு travel பண்ணுறாங்க, பல நாட்டோட சாப்பாடை சாப்பிடுறாங்க. ஆனா indha சமயத்துல ஒரு accident ஆகுது, அதுல ஒருத்தன இழந்துடறாங்க. இப்போ இவங்க மூணு பேர் தான் இருக்காங்க. raja க்கு பாசம் ன்ற உணர்வே கிடையாது. அதுனால மயான அமைதியா இருக்கற இந்த உலகம் இவனுக்கு ரொம்ப பிடிச்சி போயிடுது. அதுனால அந்த green gas அ release பண்ண வேண்டாம். இப்படியே இருப்போம் னு சொல்லுறன். ஆனா இதுல மத்த ரெண்டு பேருக்கு உடன் பாடு கிடையாது.
அதுனால இவங்க மூணு பேருக்கும் சண்டை வருது, கடைசில இந்த உலகம் பழைய மாதிரி ஆச்சா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
ஆரம்பத்துல ரொம்ப சாதாரணமா படம் போற மாதிரி இருக்கும், ஆனா போக போக கதை ஸ்வாரசியம போகுது னு தான் சொல்லணும். background music ஆ இருக்கட்டும், editing அ இருக்கட்டும், எல்லாமே அட்டகாசமா இருந்தது. இது எல்லாமே ஒருத்தரால எப்படி பண்ண முடிஞ்சுது னு தெரியல. dialogues எல்லாமே thought provoking அ இருந்தது. பணம் எப்பயும் கூட வராது, பந்த பாசம் தான் எப்பயும் நிலைச்சு நிக்கும், அதோட மத்தவங்க அழியட்டும், நம்ம மட்டும் நல்ல இருப்போம் னு நினைக்கறவ எப்பயும் நல்ல இருக்க மாட்டான் னு பல social message யும் சொல்லிட்டு போயிருக்காரு. தமிழ் ஈழம் ஏர் லைன்ஸ் ன்ற விஷயத்தை காட்டி, தன்னோட background அ வெளி படுத்தி இருக்காரு.
sangagiri rajkumar , நெறய character ல நடிச்சாலும், costumes அப்புறம் குரலை மத்தி பேசுறது னு ரொம்பவே effort போட்டு நடிச்சிருக்காரு. அது எல்லாமே நல்ல இருந்தது. அதுமட்டும் இல்ல car chasing , helicopteer scenes அப்புறம் climax ல இவங்க மூணு பேருக்கு நடுவுல வர fight scenes னு எல்லாமே அட்டகாசமா இருந்தது.
தமிழ் சினிமா ல எப்பவுமே experiment க்கு நல்ல வரவேற்பு உண்டு. அந்த விதத்துல oneman show பண்ணிருக்கற இந்த one man திரைப்படத்துக்கு எல்லா எடத்துல இருந்தும் பாராட்டு மழை குவிஞ்சிட்டு இருக்கு னு தான் சொல்லணும். ஒரு நல்ல முயற்சி, rajkumar அவர்களுக்கு பாராட்டுகள். இந்த படம் வெற்றிபெற எங்களூடைய வாழ்த்துகள் யும் கூட. கண்டிப்பா நீங்களும் இந்த படத்தை போய் பாருங்க.

No comments:
Post a Comment