Featured post

The Valley of Health’ Chronicles a Community’s Remarkable Healthcare Revolution in Sittilingi

 ‘The Valley of Health’ Chronicles a Community’s Remarkable Healthcare Revolution in Sittilingi Some films expand our understanding of the w...

Monday, 24 August 2026

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’

 *ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!*





இயக்குநர் முருகு, ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து முழுமையான ரொமாண்டிக் காமெடி குடும்ப பொழுதுபோக்குப் படத்தை இயக்குகிறார். தஞ்சாவூரில் 20 நாட்கள் நடைபெறும் முதல் கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.


தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சீன் ரோல்டன் இணையும் ‘நிஞ்ஜா’ திரைப்படம் புதிய பரிமாணத்தில் உருவாகிறது. இந்த கூட்டணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


முதலில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்ற பிரார்த்தனா கதாநாயகியாக நடிக்கிறார். முருகு எழுதி இயக்கும் இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனங்களின் சார்பில் எஸ். சாய் தேவானந்த் மற்றும் கே.எஸ். சினிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.


‘நிஞ்ஜா’ படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 24) தஞ்சாவூரில், ஸ்ரீபதி சினிமாஸில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறுகிறது. கேமராவுக்கு முன்னும் பின்னும் பல புதிய திறமையாளர்கள் இந்தத் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். 


தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தை தயாரித்துள்ள கே.எஸ். சினிஷ், தற்போது அர்ஜுன் தாஸ் மற்றும் சாண்டி நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ என்ற மற்றொரு படத்தையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார். மேலும், பா. இரஞ்சித், ஆர்யா கூட்டணியில் உருவாகும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படத்தில் ஜென்சன் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி மற்றும் கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவாளராகவும், கணேஷ் சிவா படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும், பிரியா ரவி ஆடை வடிவமைப்பாளராகவும், தினேஷ் காசி சண்டைக் காட்சிகளின் இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.


ஜி.வி. பிரகாஷ் குமார், சீன் ரோல்டன் மற்றும் அறிமுக இயக்குநர் முருகு ஆகியோரின் புதிய கூட்டணியில் உருவாகும் ‘நிஞ்ஜா’, தமிழ் சினிமாவின் வரவிருக்கும் படங்களின் பட்டியலில் சுவாரஸ்யமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனங்களின் சார்பில் எஸ். சாய் தேவானந்த் மற்றும் கே.எஸ். சினிஷ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது. படத்தைப் பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

No comments:

Post a Comment