Featured post

Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message

 *’Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message*   Tamil cine...

Showing posts with label actor vijay sethupathi. Show all posts
Showing posts with label actor vijay sethupathi. Show all posts

Friday, 18 October 2019

விவசாயிகளுக்காக ஒரு கட்டடம் கட்டி கொடுத்த விஜய் சேதுபதி


"உழைத்தால் உயரலாம் சரி! யார் உழைத்தால் யார் உயரலாம்?" பொருளாதார நிலைப் பற்றி இப்படியொரு கவிதை உண்டு. இந்த வரிகளில் உள்ள அரசியலைப் பற்றிப் கலை வடிவில் பேச வேண்டுமானால் அதற்கு தேர்ந்த ஒரு கலைக்கூட்டணி வேண்டும். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நாயகனாகவும் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடிக்க இயக்குநர் ஜனநாதன் லாபம் படத்தை அட்டகாசமான அரசியலும் கமரிசியலும் சேர்ந்த படைப்பாக உருவாக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள்  சங்க கட்டடம் ஒன்று  தேவைப்பட்டுள்ளது. நாயகன் விஜய்சேதுபதி அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையான கட்டடத்தையே கட்டச்சொல்லி விட்டாராம். அதோடு மட்டும் அல்லாமல் படப்பிடிப்பு முடிந்ததும் அந்தக்கட்டடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்கச் சொல்லிவிட்டாராம் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.  படத்தின் கதை மட்டும் அல்லாமல் படப்பிடிப்பும் அங்குள்ள மக்களுக்கு லாபமாக அமைந்துள்ளதில் பலரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்


மேலும் படம் பற்றி இயக்குநர் ஜனநாதன் கூறுகையில்,


"என் படத்தின் டைட்டில் லாபம் என்றதும் பலரும் ஆச்சர்யமாக கேட்கிறார்கள். இந்தப்படம் யாருக்கு லாபம் என்பதையும் எது லாபம் என்பதையும் பேசும். இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்தி தான். நம்மிடம் இருந்த விவசாய நிலங்களும் அதில் விளைந்த விளைச்சலும் தான் பிரிட்டிஷ் காரன் கண்களை உறுத்தியது. நமது விவசாய நிலங்களையும் அதன் மூலமாக வந்த வளங்களையும் கொள்ளையடிக்கத் தான் பிரிட்டிஷ்காரன் இங்கே 300 வருடம் டேரா போட்டான். விவசாயத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கொண்ட நம்நாடு ஏன் இப்போது நலிவைச் சந்தித்தது? தினமும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருவது எதனால்? என்பதை என்னுடைய ஸ்டைலில் இப்படத்தில் சொல்லி இருக்கிறேன். இன்று விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சனை சர்வதேச பிரச்சனை. அதை படம் விரிவாகப் பேசும். இப்படத்தில் நாயகன் விஜய்சேதுபதி. நாயகி ஸ்ருதிஹாசன். மேலும் தெலுங்கு சினிமாவில் பல படங்களை தயாரித்த தயாரிப்பாளரின் மகன் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். கலையரசன், பிரித்வி, டேனி என இன்றைய இளம் நடிகர்களும் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்" என்றார். டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தில் ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.  இறுதிக் கட்டப் படப்பிடிப்பு மிக வேகமாகவும், மிக பிரம்மாண்டமாகவும் நடைபெற்று வருகிறது. விஜய்சேதுபதி புரொடக்சனும், 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைஇணைந்து லாபம் படத்தை தயாரித்து வருகின்றன.

Monday, 5 August 2019

விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள சங்கத்தமிழன் படத்தின் டப்பிங் தொடங்கியது

விஜயா புரொடக்க்ஷன்ஸ்" தயாரிப்பில் ,"விஜய் சேதுபதி"  நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள   " சங்கத்தமிழன் " படத்தின் டப்பிங் தொடங்கியது ! 
 

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.


பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரித்துள்ள இந்த சங்கத்தமிழன் படத்தை  இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் . பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள  இப்படத்தில் இவருக்கு ஜோடியாக  நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் .இவர்களுடன்  இந்த படத்தில் நாசர் , சூரி  ,அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான்  போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர்   இசையமைத்துள்ளனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் காரைக்காலில் நடைபெற்று முடிவுபெற்றது. இன்று இப்படத்தின் டப்பிங் பணிகள்  சென்னையில் உள்ள AVM ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது .

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் வயகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்கும் "துக்ளக் தர்பார்"



தயாரிப்பாளர்  லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்  மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் மற்றுமொரு பிரம்மாண்டமான படம் துக்ளக் தர்பார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.  அதிதிராவ் ஹெய்தாரி  நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்டணி  நானும் ரவுடி தான் படத்தில் மக்களை மிகவும் கவர்ந்த கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியொரு மாஸான கூட்டணியை இணைத்து கதை திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்க இருப்பவர் புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன். 

மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். ஒருவர், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இவர் இப்படத்தின் வசனங்களை எழுதி இருக்கிறார். மற்றொருவர்  96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த கேமராக்காதலன் பிரேம்குமார். இவர் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது கூடுதல் எனர்ஜி. இந்தக் கவிநய கூட்டணியில் இளைஞர்களின் ஆதர்ச இசைஞர்
கோவிந்த் வசந்தா இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறார். ஆர்ட் டைரக்டர் குமார் கங்கப்பன். எடிட்டராக கோவிந்த் ராஜ் பணியாற்ற சண்டைப்பயிற்சியை திலீப் சுப்புராயன் கவனிக்கிறார். 


திரைத்துறையில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக துவங்கியது. பூஜையில், 
 விஜய்சேதுபதி, அதிதிராவ் ஹெய்தாரி, பார்த்திபன், காயத்ரி, சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், கருணாகரன், ராஜ்குமார், தயாரிப்பாளர்கள் 
 வயகாம் அனுப் விஜய்சேதுபதி புரொடக்சன் ராஜேஷ், சினிமாவாலா  சதிஷ்
 மற்றும் இயக்குநர்கள் பிரேம்குமார், பாலாஜி தரணிதரன், தியாகராஜ குமாரராஜா, அஜய் ஞானமுத்து, பிரபாகரன், மருதுபாண்டி, ஆண்ட்ரு ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆந்திரமாநிலம் சித்தூர் டிஸ்டிக் கலெக்டர் என்.பாரத்குப்தா கலந்து கொண்டார்.
 இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் சீயான் விக்ரம் நடிப்பில் ஒரு புதிய படத்தையும் மேலும் பல பெரிய படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Friday, 26 July 2019

Makkal Selvan Vijay Sethupathi to play Muthiah Muralidharan's role


Makkal Selvan Vijay Sethupathi to play Muthiah Muralidharan's role in cricketer's official biopic !!


The life and times of one of the world's finest and greatest cricketers, Muthiah Muralidharan, is now being made into a film!

The film is being produced by  Dar Motion Pictures.

A representative from the production house says, "We are privileged to be bringing on screen the life and times of one of the world's most accomplished sportsmen, Muttiah Muralitharan, to audiences across the world. One of the most popular actors in South India, Makkal Selvan Vijay Sethupathi will be essaying Murali in the film. The film will be written & directed by M.S.Sripathy and will be made in Tamil and released in several languages across the world. We are collaborating with a leading South Indian studio on this film and will be making an official announcement in due course."

Talking about the project, cricketer Muthiah Muralidharan says, " I am glad to be collaborating with Dar Motion Pictures on my official biopic. We are looking at a late 2020 release date. I an honoured that an accomplished actor such as Makkal Selvan Vijay Sethupathi will be playing me in the film. I have been actively collaborating with the creative team for the past several months and I will continue to support this project through its duration."

Speaking about the project, Makkal Selvan Vijay Sethupathi says, " I am happy to be associated with the Muttiah Muralitharan biopic. He is an iconic sportsman of Tamil origin & someone who's made his mark across the world. Portraying the role of Murali is going to be a challenge for me & I'm looking forward to it. I'm delighted that Murali himself will be closely involved with the project & guiding me on the cricketing aspects. I am thankful to both Murali & the producers for the faith bestowed on me."

Thursday, 13 June 2019

முதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள “ சிந்துபாத் “

கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ சிந்துபாத் “

இந்த படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மற்றும் விவேக்பிரசன்னா, லிங்கா, விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, ஜார்ஜ், அருள்தாஸ், கணேஷ், சுபத்ரா     ஆகியயோர் நடித்துள்ளனர்.

இசை  - யுவன்சங்கர் ராஜா

ஒளிப்பதிவு  -  விஜய் கார்த்திக் கண்ணன்

எடிட்டிங்  -  ரூபன்

கலை – A.R,மோகன்

பாடல்கள் – விவேக், விக்னேஷ்சிவன், பா,விஜய், கார்த்திக் நேத்தா.

ஸ்டன்ட்  – பிரதித் சீலம், ஹரி தினேஷ்

நடனம்  -  ஷெரிப்

மக்கள் தொடர்பு  - மௌனம்ரவி

தயாரிப்பு - கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் சான்சுதர்ஷன்.

கிளாப்போர்டு புரொடக்ஷன் சத்யமூர்த்தி படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - S U.அருண் குமார்

நானும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து பணியாற்றும் மூன்றாவது இது. இதற்கு முன் இணைந்து பணியாற்றிய பண்ணையாரும் பத்மினியும்,  சேதுபதியும் மக்களால் பாராட்டப்பட்டது குறிப்படத்தக்கது. முதல் முறையாக ,  இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தன் தந்தையுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் நடிப்பு பெரும் அளவிற்கு ரசிகர்களை கவரும்.

சூரியாவும், விஜய் சேதுபதியும் இப்படத்தில் தந்தை மகனாக நடிக்க வில்லை என்றாலும்  அவர்களுக்கு இடையே உள்ள உறவினில் ஒரு தனித்துவமான உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படும்.

விஜய் சேதுபதி முழு காது கேட்கும் திறன் இல்லாத திருடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அஞ்சலி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இன்னும் சொல்ல போனால், அவரை சுற்றி தான் கதை நகர்கிறது.

லிங்கா இப்படத்தின் வில்லனாகநடித்துள்ளார். இப்படத்திற்காக அவர் பெரும் முயற்சி எடுத்து தன் உடலை கட்டுக்கோப்பாக மாற்றி ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ளார்.

படப்பிடிப்பு  பெரும் பகுதி தாய்லாந்து, மலேஷியா, கம்போடியா மற்றும் தென்காசியில் நடைபெற்றுள்ளது. படத்தில் நிறைய சுவாரஸ்யமான சண்டை காட்சிகளை ஹாலிவுட் சண்டை கலைஞர் பிரதித் சீலம் (எ) நுங் படமாக்கியுள்ளார்.

படம் வருகிற 21 ம்  தேதி  உலகமுழுவதும் வெளியாக உள்ளது என்றார் இயகுனர் S U.அருண் குமார்.















Wednesday, 12 June 2019

“ சிந்துபாத் “ படத்தின் பாடல்களை விநியோகஸ்தர்கள் வெளியிடபடக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.

                         
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிஅஞ்சலிசூர்யா விஜய் சேதுபதிவிவேக்பிரசன்னாலிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில்கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில் , S.U.அருண்குமார் இயக்கத்தில்யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் தயாரான சிந்துபாத்’ படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.


இவ்விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதயாரிப்பாளர் கே.ராஜராஜன்தயாரிப்பாளர் ஷான் சுதர்சன்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் கிளாப் போர்டு சத்தியமூர்த்திவிநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் செல்வின் ராஜ்விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் ராஜமன்னார்விநியோகஸ்தர்கள் சங்க பொருளாளர் மணிகண்டன்பைனான்சியர் மோகன் குமார்கலை இயக்குனர் மூர்த்திபடத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,  படத்தின் இயக்குனர் அருண்குமார்மியூசிக் நிறுவன பிரதிநிதி நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் ராஜராஜன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
அவர் பேசுகையில்,“

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த சிந்துபாத்தின் பயணம் தொடங்கியது. இதனை இயக்குனர் அருண்குமார் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து எங்கள் குழு மீது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முழு நம்பிக்கை வைத்தார். அதனை அனைவரின் ஒத்துழைப்புடன் காப்பாற்றி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்கி இருக்கிறோம்.விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே மிகவும் கடினமாக உழைத்த படம் இது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவர் கடினமாக உழைத்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதனையடுத்து படத்திற்கு மற்றொரு தூணாக இருப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இது மிகப்பெரிய படம். அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குனர் அருண்குமார் பேசுகையில்,“
முதலில் இந்த கதையை பல முன்னணி நாயகர்களிடம் சொன்னேன். அவர்கள் யாரும் நடிப்பதற்கு முன் வரவில்லை. இந்நிலையில் மீண்டும் என்னை விஜய் சேதுபதி அழைத்து நாமே இணைந்து பணியாற்றுவோம் எனறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் ஒரே ஒரு முறை மட்டுமே கதையை கேட்டார். அதன் பிறகு குறுக்கிடவே இல்லை. கதைக்கு என்ன தேவையோ அதை வழங்கிக் கொண்டிருந்தார். நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் வேகமாக இயங்குவதற்கு முழுமையான காரணம் அவர்தான். நான் யுவன்சங்கர்ராஜாவின் மிகப்பெரிய ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்ற முதலில் தயங்கினேன். அவர் நமக்கு சௌகரியமாக இருப்பாராஎன்றும் எண்ணினேன். ஆனால் அவர் நான் நினைத்ததை விட மிக எளிமையாகப் பழகினார். திரைக்கதைக்கு என்ன தேவையோ அதை அளித்தார். அதன்பிறகு நடிகை அஞ்சலி. கதை முழுவதும் அவரை சுற்றி தான் நடக்கிறது. அவர்களும் அதை உணர்ந்து நன்றாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். பா விஜய்கார்த்திக் நேதாவிவேக் ஆகியோர் பாடல்களை எழுதி இருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா விஜய் சேதுபதி படம் முழுவதும் வரக்கூடிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த கதையை யோசிக்கும்போதே இந்த கேரக்டரில் சூர்யா தான் நடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். அதை விஜய் சேதுபதியிடமே சொல்லியிருந்தேன். அவரும் நன்றாக நடித்திருக்கிறார் என்றார்.


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசுகையில்,“
பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அருண் உடனான அறிமுகம் நட்பாக மாறியது. அதன் பிறகு அவர் எனக்கு சௌகரியமான நண்பராக மாறினார். பிறகு அவரிடம்என்னைத் தவிர்த்து வேறு நடிகர்களை வைத்து இயக்குவதற்கு முயற்சி செய் என்று அறிவுரை கூறினேன். ஆனால் திரையுலகில் யாரும் அவரை நம்பவில்லை. பிறகு நானே அழைத்து சேதுபதிபட வாய்ப்பை கொடுத்தேன். அதன் பிறகு நானே சில முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்லுமாறு வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தேன். ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக அந்த முயற்சியும் நடைபெறவில்லை. பிறகு மீண்டும் அவரை அழைத்து இந்த பட வாய்ப்பினை அளித்தேன். தற்போதும் இந்த படம் ஹிட் ஆன பிறகு வெளியில் சென்று வேறு இயக்குனர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அருணின் தனி சிறப்பு என்னவென்றால் நாயகனை மிக மிக நல்லவனாகவும்நாயகியை கண்ணியமானவளாகவும்அழகுணர்ச்சி மிக்கவளாகவும்இயல்பானவளாகவும் வடிவமைப்பார். அதேபோல் வாழ்க்கையில் இடம் பெறக்கூடிய சின்ன சின்ன அழகான சம்பவங்களை ரசித்துஅதனை நேர்த்தியாக காட்சிப்படுத்த கூடிய திறமைசாலியும் கூட.  அழகை நன்றாக ரசிக்கக் கூடியவர். சினிமாவில் தொடங்கிய அவருடைய நட்புபிறகு என்னுடைய குடும்ப நண்பரானார். அதனால் தான் என்னுடைய மகன் சூர்யாவை இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நான் நடிக்கிறோனோ இல்லையோ சூர்யா நடிப்பது உறுதி என்று இந்த படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அருண் என்னிடம் கூறியிருந்தார்.
சிந்துபாத் நமக்கு எல்லோருக்கும் நன்கு தெரிந்த அறிமுகமான கணவன் மனைவி பற்றிய எமோஷனல் படம். இதில் ஏராளமான சுவராசியமான காரணிகள் இருக்கிறது. அதனை விவரித்தால் அதுவே நாளை தலைப்பு செய்தியாகிவிடும். அதனால் அதை கடந்து விடுகிறேன். ஒருவனுடைய மனைவியைஒரு கும்பல் கடத்தி சென்றுகடல் கடந்து ஒரிடத்தில் சிறை வைத்திருக்கிறது. அந்த மனைவியை கணவனானவன் கஷ்டப்பட்டுபோராடி எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.
இந்த படத்தில் அஞ்சலிவிவேக் பிரசன்னாலிங்கா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கிறது. இவர்கள் கதையின் தூண்களும் கூட. படத்தில் நாயகனுக்கு காது சற்று மந்தம். உரத்துப் பேசினால் தான் கேட்கும். இது ஒரு சுவாரசியமான அம்சம். நடிகை அஞ்சலி இயல்பாகவே சத்தமாக பேசக்கூடிய கேரக்டர் . அவர்கள் இந்த கேரக்டரில்  பொருத்தமாக நடித்திருந்தார். அவரைத் தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்தில் சிந்திக்க முடியவில்லை.

இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் லிங்கா. நல்ல பையன். சற்று படபடப்பாகவும் பதற்றமாக இருப்பார். ஆனால் நல்ல நடிகன். தன்னுடைய வேலையை மிகச் சரியாக நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடியவர். மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதை எனக்கு அனுப்பிஇவர்கள் என்ன செய்யலாம்என்று கேட்பார். அவருக்கு நான் கோபப்படாதே நாம் வருத்தம் மட்டும் தான் பட முடியும். அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள்தான் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நாம் வருத்தம் மட்டுமே பட முடியும். மக்களுடைய வாழ்க்கை அழகாக இருக்க வேண்டும் என்று அவர்களின் அணுக்கமாக இருந்து நினைக்கக் கூடிய நல்ல உள்ளம் படைத்தவன். அவர் எதிர்காலத்தில் என்னைவிட சிறந்த நடிகராக வளரக் கூடும் என்று நம்புகிறேன்.
விவேக் பிரசன்னா  ரொம்ப சின்சியரான நடிகர். தன்னை சுற்றி இருப்பவர்களை எளிதாக கிரகிக்கக்கூடியவர். இந்த படத்தில் 23வயதுடைய பெண்ணுக்கு தந்தையாக அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார் .அவரால் மட்டுமே இதுபோல் வித்தியாசமாக நடிக்க முடியும். மேயாத மான் படத்தில் 25 வயது நாயகனுக்கு நண்பனாகவும் நடிக்க முடிகிறது.
படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் கிளைமாக்ஸ் போலிருக்கும். ஏனென்றால் தொடர்ந்து சேசிங் இருக்கும். யுவனைப் பற்றி நான் சொல்லி எதுவும் ஆகப்போவதில்லை. நான் மிகவும் ரசிக்கும் ஆளுமை யுவன் சங்கர் ராஜா. அவருடைய இசை தன்மையாக இருக்கும். மனதிற்கு நெருக்கமாக இருக்கும். எந்த சூழலிலும் இடையூறு ஏற்படுத்தாதநம்பகத்தன்மை மிக்க மிக்கதாக இருக்கும். அவருடைய இசையை கேட்கும்போதுநம்முடைய இசை கேட்பது போல் இருக்கும். ராஜா சார் இசை மீது இருக்கும் ஈர்ப்பு போல,இவருடைய இசை மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது என்றார்.


இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில்,“
இயக்குனர் அருண் உடன் பணியாற்றும் போது ஒவ்வொரு பாடல்களையும் ஒரு எமோஷனை கனெக்ட் செய்திருப்பார். அது ரசிகனாக பார்க்கும்போது நன்றாக இருக்கும். இந்த படத்தின் பின்னணி இசையை நான் மிகவும் அனுபவித்து  பணியாற்றினேன். எல்லா பாடல்களும் ரசித்து உருவாக்கியவை. என்னுடைய டுவிட்டரில் கூட அன்மையில் நான் இசையமைத்த படத்தில் சிந்துபாத் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை என்று டூவிட் செய்திருந்தேன். சில ஆல்பங்களில் பணியாற்றும் போது நம்மையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு இருக்கும்.

படத்தின் இரண்டாம் பகுதியில் விஜய் சேதுபதி ஓடிக் கொண்டே இருப்பார். பாங்காக்கில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கி கொண்டிருக்கும்போது படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று இருந்தேன். அப்பொழுது சண்டைக் காட்சிக்காக விஜய் சேதுபதி தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதை நேரில் கண்டு அசந்து போனேன். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள். கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள் வரும் அந்த காட்சியை எடுப்பதற்கு மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அதற்காக பின்னணி இசைக்கும் போது நான் வியந்துரசித்துஅனுபவித்து பணியாற்றினேன். சேதுபதியுடன் மகன் சூர்யா விஜய் சேதுபதி. அவர்தான் இந்தப் படத்தின் ராக்ஸ்டார் .

எல்லாவற்றுக்கும் இறைவன் ஒரு நேரத்தை ஒதுக்கி இருப்பார். அதேபோல் சிந்துபாத் படத்திற்கு இறைவன் இந்த தேதியை ஒதுக்கியிருக்கிறார். நாம் எவ்வளவு விரைவாக பணியாற்றினாலும் அல்லது எவ்வளவு மெதுவாக பணியாற்றினாலும் ஒரு பணி எப்போதும் முடிவுக்கு வர வேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அப்போதுதான் அந்தப் பணி  முடிவடையும். இந்த வகையில் உங்களை இந்த மாதம் சந்திக்கவிருக்கும் சிந்துபாத் படத்தை  திரையரங்கில் பார்த்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
இதனைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் படத்தின் ஆடியோவை வெளியிடபடக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.






Tuesday, 21 May 2019

விஜய் சேதுபதி வசனம் ப்ளஸ் தயாரிப்பில் ​இயக்குநர் பிஜூ இயக்கத்தில் ​“சென்னை பழனி மார்ஸ்”



விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து தயாரிக்கும் “சென்னை பழனி மார்ஸ்”

முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்துக்கொண்டு ஒரு ட்ராவல் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் பிஜூ.

தமிழில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய இவர், தற்போது ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்கியுள்ள படம் “சென்னை பழனி மார்ஸ்”.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை  நோக்கிய கனவும்  நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப்பார்த்து விட்டிருக்கலாம்.  சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம். 

 அப்படிப்பட்ட ஒரு அற்புதக் கனவை ப்ளாக் காமெடி ஜானரில் ரசிக்க ரசிக்கச் சொல்லியிருக்கும் படம் “சென்னை பழனி மார்ஸ்”. விஜய் சேதுபதியை வைத்து ஆரஞ்சு மிட்டாய் படத்தைக் கொடுத்த இயக்குநர் பிஜூ திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு படத்தொகுப்பு இயக்கம் ஆகியவற்றை கவனிக்க,  
தனக்கேயுரிய ப்ளாக் காமெடி உணர்வை வசன முலாமாகப் பூசி மெருகேற்றியுள்ளார் விஜய் சேதுபதி. 

“சென்னை பழனி மார்ஸ்” ட்ராவல் படமாக இருந்தாலும், அதில் இணைந்துகொள்ளும் பல்வேறு கேரக்டர்கள் படத்தின் வேகத்தை அதிகப்படுத்தும்.

பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
நிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை எழுதியுள்ளார் விக்னேஷ் ஜெயபால். 

மிக சுவாரஸ்யமான ஒரு பயணக் கதையை திரையில் ஜாலியாகக் கண்டுகளிக்க வருகிறது “சென்னை பழனி மார்ஸ்”. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இசை : நிரஞ்சன் பாபு (அறிமுகம்)
பாடல்கள் : விக்னேஷ் ஜெயபால் 
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் ; பிஜு
வசனம் : விஜய் சேதுபதி
தயாரிப்பு: விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் & ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ்

Saturday, 4 May 2019

உயிர் காக்கும் முதலுதவி!. கைகோர்த்த சத்யராஜ் – விஜய் சேதுபதி!*



வேகமான இன்றைய வாழ்க்கை நெருக்கடியில் அனைத்து துறையை சேர்ந்தவர்களும் அனைத்து நிலையில் இருப்பவர்களும் பலவிதமான மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். இப்படியான மன அழுத்தங்களினால் சில நேரத்தில் திடீர் இருதய நிறுத்தம்(cardiac arrest) ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் எதிர்பாராத மரணங்களினால் பலர் தங்கள் உறவுகளை இழப்பதோடு பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.  ஆனால், இப்படி திடீர் இருதய நிறுத்தம் ஏற்பட்டு சாவின் விளிம்பில் இருப்பவர்களை சிபிஆர் பற்றி தெரிந்திருந்தால் நம்மால் மீண்டும் அவர்களை உயிர் வாழ வைக்க முடியும். சிபிஆர் என்றால் ஆங்கிலத்தில் *CPR - Cardiopulmonary Resuscitation* என்று சொல்வார்கள்.

CPR / சிபிஆர் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தோடு இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக சஞ்சீவன் கமிட்டியினர்,உயிர் காக்கும் முதலுதவி- LIFE SAVING CPR
என்ற விழிப்புணர்வு படத்தை தயாரித்து தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியிட இருக்கிறார்கள்.
 இந்த விழிப்புணர்வு படத்தின் நோக்கத்தைப் பாராட்டிய நடிகர்கள் சத்யராஜ், மற்றும் விஜய்சேதுபதி இருவரும் தாங்களே சி.பி.ஆர் பற்றி இந்த விளம்பரப் படத்தில் தோன்றி விளக்கியுள்ளார்கள். இயக்குநர் பாலாவின் உதவி இயக்குநர் கவின் ஆன்டனி இந்த விழிப்புணர்வு படத்தை இயக்கியுள்ளார். 


இந்த விழிப்புணர்வு படத்தின் நோக்கத்தைப் பாராட்டிய நடிகர்கள் சத்யராஜ், மற்றும் விஜய்சேதுபதி இருவரும் தாங்களே சி.பி.ஆர் பற்றி இந்த விளம்பரப் படத்தில் தோன்றி விளக்கியுள்ளார்கள். இயக்குநர் பாலாவின் உதவி இயக்குநர் கவின் ஆன்டனி இந்த விழிப்புணர்வு படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே தனது "அதிகாலை" குறும்படத்தின் மூலமாக ஒரு விபத்து ஏன் நடக்கிறது, ஒரு விபத்து நடக்க என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை விவரமாக காட்சிப்படுத்திய கவின் ஆன்டனி, தமிழின் முன்னணி வார இதழின் சார்பாக தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 இளைஞர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இந்த விழிப்புணர்வு படத்திற்காக பெருந்தன்மையோடு உதவி செய்த நடிகர்கள் சத்யராஜ், விஜய் சேதுபதி எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று சஞ்சீவன் கமிட்டியின் சேர்மன் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

உயிர் காக்கும் முதுலுதவியான இந்த சி.பி.ஆர் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்துகொள்வோம். அதோடு நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த விழிப்புணர்வு படத்தைப் பகிர்ந்து பார்க்கச் சொல்வோம். திடீர் இருதய நிறுத்தம் ஏற்பட்டு சாவின் கடைசி நிமிடத்தில் இருப்பவர்களை காப்பாற்றுவோம்.

விழிப்புணர்வு படத்தின் வீடியோ இணைப்பு : https://youtu.be/DnZRCeM_gpk
IMA Video on CPR (TAMIL) Awareness Film Link: https://youtu.be/DnZRCeM_gpk

Tuesday, 26 March 2019

Super Deluxe - Ding Dong Promo Video Released out Now

SuperDeluxe - #DingDong Promo 


#March29thRelease @VijaySethuOffl @Samanthaprabhu2  #FahadhFaasil @thisisysr @U1Records @gopiprasannaa @sash041075 @itisthatis @ynotxworld @alchemyvisionw1 @Emadhi161 @meramyakrishnan @SGayathrie @onlynikil

Tuesday, 19 March 2019

ஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய விருதுகளால் மட்டும் கொண்டாடப் படுவது அல்ல






ஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய விருதுகளால் மட்டும் கொண்டாடப் படுவது அல்ல. உணர்வுப் பூர்வமான விருதுகளாலும் கொண்டாடப்படுவது தான். அப்படியான ஒரு உணர்வுப் பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது விஜய்சேதுபதி, திரிஷா நடித்து ப்ரேம் இயக்கிய 96 திரைப்படம். 

தமிழில் பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து 96 படத்தை தெலுங்கிலும் இயக்கி வருகிறார் ப்ரேம். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாக வழங்கப்படும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான  விருதை இயக்குநர் ப்ரேம் பெற இருக்கிறார். தெலுங்கு சினிமா உலகம் மட்டும் இல்லாமல் மொத்த இந்தியத் திரையுலகுமே இந்த விருதை மிகவும் உணர்வுப்பூர்வமான விசயமாக கருதுகின்றனர். அதற்கான காரணமும் இருக்கிறது.

அது 1992-ம் ஆண்டு! தனது முதல்படமான 'பிரமே புஸ்தகம்' என்ற படத்தை இயக்கி வந்த ஸ்ரீனிவாசன் துரதிருஷ்டவசமாக காலமானார். நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த அப்படத்தின் மீதியை மாருதிராவ் இயக்கி முடித்தார். ஒரு படத்தை முழுமையாக இயக்கும் முன் மரணம் தழுவிக்கொண்ட அந்த படைப்பாளியின் கனவுக்கு மரியாதை செய்யும் விதமாக "கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசியவிருது" என்னும் விழா 21 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல்படத்தை வெற்றிகரமாக இயக்கி அதை மக்கள் மனங்களில் கொண்டாட வைத்த முதல்பட இயக்குநர்களுக்குத் தான் இந்த உணர்ச்சிகரமான விருதை வழங்குவார்கள். அந்த வகையில் இன்னும் 96 வருடங்கள் கடந்தாலும் நம் மனதை இதமாக வருடும் 96 படத்தைத் தந்த இயக்குநர் ப்ரேமிற்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை வழங்க இருக்கிறார்கள். இந்த விருது குறித்து இயக்குநர் ப்ரேம் பேசும்போது, 

"எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எப்படியான விருதுகளாக இருந்தாலும் விருதுகள் நம்மை ஊக்கப்படுத்துபவை தான். ஆனால் இப்படியான விருதை பெற இருக்கிறோம் என்று கேள்விப்பட்டதும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். எனக்கு வாழ்த்து கூறிய பலரும் 'கங்க்ராட்ஸ்' என்பதோடு கடந்துவிடவில்லை. ஒவ்வொருவரும் இதைப்பற்றி மிகவும் உணர்வுப் பூர்வமாக பேசினார்கள். விஜய்சேதுபதி திரிஷா உள்ளிட்ட பலரும் தங்களின் மகிழ்ச்சியை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்கள். தற்போது படத்தைத் தெலுங்கில் இயக்க இருக்கும் நிலையில் இப்படியான விருது கிடைத்திருப்பது பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது" என்றார்

Tuesday, 5 March 2019

விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

விஜயா புரொடக்க்ஷன்ஸ்" தயாரிப்பில் ,"விஜய் சேதுபதி"  நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.





பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார்.

பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும். ஸ்கெட்ச் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சந்தர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியைகதாநாயகனாக  வைத்து புதிய படத்தை  இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி இயக்குனர் விஜய் சந்தருடன் முதன் முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக  நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேருகிறார்கள். சுந்தரபாண்டியன் , ரம்மி ஆகிய படங்களுக்கு பிறகு  நடிகர் / காமெடியன் சூரி அவர்கள் 3 வது முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார். இவர்களுடன்  இந்த படத்தில் நாசர் , அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான்  போன்ற நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர்  இசையமைக்கிறார்கள்.

விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் வடகறி படத்தில் அறிமுகமாகினர்.அந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து புகழ் ,டோரா , குலேபகாவலி ஆகிய படங்களில் இசையமைத்தனர்.இவர்களின் இசையில் வெளிவந்த ஒரசாத பாடல் இளைஞர்களிடையே வேற லெவல் பாராட்டுக்களை பெற்றது.

ஒளிப்பதிவு R . வேல்ராஜ் ,  கலை இயக்கம் M .பிரபாகரன், சண்டை பயிற்சி அனல் அரசு , மற்றும் படத்தொகுப்பினை பிரவீன் K .Lமேற்கொள்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன்  ஹைதராபாத்தில் தொடங்கியது.

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் - விஜய் சந்தர்

தயாரிப்பு - பி.பாரதி ரெட்டி

ஒளிப்பதிவு   - R.வேல்ராஜ்

படத்தொகுப்பு     - பிரவீன் K.L 

சண்டை  பயிற்சி  - அனல்  அரசு

கலை இயக்குனர் - பிரபாகர்

நிர்வாக தயாரிப்பு - ரவிச்சந்திரன்  , குமரன் .

மக்கள் தொடர்பு    -ரியாஸ் கே அஹமது. 

Saturday, 2 March 2019

விஜயா புரொடக்க்ஷன்ஸ்" தயாரிப்பில் ,"விஜய் சேதுபதி" நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு 4 ஆம் தேதி துவங்குகிறது

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார்.

பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும். ஸ்கெட்ச் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சந்தர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை கதாநாயகனாக  வைத்து புதிய படத்தை  இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி இயக்குனர் விஜய் சந்தருடன் முதன் முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக  நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேருகிறார்கள். சுந்தரபாண்டியன் , ரம்மி ஆகிய படங்களுக்கு பிறகு  நடிகர் / காமெடியன் சூரி அவர்கள் 3 வது முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார். இவர்களுடன்  இந்த படத்தில் நாசர் , அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான்  போன்ற நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர்  இசையமைக்கிறார்கள்.

விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் வடகறி படத்தில் அறிமுகமாகினர்.அந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து புகழ் ,டோரா , குலேபகாவலி ஆகிய படங்களில் இசையமைத்தனர்.இவர்களின் இசையில் வெளிவந்த ஒரசாத பாடல் இளைஞர்களிடையே வேற லெவல் பாராட்டுக்களை பெற்றது.

ஒளிப்பதிவு R . வேல்ராஜ் ,  கலை இயக்கம் M .பிரபாகரன், சண்டை பயிற்சி அனல் அரசு , மற்றும் படத்தொகுப்பினை பிரவீன் K .L மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது.


தொழில்நுட்பக்குழு :

இயக்கம் - விஜய் சந்தர் 

தயாரிப்பு - பி.பாரதி ரெட்டி

ஒளிப்பதிவு   - R.வேல்ராஜ்

படத்தொகுப்பு     - பிரவீன் K.L  

சண்டை  பயிற்சி  - அனல்  அரசு

கலை இயக்குனர் - பிரபாகர்

நிர்வாக தயாரிப்பு - ரவிச்சந்திரன்  , குமரன் . 

மக்கள் தொடர்பு    -ரியாஸ் கே அஹமது.