Featured post

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK27’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 *சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK27’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!* தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக வித்தியாசமா...

Thursday, 29 November 2018

சூப்பர் பொண்ணு சுமாரான பையன்

சூப்பர் பொண்ணு சுமாரான பையன்' 
பட பூஜை செய்தி

சூப்பர் பொண்ணு சுமாரான பையன்

நேற்று  காலை சூப்பர் பொண்ணு சுமாரான பையன் படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் இனிதே நடைபெற்றது இதில்   மாரிமுத்து,இமான் அண்ணாச்சி,டேனி ,சுவாமிநாதன், ஒளிப்பதிவாளர் ஜீவன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா,நடன இயக்குனர்கள் சாண்டி,ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர் 

இப்படத்தை பற்றி இயக்குனர் & நாயகன் விஜய் கார்த்திகேயன் கூறுகையில்.. 

நான் சிறிய வயது முதல் சினிமாவில் பயணிக்கிறேன் வியாபாரி படத்தில் வடிவேலு மகனாகவும்,நான் கடவுள் படத்தில் ஆரியாவின் சின்ன வயது கதாபாத்திரத்திலும், 
16 படத்தில் 2வது நாயகனாகவும், மீன்குழம்பும் மண்பானையும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன். 












 
மேலும்  பாக்கியராஜ் ,அப்புகுட்டி ஆகியோருடன் இணைந்து குஸ்கா படத்தில் கதாநாயகனாகவும்,  அராத்து எனும் படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து 2nd ஹீரோ வாகவும், 

 தாத்தா காரை தொடாதே எனும் படத்தை இயக்கியும் உள்ளேன் இதில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் எம்ஜிஆர் பேரன் ராமசந்திரனும் கதாநாயகர்கள் 

சூப்பர் பொண்ணு சுமாரான பையன் இது எனது இயக்கத்தில் இரண்டாவது படம்.

 இப்படத்தை  ஒரு கமர்ஷியல் கதையாக  உருவாக்கி உள்ளேன் இது தந்தைக்கும் மகனுக்குமான சென்டிமென்டை மையமாக கொண்ட கதை,என் தந்தையாக மாரிமுத்து அவர்கள் நடிக்கிறார் முக்கிய கதாபாத்திரத்தில் செந்தில், ஷகிலா ஆகியோர் நடிக்கிறார்கள் 

இசை ஸ்ரீகாந்த் தேவா,ஒளிப்பதிவு v.விஜய்
 தயாரிப்பு B.மோகனா & ஜீவன்

 ஜனவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பை மலேசியாவில் தொடங்கி  தேனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்  படப்பிடிப்பு நடத்த உள்ளோம்.

No comments:

Post a Comment