Featured post

ParAsakthi Movie Review

ParAsakthi Tamil Movie Review  *ParAsakthi Movie Rating: 4.5//5* ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parasakthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இ...

Monday, 1 February 2021

தயாராகும் 'என் ராசாவின் மனசிலே

 *தயாராகும் 'என் ராசாவின் மனசிலே' இரண்டாம் பாகம்.. படத்தை இயக்கும் நடிகர் ராஜ்கிரணின் மகன்..*


*'என் ராசாவின் மனசிலே' இரண்டாம் பாகத்தை இயக்கும் நடிகர் ராஜ்கிரண் மகன்..*

1991-ஆம் ஆண்டு ராஜ்கிரண் தயாரிப்பில் கஸ்துரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் - மீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்  'என் ராசாவின் மனசிலே'.  படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை ராஜ்கிரண் அறிமுகப்படுத்தினார்.

நடிகர் ராஜ்கிரணின் சினிமா கரியரிலும் நல்ல சினிமா ரசிகர்களின் ரசனையிலும் நீங்கா இடம் பிடித்த படம் இது. 80-ஸ் கிட்ஸ் மட்டும் அல்ல இப்போதுள்ள 2K கிட்ஸுக்கும் பிடிக்கும் அளவிற்கு  அப்படம் இன்றும் நிறம் மாறாமல் இருக்கிறது. 

தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரனின் மகன் 'திப்பு சுல்தான் நைனார் முஹம்மது' இயக்க இருக்கிறார். 


இது குறித்து நடிகர் ராஜ்கிரன் வெளியிட்டுள்ள செய்தி, 


இறை அருளால்,

இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது

அவர்களின் இருபதாவது பிறந்த நாள்...


"என் ராசாவின் மனசிலே" 

இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு,

திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்... அவரே படத்தை இயக்கவும் உள்ளார்.


அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்...

No comments:

Post a Comment