Featured post

I think together we have created some magical moments”: Kriti Sanon opens up about working with Dhanush in Tere Ishk Mein

 *”I think together we have created some magical moments”: Kriti Sanon opens up about working with Dhanush in Tere Ishk Mein* _Tere Ishk Mei...

Sunday, 21 March 2021

நடிகர் விதார்த் நடிக்கும் 25 வது

நடிகர் விதார்த் நடிக்கும் 25 வது படத்திற்கு, இசையமைக்கிறார் சாம் CS !


இயக்குநர் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் விதார்த் நடிப்பில் திரில்லர் படமாக உருவாகிவரும் புதிய படத்தில் இசையமைக்க,  பிரபல இசையமைப்பாளர் சாம் CS ஒப்பந்தமாகியுள்ளார்.




விதார்த் நடிக்கும் 25 வது படம் புதுவிதமான ஐடியாவுடன், மாறுபட்ட களத்தில், மிகப்புதுமையான முறையில் உருவாகிறது. மிக அழுத்தமான கதை கொண்ட இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில், படத்தில் பாடல்கள் மாண்டேஜாக மட்டுமே வருகிறது. மேலும் படத்திற்கு பின்னணி இசை மிக முக்கியம் என்பதால், படத்திற்கு மிக சரியான இசையமைப்பாளரை படக்குழு தேடி வந்தது. தற்போது இறுதியாக, தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது உலகளவில் பின்னணி இசையில் பெரும் புகழ் பெற்று, கலக்கி வரும் இளம் திறமையாளர் சாம் CS இப்படத்திற்கு, இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இயக்குநர் சீனிவாசனின் வித்தியாசமான அணுகுமுறை கொண்ட திரைக்கதைக்கு சாம் CS இசை மிகப்பொருத்தமாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தருவதாக இருக்குமென படக்குழு கருதுகிறது.


இப்படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ் ( ஒண்டிகட்ட படப்புகழ் ), பாவ்லின் ஜெஷிகா ( வாய்தா படப்புகழ் ) மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர் மற்றும் பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஜெயச்சந்திரன் BFA கலை  இயக்கம் செய்ய, பிரவீன் K L எடிட்டிங் செய்துள்ளார்.  கனல் கண்ணன் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்ற, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

Benchmark Films சார்பில் ஜோதி முருகன் மற்றும் சீனிவாசன் இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது.

No comments:

Post a Comment