Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Thursday, 1 May 2025

Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி

 *Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா மற்றும் கஞ்சா கருப்பு நடிப்பில், அருமையான காதல் கதையாக, என் காதலே திரைப்படம்...மே 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.*









திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும், தனது முதல் படமாக  இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி.  இது அவரது முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு பழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில்  ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. 


லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வருகிறார் நாயகி லியா. மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது அவருக்கு காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு அவரது மாமன் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டி  அவர்கள் காதல் நிறைவேறியதா?, காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது தான் இப்படத்தின் கதை. 


கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்த லிங்கேஷ்,  இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை லியா நாயகியாக நடித்துள்ளார். இது தமிழில் இவருக்கு முதல் திரைப்படம்... இருந்தாலும் தனது ஆர்வத்தினால் அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார் லியா....நடிகை திவ்யா இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். அறிமுக நடிகர்  காட்பாடி ராஜன் வில்லனாக நடித்துள்ளார்.இவருக்கும் இது முதல் திரைப்படம் இருந்தாலும் திரையில் நிஜ வில்லனாக மிரட்டியுள்ளார்.. திரைத்துறையில் இவருக்கு அதிக வாய்ப்பு காத்துகொண்டிருக்கிறது..  இவர்களுடன் மதுசூதனன், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக  முடிந்த நிலையில்..இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரைலர் வெளியாகி  ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது...தமிழகம் முழுவதும் மே 9 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது...


தொழில் நுட்ப குழு விபரம் 


தயாரிப்பு - Sky wanders Entertainment


தயாரிப்பாளர் - ஜெயலட்சுமி


நிர்வாக தயாரிப்பாளர் - காட்பாடி ராஜன்


எழுத்து, இயக்கம் - ஜெயலட்சுமி 


ஒளிப்பதிவு - மூடர்கூடம் புகழ் டோனி ஜான்


இசை - சாண்டி சாண்டெல்லோ


எடிட்டிங் - தனி ஒருவன் படப்புகழ் கோபி கிருஷ்ணா 


பாடல்கள் - கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி 


பாடியவர்கள் - ஸ்வேதா மோகன், சைந்தவி, ஶ்ரீதர் சேனா, திலீப் வர்மன் ( மலேசியா ), அனிதா ஷேக்


மக்கள் தொடர்பு - வேலு

No comments:

Post a Comment