Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Thursday, 26 June 2025

மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோக்கள் குடும்பத்திற்கும் மிகவும் ஆபத்தான வில்லன்

 *மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோக்கள் குடும்பத்திற்கும் மிகவும் ஆபத்தான வில்லன் கேலக்டஸுக்கும் இடையிலான மோதலை காண இன்னும் ஒரு மாதமே உள்ளது!*




’தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அதிரடி டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அதிரடி ஆக்‌ஷன் சினிமா அனுபவத்தை ரசிகர்கள் பெற இன்னும் ஒரு மாதமே உள்ளது. மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோ குடும்பம் vs பூமியை விழுங்கும் கேலக்டஸ் மோதல் ஜூலை 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 


1960களின் ரெட்ரோ-ஃப்யூச்சரிஸ்டிக் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தப் படம், புதிய MCU Lineup-ஐ அறிமுகப்படுத்துகிறது. ரீட் ரிச்சர்ட்ஸ்/ மிஸ்டர் ஃபென்டாஸ்டிக் ஆக பெட்ரோ பாஸ்கல், சூ ஸ்டார்ம்/ இன்விசிபிள் வுமனாக வனேசா கிர்பி, ஜானி ஸ்டார்ம்/ ஹ்யூமன் டார்ச்சாக ஜோசப் க்வின் மற்றும் பென் கிரிம்/ தி திங் ஆக எபோன் மோஸ்-பக்ராச் ஆகியோர் நடித்துள்ளார். சரி, இவர்களின் நோக்கம் என்ன?


பூமியை விழுங்கத் துடிக்கும் வலுவான சக்தியான கேலக்டஸ் (ரால்ப் இனேசன்), சக்திவாய்ந்த ஹெரால்ட் சில்வர் சர்ஃபர் (ஜூலியா கார்னர்) உடன் மோதுகிறார். ஆனால் பூமியை காப்பாற்றுவது மட்டுமே அவர் முன்னிருக்கும் சவால் இல்லை. ஒரு குடும்பமாக அவர்களின் பிணைப்பை அப்படியே வைத்திருப்பதும் கடினம். இந்த அதிரடி சாகசத்தில் பால் வால்டர் ஹவுசர், ஜான் மால்கோவிச், நடாஷா லியோன் மற்றும் சாரா நைல்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். ’தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தை மேட் ஷக்மேன் இயக்கியுள்ளார். கெவின் ஃபைஜ் தயாரித்துள்ளார் மற்றும் நிர்வாகத் தயாரிப்பாளராக லூயிஸ் டி'எஸ்போசிட்டோ, கிராண்ட் கர்டிஸ் மற்றும் டிம் லூயிஸ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


’தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ ஜூலை 25 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது!


English Trailer:

https://youtu.be/H1nHU-Wu8kg?si=hWDVhWwBEBlRvPqs


Hindi Trailer: https://youtu.be/OCh0Xabsg4w?si=aLnpDyDTqQDPPsz3


Tamil Trailer: https://youtu.be/aPxWaryd35o?si=96w-m8j7D8NyFf4N


Telugu Trailer: https://youtu.be/I5nPE2eHMnE

No comments:

Post a Comment