Guts Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம guts படத்தோட review அ தான் பாக்க போறோம். rangaraj தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இந்த படத்துல rangaraj , delhiganesh , shruthi narayanan , saidheena , birla bose னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் 13 june அன்னிக்கு release ஆயிருக்கு. இந்த படம் ஒரு social thriller னே சொல்லலாம். சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். படத்தோட opening scene ல பாத்தீங்கன்னா rangaraj ரொம்ப urgent அ தன்னோட pregnant ஆனா wife அ hospital ல admit பண்ணுறாரு. திடீருனு இவரை யாரோ வந்து தாக்குறாங்க இதுனால இவருக்கு பலத்த காயம் ஏற்படுது அதோட இவரோட wife யும் இந்த trauma னால இறந்து போய்டுறாரு. இவங்களுக்கு ஒரு பையன் இருப்பான். சின்ன வயசுலயே தன்னோட parents அ கொடூரமா இழந்தனால தப்ப தட்டி கேடுக்குற police அ மாறனும் னு முடிவு பண்ணுறாரு. அதே மாதிரி police ஆவும் மாறிடுறாரு, இதுக்கு அப்புறம் தான் தன்னோட parents ஓட மரணத்துக்கு பின்னாடி ஒளிஞ்சு இருக்கற மர்மத்தை கண்டுபிடிக்குறாரு. கதை போக போக நம்ம சமூகத்துல நடக்கற பல பிரச்சனைகளை எடுத்து சொல்லிருக்காங்க.
rangaraj ஒரு director ஆவும் actor ஆவும் நல்ல பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். flashback மூலமா காமிச்சிருக்க emotional sequences அ இருக்கட்டும் அதோட reality ல நடக்கற விஷயங்களை காமிக்க்ர விதமா இருக்கட்டும் எல்லாமே அழகா இருந்தது. shruthi narayanan ஓட நடிப்பும் ரொம்ப எதார்த்தமா இருந்தது. delhi ganesh அவரோட role குட்டிய இருந்தாலும் படத்துல ஒரு பெரிய impact அ குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். supporting actors அ நடிச்ச Sai Deena, Nancy, Aranthangi Nisha, அப்புறம் Birla Bose யும் அவங்க character அ புரிஞ்சுகிட்டு அருமையா நடிச்சிருக்காங்க.
இந்த படத்தோட technical side னு பாக்கும் போது rangaraj ஓட direction அ பத்தி சொல்லியே ஆகணும். audience க்கு பிடிச்ச மாதிரி ஒரு கதையை குடுக்கணும் றதயும் தாண்டி மக்களை யோசிக்க வைக்கிற மாதிரியும் அமைச்சிருக்கு னு தான் சொல்லி ஆகணும். audience அவங்க வாழ்க்கையோட relate பண்ணிக்கற மாதிரியான நெறய moments அ படத்துல குடுத்திருக்காங்க. சுற்றுசூழலுக்கு ஏற்படுற ஆபத்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்படுற அநீதி, னு எல்லாமே சொல்லிருக்காங்க. manoj தான் இந்த படத்துக்கு cinematography பண்ணிருக்காரு. படத்துல வர locations , characters , அவங்களோட emotions னு எல்லாமே ரொம்ப அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. Jose Franklin ஓட music and bgm இது ரெண்டுமே இந்த படத்தோட கதைக்கு நல்ல பொருந்தி இருந்தது.
personal அ நடந்த ஒரு விஷயம் கடைசில எப்படி social level ல பெருசா மாறுது ன்றது தான் இந்த படத்தோட கரு னு சொல்லலாம். ஒரு பக்கம் characters ஓட emotions இன்னொரு பக்கம் social awareness னு ரெண்டு side யுமே super அ balance பண்ண விதம் நல்ல இருந்தது. ஒரு நல்ல கதைக்களம் தான் இது. கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment