Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Monday, 23 June 2025

டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தினை விளம்பரப்படுத்த ZEE5 நடத்திய “கோஸ்ட் ஆன் வீல்ஸ்”

 *"டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தினை விளம்பரப்படுத்த ZEE5 நடத்திய “கோஸ்ட் ஆன் வீல்ஸ்”  சிறப்பு புரமோ நிகழ்ச்சி !!*





*பேய் உலாவும் பஸ் மூலம்  "டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தை விளம்பரப்படுத்திய ZEE5 !!*


*வித்தியாசமான புரமோ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ZEE5 !!*

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும்  Zee5 தளத்தில்,  சமீபத்தில் வெளியான "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படம்,  ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களைக் கவரும் விதத்திலும், "டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தின் பேய் தீமை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான புரமோ நிகழ்ச்சியை நடத்தியுள்ளது Zee5. 


சந்தானம் நடிப்பில் "டிடி நெக்ஸ்ட் லெவல்" படம்   Zee5 தளத்தில் வெளியான வேகத்தில், 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை மேலும் மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில், Zee5 ஒரு பஸ்ஸில் படத்தின் தீமை மையமாக வைத்து,  படத்தின் போஸ்டர்களுடன் படத்தின் கருவை மையமாகக் கொண்ட செட் அமைக்கப்பட்டு, அதில் பேய் வேடமிட்ட ஒருவர் உலாவும் வகையில் உருவாக்கி, சென்னை முழுக்க  மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறது. 


முதல் முறையாக இந்த பஸ் மக்கள் அதிகம் புழங்கும், கிண்டி சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 


ரசிகர்களும், பொதுமக்களும் படத்தின் தீமில் வடிவமைக்கப்பட்ட பஸ்ஸை பார்த்து,  ஆச்சரியத்தில் மூழ்கினர். பஸ்ஸை பார்வையிட்டு மகிழ்ந்தனர். 


இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் கூறியதாவது… 

எங்களுடைய "டிடி நெக்ஸ்ட் லெவல்"  படம்,  Zee5 மூலம் உலகளவில் பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.  இப்படம்  வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்துள்ளது மகிழ்ச்சி. எங்கள் படத்தை இன்னும் பிரபலப்படுத்தும் வகையில்,  Zee5 முன்னெடுத்துள்ள இந்த வித்தியாசமான புரமோசன் நிகழ்ச்சி, பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த பஸ்ஸின் வடிவமைப்பை, பார்த்து மிகுந்த ஆச்சரியப்பட்டேன். இந்நேரத்தில் எங்கள் படக்குழுவினருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும் Zee5 நிறுவனத்திற்கும் என் நன்றி.  படத்திற்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. 


இறந்துபோன  திரைப்பட இயக்குநர்  ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட  திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படித் தப்பி வெளியில் வருகிறான்?  என்பது தான் இப்படத்தின் கதை.  நடிகர் சந்தானம், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி நடித்துள்ள இந்தப்படம், ஜூன் மாதத்தின் மிகவும் பேசப்படும் ஓடிடி ரிலீஸாக மாறியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆர்யா தனது  The Show People நிறுவனம் சார்பில், இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் S. பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


 ZEE5 இல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இப்படத்தைக் கண்டுகளிக்கலாம் !

No comments:

Post a Comment