Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Thursday, 26 June 2025

Thirukural Movie Review

 Thirukkural Tamil Movie review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம திருக்குறள் படத்தோட review அ தான் பாக்க போறோம். AJ Balakrishnan தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. Ramana Communications இந்த படத்தை தயாரிச்சிருக்காங்க. Kalai Chozhan, Danalakshmi, Guna Babu, Padini Kumar, Chandru, Suganya, OAK Sundar, Subramaniya Siva, Kottachi, Aravind Aandavar, னு நெறய பேர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. படத்தோட டைட்டில் திருக்குறள், திருக்குறள் ந என்னனு நம்ம எல்லாருக்கும் தெரியும். இந்த திருக்குறள் அ பத்தியும் திருவள்ளுவர் அ பத்தியும் தான் இந்த படத்துல கதையா கொண்டுவந்திருக்காங்க. 



வள்ளுவநாடு ன்ற ஒரு இடத்தை காமிக்கறாங்க. அங்க தான் திருவள்ளுவர் வாழ்ந்துட்டு இருக்காரு. இவரு அங்க இருக்கற பசங்களுக்கு தமிழ் அ சொல்லி கொடுப்பாரு. அது மட்டுமில்லாம நற் குணங்களை சொல்லி குடுக்கறமாதிரி ஒண்ணே முக்கால் அடிக்கு திருக்குறள் அ எழுதி அதா ஒரு book அ வெளியிடனும்  ன்ற வேலைல மூழ்கி போய் இருக்காரு. இவரோட இந்த வேலைக்கு ரொம்ப helpful அ இருக்கிறது இவரோட மனைவி vasuki தான். இதுல ஒரு சில செய்யுள் அ மட்டும் approval  வாங்குறதுக்காக மதுரை தமிழ் சங்கத்துக்கு எடுத்துட்டு போறாரு  ஆனா அந்த சங்கத்தோட விதிகளுக்கு இந்த செய்யுள் இல்லாதனால இந்த திருக்குறள் அ நிராகரிச்சுடறாங்க. இருந்தாலும் திருவள்ளுவர் இதை பத்தி கவலைப்படாம இந்த செய்யுள் மக்களோட நன்மைக்காக தான் இதை எழுதி முடிக்கறதுல இன்னும் தீவிரமா எறங்குறாரு. 


இப்போ இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா நாடுகளுக்கு இடையே போர் நடக்குது இதுனால நல்ல ராஜாக்கள் எல்லாமே எதிர்பாராதவிதமா தோத்து போயிடுறாங்க. இவங்க இடத்துக்கு வந்த கெட்ட ராஜாக்கள் நாட்டை control  பன்றாங்க, அதோட மக்களையும் இவங்களோட ஆட்சி ல ரொம்பவே கஷ்டப்படுறாங்க. இதை பத்தி மக்கள் திருவள்ளுவர் கிட்ட போய் சொல்லறாங்க. திருவள்ளுவர் க்கு சண்டை போர் இதெல்லாம் பிடிக்காது. அதுனால கெட்ட அரசர்களை வீழ்த்தி ஒரு நல்ல ராஜாவை அரியனைல உட்காரவைக்கணும் னு திருவள்ளுவர் அதுக்கான  வேலை செய்ய ஆரம்பிக்குறாரு.  ஒரு பக்கம் திருக்குறள் அ முடிக்கிறது இன்னொரு பக்கம் மக்களுக்கு help பண்றது னு ரெண்டு விஷயங்களை பண்ணுறாரு. இந்த ரெண்டு வேலைலயும் இவரு ஜெயிச்சாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்தோட hightlight ஏ thiruvalluvar அ நடிச்சிருக்க kalaichozhan தான். இவரோட performance அவ்ளோ நேர்த்தி யா இருந்தது. thirukkural ஒரு முறையான செய்யுல் கிடையாது னு வாதம் பண்ணறவங்களுக்கு எதிரா இவரு தொடுத்து வழுங்குற பதில் அ இருக்கட்டும், போர் ல ஈடுபற்றுக்க வீர்களா motivate பண்றத இருக்கட்டும், ஒரு teacher அ இவரு மாணவர்களுக்கு சொல்லி குடுக்கற விதம் னு ஒரு அழகான நடிப்பை வெளி படுத்திருக்காரு. தனலட்சுமி தான் வாசுகி அ நடிச்சிருக்காங்க. இவங்களோட character அ புரிஞ்சுகிட்டு ஒரு எதார்த்தமான நடிப்பை வெளி படுத்தி இருக்காங்க. 


இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது இளையராஜா. சங்ககாலத்துக்கு ஏத்த மாதிரி இசை அமைச்சிருக்கறது நல்ல இருந்தது. bgm அ இருக்கட்டும் songs அ இருக்கட்டும் ரெண்டுமே இந்த படத்தோட கதைக்கு அவ்ளோ சிறப்பா பொருந்தி இருந்தது னு சொல்லலாம். அடுத்து edwin sagai ஓட cinematography அந்த கிராமத்தோட அழகையும், பச்சை பசேல் னு இருக்கற கிராமம், நீர்நிலைகள் னு எல்லாமே ரொம்ப அழகா camera  ல பதிவு பண்ணிருக்காரு. art  direction  அ இருக்கட்டும் costume designing  அ இருக்கட்டும் இது எல்லாமே பக்கவா இருந்தது. இந்த படத்துக்கு கதை எழுதினது செம்பூர்.கே. ஜெயராஜன் . திருக்குறள் எந்த மாதிரியான ஒரு சூழல் ல எழுத பட்டது, திருவள்ளுவர் ஓட வாழக்கை  ல நடந்த சம்பவங்கள் னு எல்லாமே இந்த படத்துல சொல்லிருக்காங்க. 


மொத்தத்துல நம்ம தமிழுக்கு பெருமை சேத்த  திருவள்ளுவரையும் திருக்குறளையும் பத்தின ஒரு அற்புதமான படைப்பு தான் இந்த திருக்குறள் படம். கண்டிப்பா எல்லாரும் பாக்க வேண்டிய படம் தான். அதுனால இந்த படத்தை miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment