Featured post

Classes Start in Maakipur, but the Questions are Out of Syllabus;

 Classes Start in Maakipur, but the Questions are Out of Syllabus;  Super Subbu on Netflix from 2 July Good morning, students! Vinnara news?...

Thursday, 5 June 2025

Madras Matinee Tamil Movie Review

Madras Matinee Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம madras talkies ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். Karthikeyan Mani direct பண்ணிருக்கற இந்த படத்துல Kaali Venkat , Roshini Haripriyan , Shelly, Vishva, Sunil Sukhada, George Maryan, and Sathyaraj. இந்த படம் june 6 ஆம் தேதி தான் ரிலீஸ் ஆக போது. ஆனா நெறய celebraties இந்த படத்தை புகழ்ந்து பேசிட்டு இருக்காங்க. சென்னை ல வசிக்கிற ஒரு சாதாரண lower middle class family ஓட கதையை தான் இந்த படத்துல சொல்லிருக்காங்க. அவங்க தினசரி வாழக்கை ல சந்திக்கிற விஷயங்கள், துக்கம், சந்தோஷம் னு எல்லாத்தயும் அழகா காமிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



கண்ணன் அ நடிச்சிருக்க காளி வெங்கட் ஒரு ஆட்டோ driver அ இருக்காரு. தன்னோட குடும்பத்துக்காக ரொம்பவே கஷ்டப்பட்டு உழைக்குறாரு. shelly தான் இவருக்கு wife அ இருக்காங்க. இவங்களுக்கு vishva அப்புறம் roshini haripriyan னு ரெண்டு பசங்க இருப்பாங்க. இன்னொரு பக்கம் ரெண்டாவுது கதை ஒன்னு ஓடுது. ஒரு வயசான science fiction எழுத்தாளர் ஓட கதையை காமிக்கிறாங்க. இந்த மாதிரி fantasy stories அ எழுதுறத விட்டுட்டு real life ல நடக்கற கதையை எழுதணும் னு இவரு முடிவு பண்ணுறாரு. இதுக்கு காரணம் இவரை பத்திரமா பாத்துக்கறதுக்கு ஒரு caretaker இருப்பாங்க. இவங்க தான் இந்த writer க்கு இந்த idea வை குடுத்திருப்பாங்க. இவரு தான் kannan ஓட story அ சொல்லுறாரு. அதாவுது கதைக்குள்ள கதை னு சொல்லலாம். கண்ணன் ஓட வாழக்கை குள்ள  எவ்ளோ complications இருக்கும் ன்றதா இந்த எழுத்தாளர் ரொம்ப அழுத்தமா சொல்லுறாரு. அவரை பொறுத்த வரையும் science fiction னால ஏற்படுத்த கூடிய தாக்கத்தை விட realisitic கதைகளுக்கு உண்டு ன்ற ஒரு விஷயத்தை வெளிப்படுத்துறாரு. 


இந்த படத்தோட ஒரு முக்கியமான விஷயம் என்னனா honest அ ஒரு family படுற கஷ்டத்தை audience க்கு எடுத்து சொல்ற விதம் தான். தினசரி வாழக்கை ல நம்ம என்னனா விஷயங்களை face பண்ணறோம்னு ன்றதா அப்படியே சொல்லிருக்காங்க னு சொல்லலாம். இதுல வர characters அ இருக்கட்டும் இல்லனா situations அ இருக்கட்டும் இது எல்லாத்தயும் நம்மள relate பண்ணிக்க முடியும். அதுனால இந்த படத்தோட தாக்கம் படம் முடிச்சதுக்கு அப்புறம் கூட நம்ம மனசுல ஓடிட்டு இருக்கும் னு சொல்லலாம். என்னதான் நெறய கஷ்டம் இல்ல துக்கம் வந்தாலும் அப்போ அப்போ வர சின்ன சந்தோஷம், நிம்மதி எல்லாமே ஒரு வாழக்கை ஓட அங்கம் தான். அதுவும் ஒரு அழகு னு இந்த படத்துல காமிச்சிருக்காங்க னு சொல்லலாம். 


இந்த படத்தோட technical side னு பாக்கும் போது Anand G.K ஓட cinematography அற்புதமா  இருந்தது. சென்னை ஓட அழகு, நடுத்தர மக்கள் ஓட வாழக்கை, situations , characters ஓட emotions , னு எல்லாமே ரொம்ப அழகா camera ல பதிவு பண்ணிருக்காங்க. இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது K.C. Balasarangan . இவரோட bgm , music எல்லாமே super அ இந்த கதைக்கு ஒத்து போச்சு. Editor Satheesh Kumar Samuski படத்துக்கு அழகா edit பண்ணிருக்காரு. 


மொத்தத்துல family ஓட தினசரி experience அ சொல்ற அழகான கதைக்களம் தான் இந்த madras matinee . கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment