Featured post

When love travelled through letters and lived on cassettes

 *When love travelled through letters and lived on cassettes* _Habeebi to Premiere on 25th September on Sony LIV_ Before messages to loved o...

Monday, 25 May 2026

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி....

 பத்திரிகை செய்தி


 மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி....


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அளித்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து,  தற்போதைய தமிழ் சினிமா சூழ்நிலையை நன்கு புரிந்துகொண்ட மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், புதியதாக வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் முதல் 7 நாட்கள் திரையரங்குகளில் ஐந்து காட்சிகள் திரையிடலாம் என்றும், மேலும் உள்ளூர் பண்டிகை காலங்களில் மற்றும்  பொது விடுமுறை நாட்களில் 5 காட்சிகள் திரையிடலாம் என்ற அனுமதி  அளித்துள்ளது திரையுலகினரிடையே மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி அறிவிப்பு நல்ல திரைப்படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்களிடம் உத்வேகம்  அளித்துள்ளது.  இந்த அறிவிப்பினை அளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், இந்த அறிவிப்பினை வெளியிட உறுதுணையாக இருந்த மாண்புமிகு செய்திதுறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

No comments:

Post a Comment