Featured post

I Nobody Movie Review

 I Nobody  Tamil  Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம I nobody படத்தோட review அ தான் பாக்க போறோம்.  படத்தோட ஆரம்பத்துல rajeevan  அ நடிச...

Friday, 10 July 2026

I Nobody Movie Review

 I Nobody  Tamil  Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம I nobody படத்தோட review அ தான் பாக்க போறோம்.  படத்தோட ஆரம்பத்துல rajeevan  அ நடிச்சிருக்க prithiviraj , police officers முன்னாடி உட்காந்து கிட்டு இருக்காரு. அந்த officer  இவருகிட்ட food chain அ பத்தி explain பண்ணிட்டு இருக்காரு. அதாவுது grasshopper -grass சாப்பிடும், ஆனா தவளை -grasshopper அ சாப்பிடும், அப்புறம் பாம்பு அந்த தவளையை சாப்பிடும், அப்புறம் அந்த பம்பா கழுகு சாப்பிடும். ஆனா இந்த பயங்கரமான society ல வாழனும் ந grasshopper க்கு வேற வழியே இல்ல, வாழனும் னு நினைச்ச அந்த தவளையை சாப்பிட்டு தான் ஆகணும். என்னதான் இந்த intro ரொம்ப சாதாரணமா தெரிஞ்சாலும், இதுக்கு அப்பரும் ஒரு பெரிய கதையே இருக்கு. 



rajeevan ஒரு government officer அ இருக்காரு. இவருக்கு wife அ இருக்கிறது meera அப்புறம் ரெண்டு கொழந்தைகளும் இருக்கு. இவரோட வேலை ரொம்ப சாதரணமானது. ஆனா பாக்ககூடாத ஒரு விஷயத்தை இவரு பாத்துடுறாரு. இதுல இருந்து ஒரு பெரிய crime ல போய் மாட்டிக்குறாரு. இந்த situation என்னனு முழுசா புரிஞ்சுக்காம கஷ்டப்படுறாரு rajeevan . கடைசில இந்த பிரச்சனை ல இருந்து தப்பிக்கிறதுக்கு இவரே தான் களம் எறங்குற மாதிரி இருக்கு. இவரு நம்புனா ஆட்கள் எல்லாருமே இவரோட முதுகுல குத்திடுறாங்க. யாருமே நம்பாம rajeevan எப்படி survive பண்ண போறாரு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. sameer abdul od screenplay topnotch ல இருந்தது னு தான் சொல்லணும். 


prithiviraj ஓட performance ரொம்ப calm ஆவும் controlled ஆவும் இருந்தது. ஒரு சாதாரண  government employee , ஒரு பிரச்சனைல மாட்டிக்கிட்ட எப்படி நடந்துப்பாங்களோ அந்த மாதிரி தான் இவரு நடிச்சிருக்காரு. hero மாதிரி இல்லாம ஒரு common person அ இருக்காரு. அதுக்கு அப்புறம் strong ஆகி survive ஆகா try பண்ணுறாரு. இந்த transition ரொம்ப நல்ல இருந்தது. parvathy தான் meera வ நடிச்சிருக்காங்க. இவங்க கொழந்தைகளுக்கு அம்மாவும், ஒரு நல்ல wife ஆவும் நடிச்சிருக்காங்க. இவங்களோட acting subtle ஆவும் emotional ஆவும் இருந்தது. இவங்க ரெண்டு பேரோட chemistry யும் நல்ல இருந்தது. ஆனா இவங்களுக்கு இன்னுமே scenes add பன்னிருந்த இன்னுமே நல்ல இருந்திருக்கும். படத்தோட scenes எல்லாமே கொஞ்சம் slow அ போன மாதிரி தான் இருந்தது. mystery , suspense எல்லாமே அட்டகாசமா இருந்தது இருந்தாலும் கதை இன்னும் கொஞ்சம் fast அ எடுத்துட்டு போயிருந்த இன்னுமே நல்ல இருந்திருக்கும். 


படத்தோட technical aspects னு பாக்கும்போது Dinesh Purushothaman' ஓட  cinematography தான் இந்த படத்தோட highlight அ இருக்கு. camera angle , framing , colours னு எல்லாமே இந்த கதைக்கு perfect அ இருக்கு. Nixon George'ஓட  sound design suspense scenes க்கு perfect அ set யிருந்தது. Yannick Ben, Kalai Kingson, அ ப்புறும்  Amith Jolly Bastin cherograph பண்ண action scenes எல்லாமே realistic அ இருந்தது. அந்த scenes எல்லாமே logical ஆவும் இருந்தது. Jakes Bejoy'ஓட  background music ஒரு strong ஆனா impression அ இந்த படத்துக்கு குடுத்திருக்கு. 


ஒரு நல்ல thrilling ஆனா படம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை போய் theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment