Featured post

AJAY KARTHI AND DEEPA BALU STARRER ‘STATION’ IS A LOVE-CRIME-ACTION THRILLER SET OVER A SINGLE NIGHT.

AJAY KARTHI AND DEEPA BALU STARRER ‘STATION’ IS A LOVE-CRIME-ACTION THRILLER SET OVER A SINGLE NIGHT.  KP infotainment K. Dinesh Kumar Prese...

Saturday, 14 November 2026

4 கதாநாயகர்கள் 6 கதாநாயகிகள் என கலகலப்பாக தயாராகி வரும் திரைப்படத்தின் பாடல் பணிகள் நிறைவு*


*4 கதாநாயகர்கள் 6 கதாநாயகிகள் என கலகலப்பாக தயாராகி வரும் திரைப்படத்தின் பாடல் பணிகள் நிறைவு*



18 ஸ்டெப்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பாக பிரியங்கா நாராயணன் தயாரிப்பில் பிக்பாஸ் பிரபலம் ராணவ், சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக பிரபலமான மக்களின் மனோஜ் ஸ்ரீதேவா, சீயானே வினோத், ஹர்ஷித் ரெட்டி நான்கு பேரும் கதாநாயகர்களாக நன்பர்களாக வாழும் நட்பின் தனி அடையாளமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது. டகால்டி படத்தின் நாயகி ரித்திகா சென், சபாபதி படத்தின் நாயகி பீரீத்திவர்மா, பாலிவுட் மாடல் இஷாத்தா சிங், 

இயக்குநர் பான்டியராஜன், கஜராஜ், தயாரிப்பாளர் மூர்த்தி, பரிவு சக்திவேல், ஊமைவிழிகள் அரவிந்ராஜ், ஆர்யன், அனுபாமா குமார், ரஞ்சனா நாச்சியார், காயத்திரி, ஹாரிஸ் மூசா, மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் சகோதரி மகன் அஸ்கர் சவுதன், சேரன்ராஜ், ஜாஷ் பாலா இன்னும் பல நட்சத்திரங்கள் என நட்சத்திர பட்டாளங்களை வைத்து நட்பு, காதல், ஆக்ஷன்,சென்டிமெண்ட், எமோஷன் என அனைத்தும் கலந்த அனைத்து தரப்பு மக்களையும் என்டர்டெய்ன்மென்ட் செய்ய ஏற்ற ஒரு புதிய திரைப்படம்  படப்பிடிப்பு தொடங்கி வெற்றிகரமாக நடைப்பெற்று வருகிறது. இத்திரைப்படத்தை எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட கல்லூரி மாணவர் இயக்குர் ஸ்ரீ தன்னுடைய இரண்டாவது படமாக இயக்குகிறார் (இவரின் முதல் படமான  சந்தோஷ்பிரதாப் நடிப்பில் தயாராகி விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்க்கது) படத்திற்கு எடிட்டர் ஆக தேசிய விருது பெற்ற கேப்டன்மில்லர் திரைப்படத்தின் எடிட்டர் நாகூரான் ராமசந்திரன், தேசிய விருது பெற்ற ஜிகர்தன்டா ,சூது கவ்வும், ஓநாய் ஆட்டுக்குட்டி போன்ற வெற்றிப் பெற்ற படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநர் பில்லா ஜெகன், சண்டைக் காட்சிகளை மிகவும் வித்தியாசமான வடிவமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற RRR திரைப்படத்தின் பணியாற்றிய நடன இயக்குநர் ஹரிகிரன், கேமராமேன் பிரன்டன் சுஷாந்த், என மிகப்பெரிய பட்டாளத்துடனும், 

பேட்ட, பீஸ்ட், ரெமோ, பட்டாஸ், டோரா, டக்கர் போன்ற பல வெற்றி படங்களில் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் கு.கார்த்திக் இப்படத்தில் பாடல்கள், வசனம், திரைக்கதை என 80'ஸ் முதல் ஜென்சி தலைமுறை வரை ரசிக்க கூடிய வகையில் எழுதியுள்ளார்.  போடா போடி படம் முதல் காக்கும் கடவுள் வரை பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்த தரன்குமார் இசையில் முன்னனி பாடகர்களான ஆதித்யா ஆர்கே, சாம்விஷால், விவசாயிமகன் ராவணா ராம் பாடி படத்தின் பாடல் பணிகளும் முடிந்து விட்டது. மக்கள் தொடர்பு கேப்டன் ஆனந்த். தற்போது இத்திரைப்படத்தின் முதல் போஸ்டர் மற்றும் ஒரு பாடலையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உண்மையான 

நட்புக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு நண்பணும் மறந்த தன் நண்பனை நினைப்பான் இந்தத் திரைப்படம் ரசிகர்களின் மனதில் நிச்சயம் ஒரு தனி இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

No comments:

Post a Comment