Featured post

AJAY KARTHI AND DEEPA BALU STARRER ‘STATION’ IS A LOVE-CRIME-ACTION THRILLER SET OVER A SINGLE NIGHT.

AJAY KARTHI AND DEEPA BALU STARRER ‘STATION’ IS A LOVE-CRIME-ACTION THRILLER SET OVER A SINGLE NIGHT.  KP infotainment K. Dinesh Kumar Prese...

Tuesday, 10 November 2026

அரிகொம்பன்’ வெற்றி பெற திருச்செந்தூர் முருகன் கோயிலில் இயக்குநர் மிதுன் மகேஸ்வரன் வழிபாடு!

 ‘அரிகொம்பன்’ வெற்றி பெற திருச்செந்தூர் முருகன் கோயிலில் இயக்குநர் மிதுன் மகேஸ்வரன் வழிபாடு!






இயக்குநர் மிதுன் மகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இயக்குநர் மிதுன் மகேஸ்வரன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று சிறப்புத் தரிசனம் மேற்கொண்டார்.


இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களின் பேராதரவையும் அன்பையும் பெற வேண்டும் என்று அவர் முருகப்பெருமானிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்.


இது குறித்து இயக்குநர் மிதுன் மகேஸ்வரன் கூறுகையில்: முருகப்பெருமானின் அருள் நிறைந்த திருச்செந்தூர் மண்ணில் தரிசனம் செய்து பிரார்த்தித்தது எனக்குப் பெருநம்பிக்கையையும் பேரமைதியையும் தந்துள்ளது. 


வரும் டிசம்பர் 11 முதல் திரையரங்குகளில் 'அரிகொம்பன்' உங்கள் அனைவரையும் மகிழ்விக்க வருகிறது. ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு என்றும் தேவை," எனத் தெரிவித்துள்ளார்.


இயற்கை, மனிதன் மற்றும் விலங்குகளுக்கு இடையேயான உணர்ச்சிப் போராட்டத்தைப் பேசும் ‘அரிகொம்பன்’ திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய திரையனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment