Featured post

Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message

 *’Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message*   Tamil cine...

Showing posts with label hero vimal. Show all posts
Showing posts with label hero vimal. Show all posts

Tuesday, 13 August 2019

நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் - வரலட்சுமி சரத்குமார் அதிரடி







விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, ‘கன்னிராசி படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார். இது போன்ற படங்களை இயக்குநர் முத்துக்குமரன் நிறைய தர வேண்டும். விருது வாங்கும் அளவிற்கு படங்கள் எல்லாம் தேவையில்லை. ஏன் என்றால் நாம் எப்படி எடுத்தாலும் விருது கிடைக்காது. 5 வருடம் இதுதான் நிலைமை. இப்படத்தில் இயக்குநர் ஒரு அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதாவது காதலித்து தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கருத்தைச் சொல்லிருக்கிறார்" என்றார்.

ரோபோ சங்கர் பேசும்போது, ‘தயாரிப்பாளர் எங்களுக்கு மிகவும் பிடித்த இடத்தில் சூட்டிங் வைத்து வாரவாரம் பிரியாணி போட்டார். அவருக்கும் மிகவும் நன்றி. இயக்குநர் மிக கூலான மனிதர். காலையில் 11 மணிக்குத் தான் எங்களை சூட்டிங் கூப்பிடுவார். வரலட்சுமி இந்தப்படத்தில் ஒரு பொண்ணாக நடித்துள்ளார். அது எப்பவாவது தான் அமையும். என் மாப்பிள்ளை விமலுக்கு இந்தப்படம் பெரிய வெற்றிகரமாக அமையும்" என்றார்.

இயக்குநர் முத்துக்குமரன் பேசும்போது, ‘இந்தப்படம் தான் எனக்கு முதல் படம். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் சூப்பராக வொர்க் பண்ணிக் கொடுத்தார். அடுத்தப்படத்திலும் அவரோடு இணைவேன். மேலும் எடிட்டிர் ராஜா முகமது, ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பாடலாசிரியர் யுகபாரதி அண்ணனுக்கும் நன்றி. பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் இந்தப்படம் வெளிவர இருக்கிறது. யோகிபாபு, ரோபோ சங்கர் அண்ணன் இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். வரலட்சுமி இந்தப்படத்திற்கு என்ன தேவையோ அதை நடித்துக் கொடுத்தார். எந்தச் சிரமம் இருந்தாலும் அனுசரித்து நடித்துக் கொடுத்தார். நாம் என்ன சொன்னாலும் அதைச் அப்படியே செய்யக்கூடியவர் விமல். அதுபோல் நான் இயக்குநராக ஆனதற்கு முக்கியக் காரணம் அவர்தான். விமல் இல்லையென்றால் இப்படம் உருவாகி இருக்காது’ என்றார்.


வரலட்சுமி பேசும்போது, ‘பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்’ என்றார்.

விமல் பேசும்போது, ‘இந்தப்படம் மிக அருமையாக வந்திருக்கு. யோகிபாபு, ரோபோசங்கர், காளிவெங்கட் எல்லோர் கூடவும் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. அதனால படம் ரொம்ப ஜாலியாக இருக்கும். இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடு தான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக கல்யாணம் செய்துவிடுவார். மேலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறேன். பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் முதல்முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன் என்று வரலட்சுமியை பற்றி கலகலப்பாக கூறினார்.

Celebrities on Stage at Kanni Rasi Press Meet | Kanni Rasi Movie 2019

Friday, 19 July 2019

விமல் நடிக்கும் "சோழ நாட்டான்"



களவாணி 2 வெற்றியை தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் விமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், "சோழ நாட்டான்" என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் பட்டுக்கோட்டை "ரஞ்சித் கண்ணா" இயக்குகிறார் ,மரகதகாடு படத்தின் ஒளிப்பதிவாளர்  "நட்சத்திர பிரகாஷ்" ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் "மணிஅமுதவன்"மற்றும் "சபரீஷ்" எழுதுகிறார்கள். ஹரிஷ் பிலிம் புரோடக்ஷன்  சார்பாக "பாரிவள்ளல்" தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் முன்னணி நாயகி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் அதை படக்குழு அறிவிக்கவுள்ளது.

Wednesday, 3 July 2019

நம்பியார், ரகுவரன் வரிசையில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்


ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று கலக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்
தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார் இப்போது துள்ளும் சிரிப்பு, உற்சாக முகம், பளபள முகம் வெள்ளை வேட்டி சட்டை என்று ஜொலிக்கிறார்.
 காரணம், சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி 2  படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். அதுபோல் வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்நிலையில், இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘களவாணி 2 படமே உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்ட கதை. சொந்த பந்தங்களே கூட பகைவராக மாறும் தேர்தல் அது. முதல் பாகத்தில் இடம்பெற்ற கதைக்களம், கதாபாத்திரங்கள் தொடர்ந்தாலும் கதை புதிதாக இருக்கும். படம் முழுக்க நகைச்சுவை இருக்கும்.


அரசியல் காமெடி கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் துரை சுதாகர் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். எந்த வேடம் இருந்தாலும் சரி மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறும் துரை சுதாகர், எழில் இயக்கும் படத்திலும் மேலும் முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.


வில்லன்களாக முத்திரை பதித்த பிரபல நடிகர்கள் நம்பியார், ரகுவரன் வரிசையில் தானும் முத்திரை பதிப்பேன் என்று கூறுகிறார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்.

Saturday, 11 May 2019

Actor Vimal had received a discussed amount from Marina Pictures



Actor Vimal had received a discussed amount from Marina Pictures Singaravelan on 13.10.2017 after signing on copyrights agreement to produce Kalavani 2 for his own production studio. However, he had created an impression by displaying to everyone that the film is being produced by director Sargunam. Marina Pictures Singaravelan who has acquired the Copyrights had given the Tamil Nadu theatrical rights to Dhanalakshmi Pictures. However, the latter opted for the legal proceedings as the Tamil Nadu rights were not given to them as promised and got the verdict of partial ban on film’s release for 6 weeks.  Actor Vimal, director Sargunam and producer Singaravelan had been listed as defendants in this case. 

At this situation, director Sargunam has approached the court saying that he has nothing to do with the agreements signed between both the parties and has requested the judiciary to remove his name from the defendants’ list. 

Based on the documents he has submitted, the court has passed the verdict that Sargunam has no objection for film’s release, but others haven’t compromised on this and that the case can be carried forward with the submission of additional documents. 

Consequently, Dhanalakshmi Pictures has now decided to appeal against this verdict at Court. It has claimed that the movie shouldn’t be released until the legal proceedings are over. In case of not going by this, the production house has decided to send notice to Screen Scene Media Entertainment, Kasthuri Films, leading satellite channel and overseas distributors that they would be held responsible for the financial compensation. 

Although, the partial ban of ‘Kalavani 2’ has been lifted, there still exists a problem over releasing the film.

Thursday, 29 November 2018

விமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும்

                                விமல் -  ஆஷ்னா சவேரி நடிக்கும்
                                        கிளாமர் ஹுயூமர் படம்
                             “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “
                                             
சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம்  “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு 

விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.  































                                                                
மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ்,ஆத்மா ஆகியோருடன்  போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.
முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவு  -    கோபி ஜெகதீஸ்வரன்
இசை           -    நடராஜன் சங்கரன்
பாடல்கள்           -    விவேகா
கலை  -    வைரபாலன் 
நடனம்  -     கந்தாஸ்
ஸ்டண்ட்   -    ரமேஷ்.
எடிட்டிங் -  தினேஷ்
தயாரிப்பு மேற்பார்வை  -    சுப்ரமணி
தயாரிப்பு நிர்வாகம் -  பி.ஆர்.ஜெயராமன்
தயாரிப்பு  -  சர்மிளா மாண்ரேஆர்.சர்வண்

திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது...

இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்..

சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்..இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும்.
கிளாமரையும், நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம் என்கிறார் AR.முகேஷ் 
அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர்...அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம்.

கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்களும் , சென்னை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்களும் நடைபெற்றது.